கனவு பலன்கள்

கனவு பலன்கள்

நினைவுகளின் கனவு பலன்கள் – Kanavu Palangal Tamil

கனவு பலன்கள், நாம் கனவு காணும் ஒவ்வொரு கனவிற்கு பலனுண்டு. இருப்பினும், சிலர் நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு என்றும், மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள் என்றும் கூறுவர்.

நேரத்தை பொறுத்தே சில கனவின் பலன்கள் அமையும். இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும்; இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும்; மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும்; விடியற் காலையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்து நாட்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் பலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

எல்லா கனவுகளும் பழிப்பதில்லை, மாறாக சில கனவுகள் வந்து மறைந்து விடும். சில கனவுகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும். அதிலும் சிலருக்கு நடக்க இருக்கும் நிகழ்வுகள் மற்றும் அதன் தொடர்பான விஷயங்களை கனவில் முன்னதாகவே காட்டி விடும். கனவின் பலன்கள் நிறைய உண்டு. அதில் சிலவற்றை பார்ப்போம்.

நன்மையை குறிக்கும் கனவுகள்

பெரும்பதவியில் உள்ளவர்களை கனவு கண்டால் அந்தஸ்தும் மதிப்பும் அதிகரிக்கும்.

கனவில் தொழிற்சாலையைக் காண்போருக்கு பரம்பரைச் சொத்து கிடைக்கும்.

வானவில்லை கனவில் கண்டால் பணம் செல்வாக்கு அதிகரிக்கும், பதவி உயர்வு கிடைக்கும்.

நிலவை கனவில் கண்டால் தம்பதியினரிடையே அன்பு அதிகரிக்கும்.

மகன் ஆற்றில் மூழ்கியது போல் கனவு கண்டால் துன்பங்கள் விலகும்.

தேவலோகப் பெண்களை ஆண்கள் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

நமது வலைதளத்தில் இலவச இணையவழி ஜாதகம் காண்க

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு கிடைக்கும்.

பாம்பு கடித்து இரத்தம் வருவது போல் கனவு வந்தால் செல்வம் பெருகும், திருமணம் தடை நீங்கும்.

யானை கனவில் வந்தால் அரசாங்க உதவி, நெடுநாள் வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை மாலை இடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் கைகூடும்.

இதர பக்கங்கள்:- மனையடி சாஸ்திரம் | விருட்ச சாஸ்திரம் | மச்ச சாஸ்திரம்

யானை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும், மேலும் நல்ல காலம் பிறந்திருப்பதை உணர்த்துவதாகும்.

அழகு இல்லாத பெண்ணை, மணமாகாத ஆடவன் கனவில் கண்டால், மிகவும் அழகான பெண் மனைவியாவாள்.

இறந்தவர்களின் சடலங்களை கனவில் கண்டால் சுபநிகழ்ச்சி நிகழும்.

சிறு குழந்தைகள் கனவில் வந்தால் பிணி நீங்கும்.

YouTube:- பழங்கள் கனவு பலன்கள்

கைகளில் ரத்தம் வருவது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் நீங்கும்.

சண்டையில், பிறர் அடிப்பது போன்று கனவு கண்டால் அவர்களுக்கு விரோதிகள் விலகி விடுவர்.

தாம் பிறரை அடிப்பதாகக் கனவு கண்டால், புகழ் உண்டாகும். புதிய நண்பர்கள் உண்டாவர்.

ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால், நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதே அறிகுறியாகும்.

வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் இறை அருள் கிடைக்கும். எண்ணிய காரியத்தில் வெற்றி உண்டாகும்.

தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil

நாவல் பழத்தைக் கனவில் கண்டால், காரிய சித்தி உண்டாகும். தன சம்பத்தும், சந்தான சம்பத்தும் கிடைத்திடும்.

இறந்தவருடன் உரையாடுவது போல் கனவு வந்தால் உயர் பதவி, அதிகார பதவி கிடைக்கும்.

கனவில் ஆலமரத்தைக் கண்டால், தொழில் அபிவிருத்தி அடையும்.

திருமண கோலத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் சமுதாயத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.

காதலை வெளிப்படுத்துவது போல கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாக அமையலாம்.

குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil

நெசவு தொடர்பான கனவுகள், நன்மைகள் அளிக்கும்.

தற்கொலை செய்து கொள்வது போல் கனவு வந்தால் ஆபத்து நீங்கும்.

கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் பொருள் சேரும்.

கருத்தரிப்பது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்கை முன்னேற போகின்றது என்று பொருள்.

கனவில் காதணிகளைக் கண்டால், பொன் நகைகள் பலவும் தனக்கு உரிமையாகும்.

மலர்கள் பூத்துக் குலுங்குவதுபோல் கனவு வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

தவயோகிகளை கனவில் கண்டால், பொதுநல தொண்டில் ஈடுபடுவார்கள்.

புது துணிகள் வாங்குவது போல கனவு வந்தால், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மாமரத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் புதியவர்களின் வருகை உண்டாகும் என்று பொருள்.

குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கும்

திருநங்கைகளை கனவு கண்டால் குடும்பம் மற்றும் தம்பதிகளுக்கிடையே அன்பும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.

