Capricorn in Tamil – மகர ராசி பொது பலன்கள் – மகர ராசியில் பிறந்தவர்கள் நல்ல உயரமும், சற்று நீளமான தலையும் கொண்டவர்கள். புருவங்கள் அடர்த்தியான இருக்கும். காதுகள் நீளமாகவும் தோள்கள் அகலமாகவும் இருக்கும். வலிமையான எலும்புகளும் கைகால்களும் கொண்டிருப்பார்கள்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
மகர ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் பொறுமையாக செய்யும் குணம் கொண்டவர்கள். தனக்கு என்று வரும்பொழுது மிக வேகமாக செயல் படுவார்கள். இந்த மக்கள் எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். இரக்கமுள்ளவராக இருப்பார்கள். எவ்வளவு பெரிய தோல்வி இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டார்கள். அவர்கள் அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சிப்பார்கள்.
Capricorn in Tamil – மகர ராசி பொது பலன்கள்
மகர ராசி நட்சத்திரங்கள் – உத்திராடம் 2, 3, 4 வது பாதம் & திருவோணம், அவிட்டம் 1, 2வது பாதம்
மகர ராசி தேதிகள் – டிசம்பர் 22 முதல் ஜனவரி 19 வரை
உறுப்பு – நில ராசி
தரம் – சர ராசி
அதிர்ஷ்ட நிறம் – கருப்பு, நீலம்
அதிர்ஷ்ட நாள் – சனிக்கிழமை
அதிபதி – சனி
மகர ராசி பண்புகள்
மகர ராசிக்காரர்கள். இந்த மக்கள் யாருக்கும் அவ்வளவு எளிதில் வாக்குறுதி அளிக்க மாட்டார்கள். அவர்கள் வாக்கு கொடுத்தால், அதை எப்படியாவது முடிப்பார்கள். அவர்கள் ஆடம்பரமாக வாழ வீணாக செலவிடுவார்கள்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் செய்யும் தொழிலை ஒரு தெய்வமாக கருதுவர்கள். அவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அவர்கள் முன்னேறி வெற்றி பெறுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் பிற்பகுதி வாழ்க்கையின் முற்பகுதியை விட மகிழ்ச்சியாக இருக்கும்.
வாழ்க்கையின் நடுவில் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்குவீர்கள். மின்சாரம், வீடு, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டால் லாபம் கிடைக்கும். பணமும் புகழும் ஒன்றாக வரும் இடத்தில் நீங்கள் வேலை செய்ய விரும்புகிறீர்கள்
உங்களிடம் நிறைய பணம் இருந்தாலும், திடீர் செலவினங்களுக்காக நீங்கள் இன்னும் அதிகம் பணத்தைத் சம்பாதிக்க நினைப்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் தொடரும்.
மகர ராசி குணங்கள்
புதிய எண்ணங்கள் உங்கள் மனதில் உருவாகிக் கொண்டே இருக்கும். ‘உங்களுக்கு புதிய யோசனை இருந்தால் சொல்லுங்கள்’ என்று நீங்கள் எப்போதும் மற்றவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். நீங்கள் எந்த விஷயத்திலும் சோர்வடைய மாட்டீர்கள். நீங்கள் வாழ்க்கையில் தோல்வியடைந்து படுகுழியில் சென்றாலும், நீங்கள் மீண்டும் எழுந்து நிற்பீர்கள்.
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்களும் துன்பங்களும் இருந்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள். மற்றவர்களை விட பிடிவாதம் அதிகமாக இருக்கும். அவர்கள் சில நேரங்களில் நகைச்சுவை நடிகர்களாக மாறி மற்றவர்களை சிரிக்கவும் வைப்பார்கள்.
மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தின் மீது அதிக பாசம் உண்டு. பெற்றோர் மற்றும் குழந்தைகள் மீது அதிக அன்பு இருக்கும். அவர் கஷ்டப்பட்டாலும், அடுத்த நபருக்கு வருத்தத்தைத் தரும் ஒரு செயலை அவர்கள் மறந்தும் செய்ய மாட்டார்.
மகர ராசி திருமண வாழ்க்கை
மகர ராசி திருமண வாழ்க்கை – இவர்கள் களத்திரம் மீது அதிக பாசம் செலுத்துவதன் மூலம் ஒற்றுமையுடன் இருப்பார்கள். திருமண வாழ்க்கையைப் பற்றி அவர்கள் நினைக்கும் விதத்தில் அமையும் . காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
அவர்களின் துணை குடும்ப நிர்வாகத்தில் சிறந்தவராகவும், சிக்கனமாகவும் இருப்பார்கள். ஒருவர் கோபப்படும்போது ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வார்.
மகர ராசிக்காரர்கள் பொதுவாக நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள், அவர்கள் எத்தனை கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்தாலும் வாழ்க்கையை சிறப்பாக நடத்துவார்கள். உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும்.
மகர ராசி பொருளாதார நிலை
மகர ராசியில் பிறந்தவர்களுக்குத் தேவையான பணம் எப்படியாவது கிடைத்துவிடும். பணப்புழக்கம் குறைவாக இருந்தாலும் ஏதாவது ஒரு வேலை செய்து அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள்.
ஆறுதலையும் அமைதியையும் அனுபவிக்க முடியாமல் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கும். சொந்த சொத்து இருந்தபோதிலும் அனுபவிப்பதில் சிக்கல்கள் இருக்கும்.
நீங்கள் ஒரு வீடு அல்லது நிலத்தை வாங்கினாலும், தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நிலம் வீடு வாங்கும்பொழுது கவனமுடன் இருக்க வேண்டும். வீண் செல்வு செய்பவர் ஆதலால், பணத்தை வீணடிக்கலாம். சேமிப்பது நல்லது.
மகர ராசி குழந்தை பாக்கியம்
மகர ராசி குழந்தை பாக்கியம் – மகர ராசியில் பிறந்தவர்களுக்கு குழந்தைகள் கொஞ்சம் தாமதமாக பிறக்கும். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளினால் சற்று அதிகமாக பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
பிற்காலத்தில் அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாகி மன அமைதி இல்லாமல் வாழலாம். சில சிறிய சேமிப்புகளை நீங்களே வைத்திருப்பது நல்லது.
மகர ராசி தொழில்
மகர ராசி தொழில் – மகர ராசியில் பிறந்தவர்கள் பல பெரிய தொழிற்சாலைகளை அமைத்து பலருக்கு வேலை கொடுப்பார்கள். கட்டிடக்கலை, பொறியியல் துறை நல்லது மற்றும் விஞ்ஞானியாகவும் ஆகலாம்
அவர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக பார்ப்பார்கள். அதனால், எந்தவொரு துறையிலும் புகழ் மற்றும் பெயருடன் படிப்படியாக முன்னேறுவார்கள்.
வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கடின உழைப்பு இருந்தபோதிலும், அவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
- Read More: Sagittarius in Tamil | கும்ப ராசி பொது பலன்கள்
- Read All Astrology Articles in English
- Video – Learn Basic Astrology in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்