Today Hora Timings in Tamil
Today Hora Timings in Tamil | இன்றைய ஓரை நேரம் | Daily Tamil Horai Chart – ஓரை என்றால் என்ன? ஓரை என்றால் ஆதிக்கம் என்று பொருள். சூரிய உதயம் தொடங்கி ஒவ்வொரு குறிப்பிட்ட நேரமும் ஒரு கிரகத்தின் ஆதிக்கத்திலேயே இருக்கும். அந்த குறிப்பிட்ட நேரத்தின் ஓரை அதிபதியாகவே இருப்பார்.
Today Hora Timings
Today Hora Timings – ஓரையானது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு மற்றும் செவ்வாய் என்ற அடிப்படையில் வரிசையாக வரும். ஒரு ஓரையில் அளவு 1 மணி நேரமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கிழமையின் தொடக்கத்திலும் அந்த கிழமையின் அதிபதி கிரகத்தின் ஓரையாகவே இருக்கும்.
உதாரணமாக திங்கள் கிழமை எனில் முதல் ஒரே சூரிய உதயம் தொடக்கி 6-7 மணி வரை சந்திர ஓரை ஆகும். பிறகு சனி, குரு, செவ்வாய் ஓரை என ஒரு மணி நேரத்திற்கும் மற்ற ஓரைகள் பின்தொடர்ந்து வரும். கீழ் வரும் ஓரை அட்டவணையில் தெளிவாக காண்போம்.
Daily Tamil Horai Chart | ஓரை அட்டவணை

Today Hora Timings
ஓரை நேரத்தை வைத்தே சிலர் ஓரை ஜோதிடம் பார்க்கின்றனர். அதற்கான பலனையும் துல்லியமாக கணக்கிடுகின்றனர். மேலும் ஒரு செயலை தொடங்க ஓரை நேரத்தை பயன்படுத்துகின்றனர்.
சுப ஓரைகள் – எந்த ஓரையில் என்ன செய்யலாம்
சூரிய ஓரை: சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விசயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உயர் அதிகாரிகளை சந்திப்பதால் ஆதாயம் உண்டு. இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது.
சுக்கிர ஓரை: சகல சுப காரியங்களுக்கு வீடு, வண்டி, வாகனம், புதிய ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. பெண்கள், மனைவி சம்பந்தமான பெண்பார்க்கும் நிகழ்வு, நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்ற சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். பயணங்கள் செய்ய உகந்த காலம். இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.
புதன் ஓரை: சுப காரியங்கள் செய்யலாம். கல்வி, பேச்சு, எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஏற்ற நேரம். பத்திரம் சம்பந்தமான விஷயங்களை செய்யலாம். இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.
சந்திர ஓரை: இந்த ஓரையில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய் யலாம். வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது. இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.
சனி ஓரை கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரை. சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழ்நிலை உண்டாகாது. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, பாத யாத்திரை, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல் போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.
குரு ஓரை: எல்லாவகை சுப காரியங்களுக்கு ஏற்ற ஓரை. கல்வி பயில்வது, கற்றுக்கொடுப்பது நல்லது. வியாபாரம் செய்ய நல்லது. தான தர்ம காரியங்கள் செய்யலாம். பொன் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது. சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் செய்ய கூடாது. இந்த நேரத்தில் காணாமல் போன உடனே கிடைத்து விடும்.
செவ்வாய் ஓரை: செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, நல்லது. சகோதர/பங்காளி பிரச்சனைகள் தீரும் நேரம். சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
தெரிந்துகொள்க
- 27 நட்சத்திர பாலினம்
- 27 நட்சத்திர-தேவதை
- 27 நட்சத்திர மரங்கள்
- 27 நட்சத்திர பலன்கள்
- நட்சத்திர சின்னம்
- 27 நட்சத்திர விலங்குகள்
Video: Learn Basic Astrology in Tamil