கும்ப ராசி பொது பலன்கள்(Aquarius Sign in Tamil) – கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுவாக நீண்ட ஆயுள் உண்டு. புருவங்கள் அழகாகவும், வளைந்ததாகவும் நெற்றியில் நடுவில் சாய்ந்தும் இருக்கும், மூக்கு அகலமாக இருக்கும். முகத்தில் புன்னகையுடன் சரளமாக பேசும் குணத்துடன் இருப்பார்கள்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
குறுகிய கழுத்து மற்றும் பற்கள் சீராக இருக்காது. விரல்கள் கூர்மையானவை மற்றும் கைகளுக்கு ஏற்றவாறு இருக்கும். அவர்கள் அணியும் உடைகளும், அவர்கள் உண்ணும் உணவும் மற்றவர்களுக்கு விசித்திரமாக இருக்கும்.
Aquarius Sign in Tamil – கும்ப ராசி பொது பலன்கள்
கும்ப ராசி நட்சத்திரங்கள் – அவிட்டம் 3, 4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம் முடிய
கும்பம் ராசி தேதிகள் – ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரை
உறுப்பு – காற்று ராசி
தரம் – ஸ்திர ராசி
கும்பம் ராசி அதிர்ஷ்ட நிறம் – நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட நாள் – சனி மற்றும் வெள்ளி
அதிபதி – சனி
கும்ப ராசி பண்புகள்
சில மணி நேரங்கள் பேசிய பின்னரே உங்கள் மனதில் இருப்பதை மற்றவர்கள் அறிய முடியும். உங்களிடம் பல திறமைகள் இருந்தாலும், அவற்றை எவ்வாறு சரியாக வெளிப்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியாது. சரியான உந்துதலால் மட்டுமே உங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
கும்ப ராசிகாரர்கள் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடினமான பணிகளையும் எளிதில் முடிக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. பிறந்த அல்லது வாழும் இடத்திலேயே ஒரு நிலையான வணிகத்தை அமைக்கும் அளவுக்கு திறமையானவர்கள்.
கும்பம் ராசிகாரர்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் எப்பொழுதும் உண்டு. நேர்மையானவர்கள் ஆதலால், அவர்களிடம் மற்றவர்கள் உண்மையை பேச வேண்டும் என்று நினைப்பார்கள். நன்கு பழகியவர்களுக்கு மற்றும் இவர்கள் மனதில் உள்ள கருத்தினை அறிந்து கொள்ள முடியும்.
இவர்களிடம் ஒரு விஷயத்தை ஒப்படைத்தால் அது நல்லபடியாக முடிந்துவிடும் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் புதிதாக ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் தேவையில்லாமல் யாருடைய குடும்ப பிரச்சினையிலும் மூக்கை நுழைக்க மாட்டார்கள்.
கும்ப ராசி குணங்கள்
கும்ப ராசிக்காரர்கள் ரகசியம் காப்பளிகள், அவர்கள் மனதில் பல ரகசியங்கள் இருக்கும். ஆனால், அவர்கள் எதையும் அம்பலப்படுத்த மாட்டார்கள். அவர்கள் அரசியல் மற்றும் உலக விவகாரங்களில் அதிகம் ஈடுபாடு உடையவர்கள். சில நேரங்களில் அதிக கோபத்துடன் இருப்பார்கள்.
இவர்கள் அசாத்திய துணிச்சல் காரர்கள், அன்பானவர்கள், அமைதியானவர்கள். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தலையில் வைத்து கொண்டாடுவார்கள், அவர்களை விரும்பாதவர்களை குப்பைகளாக கூட மதிக்க மாட்டார்கள்.
கும்ப ராசி மக்கள் குடும்பத்துடன் ஒரு வலுவான இணைப்பைக் கொண்டுள்ளனர். தாய், தந்தை, சகோதரர், சகோதரிகள், மனைவி, குழந்தைகள் மீது மிகவும் பாசமுள்ளவர்கள். அவர்கள் ஆடம்பரமாக செலவழிக்க விரும்புவதில்லை. மகிழ்ச்சியையும் சோகத்தையும் சமமாக ஏற்றுக்கொள்வார்கள்.
