திருமண லக்ன பொருத்தம் பார்க்கும்பொழுது நட்சத்திர பொருத்தம் பார்த்து 10 க்கு 10 பொருத்தங்கள் இருந்தாலும், ஆண் பெண் இருவர் ஜாதகத்திலும் கட்ட பொருத்தம் ஆய்வு செய்த பின்னே பொருத்தம் செய்ய வேண்டும். இருவர் ஜாதகத்திலும் அனைத்து பாவகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக லக்ன பொருத்தம்(Lagna Porutham Tamil Matching) மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த பதிவில் திருமணத்திற்கு லக்ன பொருத்தம்(Lagna Porutham for Marriage) எப்படி பார்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
திருமணத்திற்கு லக்ன பொருத்தம் இணைப்பது எப்படி?
ஒரு ஜாதகரின் லக்கினத்தில் இயற்கை பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது இருந்தால் ஜாதகரின் குணம் அமர்ந்திருக்கும் கிரகங்களுக்கு ஏற்ப பாதிக்கப்படும். அதனால் இதே அமைப்புடைய ஜாதகத்தை இணைப்பது நல்லது. இவ்வாறு இணைக்கும்போது பிரச்சினைகள் தோன்றினாலும் இருவரும் ஒரு குணம் என்பதால் பாதிப்புகள் குறையும்.
லக்கினாதிபதி 6,8,12ஆம் இடத்தில அமர்ந்த ஜாதருக்கு வீண் விரையம், அடிக்கடி உடல் நிலை குறைபாடு ஏற்படுவது, எடுக்கும் முடிவுகளால் வருத்தம் மற்றும் பிரச்சனைகள் உண்டாகி நிம்மதியற்ற மணவாழ்க்கை உண்டாகும். இது போன்ற அமைப்பிற்கு களத்திரத்தின் ஜாதகத்தில் 7ஆம் பாவம் வலிமையுடன் இருக்கும்படி பொருத்தி அமைக்க வாழ்க்கை சிறப்பாக மாறும்.
தெரிந்துகொள்க:- ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்
பெண்ணின் லக்கினத்திற்கு ஆணின் லக்னம் 6,8,12ஆம் இடமாக அமைக்கக்கூடாது. உதாரணமாக ஆணின் லக்னம் மேஷம் எனில் பெண்ணின் லக்னம் 6ஆம் வீடான கன்னி, 8ஆம் வீடான விருச்சிகம், 12ஆம் வீடான மீனமாக பொருத்தம் செய்ய கூடாது. இதனால் தம்பதிகளிடம் குடும்ப ஒற்றுமை குறையும். இது போன்ற அமைக்காமல் இருவரின் லக்கினமும் கேந்திரம், திரிகோணமாக வரும்படி அமைக்க வேண்டும் அல்லது 3, 11ஆம் இடமாக வரும்படி அமைப்பது சிறப்பு.
அதேபோல, சர லக்கினத்திற்கு 11ஆம் இடமும் உபய லக்கினத்திற்கு 7ஆம் இடமும் பாதகத்தை உண்டாக்கும் என்பதால் இணைக்க கூடாது.
அடிப்படை ஜோதிடம் பற்றி தெரிந்துகொள்க
லக்ன பாவகம் பலமற்று உள்ள ஜாதகத்தை 7ஆம் பாவம் வலிமையுடன் உள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும்.
மகர, கும்ப லக்கினத்திற்கு கடக மற்றும் சிம்ம லக்கினத்தை இணைக்க கூடாது. சிம்ம லக்கினத்திற்கு சிம்ம லக்கினத்தை இணைக்க கூடாது.
நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!
கேள்வி பதில்கள்
ஓரே லக்கினத்தில் திருமணம் செய்யலாமா?
சிம்ம லக்கினத்தை தவிர மற்ற லக்கின ஜாதகங்கள் ஒரே லக்கினத்தில் திருமணம் செய்யலாம்.
10 முக்கிய திருமண பொருத்தங்கள் எவை?
1) தின பொருத்தம் – Dina Porutham,
2) கண பொருத்தம் – Gana Porutham,
3) மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham,
4) ஸ்த்ரீ தீர்க்கம் – Sthree Deergam,
5) யோனி பொருத்தம் – Yoni Porutham,
6) ராசி பொருத்தம் – Rasi Porutham,
7) ராசி அதிபதி பொருத்தம் – Rasi Athipathi Porutham,
8) வசிய பொருத்தம் – Vasya Porutham,
9) ரஜ்ஜு பொருத்தம் – Rajju Porutham,
10) வேதை பொருத்தம் – Vedai Porutham ஆகும்.
ஆண் லக்னம் பெண் லக்னம் எவை?
ஆண் லக்னம் – மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்
பெண் லக்னம் – ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்
Read More:-
- திருமண பொருத்தம்
- நட்சத்திர பொருத்தம்
- ராசி பொருத்தம்
- ராசி அதிபதி பொருத்தம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
- ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Video: Learn Basic Astrology in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்