Skip to content
Home » தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும்.

உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும்.

வியங்கோள் வினைமுற்று

இந்த பதிவில் வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன? வியங்கோள் பொருட்கள், வியங்கோள் வினைமுற்று விகுதிகள், எதிர்மறை வியங்கோள், ஏவல் மற்றும் வியங்கோள் வினைமுற்று வேறுபாடு ஆகியவற்றை பார்ப்போம். வியங்கோள் என்றால் ஏவுதல் அல்லது கட்டளையிடுதல் ஆகும். வியங்கோள் வினைமுற்று தமிழ் இலக்கண இலக்கியத்தில் பழங்காலம் முதல் இன்று வரை… Read More »வியங்கோள் வினைமுற்று

முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

தமிழ் இலக்கணத்தில் முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று மற்றும் பகுதி மட்டும் வரும் ஏவல் வினைமுற்று பற்றி தெரிந்து கொள்வோம். முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று முன்னிலையில் உள்ள ஒருவரை நோக்கி ‘நீ இச்செயலைச் செய்வாயாக’ என ஏவினால், அது ஏவலை வெளிப்படுத்தும் எனவே இந்த சொல்லுக்கு ஏவல்… Read More »முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?

தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்றால் என்ன? – முன்னிலை ஒருமை வினைமுற்றுச் சொற்களில் காலத்தை வெளிப்படையாக அறிவிக்கும் சொற்களைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள் என்கிறோம். காலத்தைக் குறிப்பாக உணர்த்துபவை குறிப்பு வினைமுற்றுகள் தெரிநிலை வினைமுற்று வந்தாய் என்பது இறந்தகாலம் காட்டுகிறது. வருகிறாய் என்பது நிகழ்காலம் காட்டுகிறது. வருவாய் என்பது… Read More »தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?

முன்னிலை ஒருமை வினைமுற்று

முன்னிலை ஒருமை வினைமுற்று – ஒரு செய்தியை யாரோடு பேசுகிறோமோ அவரை ‘முன்னிலை’ என்னும் சொல்லால் கூறுகிறோம். அல்லது ‘முன்னிலை’ என்னும் சொல் தமிழ் இலக்கணத்தில் கேட்பவரைக் குறிக்கும் ஒரு கலைச்சொல் எனலாம். மூவிடப் பெயர்களைக் கீழ்வருமாறு எளிமையாக நினைவுபடுத்திக் கொள்ளலாம். தன்மை எனும் சொல் பேசுபவரைக் குறிக்கும்.… Read More »முன்னிலை ஒருமை வினைமுற்று

உயர்திணை அஃறிணை என்றால் என்ன?

உயர்திணை அஃறிணை என்றால் என்ன? திணை என்றால் ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள். இங்கே இனம் என்ற பொருளில் திணை என்னும் சொல் இடம்பெறுகிறது. உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் திணையின் அடிப்படையில் பகுக்க முடியும். இந்தத் திணையைத் தமிழ் இலக்கண நூலார் இரண்டு வகையாகப் பகுத்துள்ளனர்.… Read More »உயர்திணை அஃறிணை என்றால் என்ன?

எட்டுத்தொகை நூல்கள் யாவை?

எட்டுத்தொகை நூல்கள் யாவை? – தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும். அவைகளை பார்ப்போம். அகம் சார்ந்த நூல்கள்  1. நற்றிணை 2. குறுந்தொகை 3. அகநானூறு 4. ஐங்குறுநூறு 5.… Read More »எட்டுத்தொகை நூல்கள் யாவை?

பத்துப்பாட்டு நூல்கள் யாவை?

பத்துப்பாட்டு நூல்கள் – திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு நூல்கள் என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே வழங்கலும் உண்டு. பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் எவை எவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்று உண்டு. அது பின்வருமாறு:- முருகு பொருநாறு… Read More »பத்துப்பாட்டு நூல்கள் யாவை?

தமிழ் இலக்கண நூல்கள்

தமிழ் இலக்கண நூல்கள் – தமிழில் நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள் உள்ளன. முக்கியமான இலக்கண நூல்களை பற்றில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை காண்போம். தமிழ் இலக்கண நூல்கள் ஆசிரியர் காலம் இலக்கண வகை தொல்காப்பியம் தொல்காப்பியர் கி.மு.4ஆம் நூற். எழுத்து, சொல், பொருள் நன்னூல் பவணந்தி முனிவர்… Read More »தமிழ் இலக்கண நூல்கள்

தமிழ் இலக்கணத்தின் வகைகள்

தமிழ் இலக்கணத்தின் வகைகள்

தமிழ் இலக்கணத்தின் வகைகள் – இந்த பதிவில் தமிழ் இலக்கணம் என்றால் என்ன? மற்றும் தமிழ் இலக்கணத்தின் வகைகள் பற்றி தெரிந்துகொள்வோம். தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, 1) எழுத்து 2) சொல் 3) பொருள் 4) யாப்பு 5) அணி ஆகியவை ஆகும் இவற்றில்… Read More »தமிழ் இலக்கணத்தின் வகைகள்

உவம உருபு இடைச்சொற்கள்

உவம உருபு இடைச்சொற்கள் – உவம உருபு இடைச்சொற்களாவன, போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏயப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய முதலியனவாம். இவைகளுள்ளே, போல எனபது முதலிய பதினொன்றும், இடைச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள. அவைகளிலே, போல், புரை, ஒ, உறழ,… Read More »உவம உருபு இடைச்சொற்கள்