கும்ப ராசி திருமண வாழ்க்கை(Marriage Life of Aquarius Sign in Tamil)
கும்பத்தில் பிறந்தவர்கள் திருமணத்தைப் பொருத்தவரை தங்கள் மனைவியுடன் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். அதனால் திருமணம் பின்பு சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மற்றும் வசதிகள் நிறைய அமைய அமைய , கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளும் தேவையற்ற மோதல்களும் உருவாகும், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
கும்ப ராசி பொருளாதார நிலை
இவர்களுக்கு பெரும்பாலும் வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை இருக்காது, அதேபோல் சேமிப்பும் போதுமானதாக இருக்காது. பணம் சம்பாதிக்க செலவு வந்து கொண்டே இருக்கும்.
கும்ப ராசிக்காரர்கள் அதிக செலவுகளைச் செய்ய மாட்டார்கள் மற்றும் ஆடம்பர செலவினங்களையும் செய்ய மாட்டார்கள். தேவைக்கேற்ப பொருள்களை வாங்கி அனுபவிப்பார்கள். அவர்கள் குடும்பத் தேவைகளுக்கு நியாயமான செலவுகளைச் செய்வார்கள். இவர்கள் கடினமாக உழைத்து தனது சொந்த முயற்சியில் பணத்தைச் சேர்ப்பார்கள்.
இளம் வயதிலேயே கஷ்டங்கள் இருந்தபோதிலும், அவர்கள் ஆடம்பரமாக வாழ தங்கள் வசதிக்கேற்ப வீடுகள், குடியிருப்புகள், நவீன வண்டிகள் மற்றும் வாகனங்கள் வாங்கி அனுபவிப்பார்கள். அதற்கான செலவுகள் குறித்தும் கவலைப்பட மாட்டார்கள். பொதுவாகவே இவர்கள் வாழ்க்கையின் சந்தோஷங்கள் மற்றும் துக்கங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.
கும்ப ராசி குழந்தை பாக்கியம்
கும்ப ராசி குழந்தை பாக்கியம் – அவர்களுக்கு பிறந்த குழந்தைகளால் அவர்கள் உயர்த்தப்படுவார்கள், மகிமைப்படுவார்கள். குழந்தைகளால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. கும்பம் மக்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்கள் அதனால், குழந்தைகள் தங்களைப் பற்றி நன்றாக உணர வேண்டும் என்று அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவார்கள்.
தொழில் / வேலை
கும்பத்தில் பிறந்தவர்கள் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடினமான பணிகளை எளிதில் முடிக்க ஆற்றல் உள்ளது. இருப்பினும், தங்கள் ஊரில் ஒரு நிலையான வணிகத்தை அமைக்கும் திறன் உள்ளவர்கள்.
அவர்கள் மின்சாரத் துறை, தீயணைப்பு படை மற்றும் காவல் துறையில் நல்ல பதவிகளை வகிக்கிறார்கள். இரும்பு மற்றும் எஃகு தொடர்பான தொழில்கள் மற்றும் புதைபடிவ ஆராய்ச்சிகளிலும் அவர்கள் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அவர்களின் வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது என்று கூறலாம். ஆரம்பகால வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்கள் பிற்கால வாழ்க்கையில் பல வளங்களைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.
அவர்களுடனான பிரச்சனை என்னவென்றால், எவ்வளவு பெரிய பதவியும் பொறுப்பும் இருந்தாலும், அவர்கள் அதை விரும்பவில்லை என்றால், அதை அற்பமானதாக நினைத்து தூக்கி எறிந்து விடுவார்கள். இந்த குணத்தின் காரணமாக அவர்கள் பல இழப்புகளை சந்திக்க நேரிடும்.
- Read More – மீன ராசி பொது பலன்கள்
- Read All Astrology Articles in English
- Video – Learn Basic Astrology in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்