கனவில் கிணற்றைக் காண்பது நல்லது, திருமண கைகூடும்.

கிணற்றில் இருந்து நீர் இறைப்பது போல் கனவு கண்டால் விஷயங்கள் கைக்கூடும்.

சுத்தமான நீர் ஊற்றைக் கனவில் கண்டால், அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது.

அரிசியைக் கனவில் கண்டால், செய்யும் தொழில் அபிவிருத்தி அடையும்; லாபம் அதிகரிக்கும்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் தீரும்.

கிணற்றைக் காண்பது நல்லதாகும். மணம் ஆகாதவர்களுக்கு மணமாகும்.

கிணற்றில் இருந்து நீர் இறைப்பது போல் கனவு கண்டால் விஷயங்கள் கைக்கூடும்.

சுத்தமான நீர் ஊற்றைக் கனவில் கண்டால், அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது.

ஆசிரியர் கனவில் வந்தால், பொருள் வளம் அதிகரிக்கும்.

மயிலினை கனவில் கண்டால் தம்பதியினரிடையே பரஸ்பரம் அதிகரிக்கும்.

கோயிலினை கனவில் காண புகழ் உண்டாகும்.

இதர பக்கங்கள்:- மனையடி சாஸ்திரம் | விருட்ச சாஸ்திரம் | மச்ச சாஸ்திரம்

ஆலயத்தில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு வந்தால், செயல்களில் சிறு தடைகள் ஏற்பட்டு இறைவன் துணையால் நீங்கி வெற்றி பெறுவார்.

குதிரை, கழுதையை கனவில் கண்டால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

உழவுத் தொழில் செய்வதாக கனவு கண்டால், அவரது வாழ்க்கை தரம் உயரும்.

பழங்கள் நிறைந்த மரத்தை கண்டால், பொருள் சேர்க்கையும், புத்திர பாக்கியம் உண்டாகும்.

ஆலயமணி ஓசை ஒலிக்கும் இசை கேட்டால் சந்ததியற்றவர்களுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும்.

எழுதிக் கொண்டிருப்பது போல் ஒருவர் கனவு காணின், நற்செய்திகள் விரைவில் அவரை நாடி வரும்.

அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் நற்காலம் நெருங்கி விட்டது என்று பொருள்.

மாமிசம் உண்பது போல் கனவு வந்தால் அதிர்ஷ்டம்.

பாம்புகள் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால், முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.

கனவில் எலும்பைக் கண்டால் விரைவில் அவர் செல்வந்தராகக் கூடும், பரம்பரை சொத்து கிடைக்கும்.

இனிப்பான பலகாரங்கள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்

நீர் ஊற்றைக் கனவில் கண்டால், அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது.

மலத்தை மிதிப்பது போல் கனவு வந்தால் சுப செலவுகள் உண்டாகும்.

இறந்த தாய்-தந்தையர் கனவில் தோன்றினால், வர இருக்கும் ஆபத்தினை எச்சரிக்கை வந்துள்ளனர் என்று பொருள். இது ஒரு விதத்தில் நன்மையே.

மனைவி இறந்துவிட்டாற்போல் கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும்.

விருந்தில் உண்பது போல் கனவு கண்டால் திருமண தடை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும்.

Youtube:- திருமணம் பற்றிய கனவு பலன்கள்

கனவில் பசுவைக் காண்பது செல்வ வளத்தை உண்டாக்கும்.

கனவில் கடலைக் கண்டால் வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும்.

ஏழ்மை நிலையை அடைந்து விட்டாற்போல கண்டால், எதிர்பாராத வகையில் அவருக்கு திரண்ட செல்வம் வந்து சேரும்.

மங்கள பொருளுடன் பெண் வீட்டிற்குள் நுழைவது போல் கண்டால், நம் வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறாள் அல்லது திருமண முயற்சி கைக்கூடும்.

புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.

அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.

அத்தி மரத்தை காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதை குறிக்கும்.

பசு மாடு வாங்குவது போல் கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும்.

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும்.

—————–

தீமையை குறிக்கும் கனவுகள்

காக்கை கனவில் வந்தால், தொழில் அல்லது உத்தியோக பாதிப்பு உண்டாகும்.

தாலி, மாலை, மோதிரம், மெட்டி, குங்குமம் போன்றவை தவறுவதாகவோ அல்லது கீழே அறுந்து விழுவதாகவோ கனவு கண்டால் பொதுவாக அந்த கனவு கண்ட நபருக்கு திருமணம் சம்பந்தப்பட்ட சில சிக்கல்கள் மற்றும் மன உளைச்சல்கள் உள்ளன என்று பொருள்.

நோய் உண்டானதாக கனவு வந்தால், நண்பர் ஏமாற்றுவார்.

கீழே விழுவது போல கனவு கண்டால், பொருள் நஷ்டமடைய நேரிடும்

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாக கனவு வந்தால், அவர் வெகு விரைவில் நோயால் பாதிக்கப்படுவார் .

எதிரிகளைக் கனவில் கண்டால், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

பூனையை கனவில் கண்டால் திடீர் நட்டம் ஏற்படும்.

நமது வலைதளத்தில் இலவச இணையவழி ஜாதகம் காண்க

எறும்புகளை கனவில் கண்டால் மனக் கஷ்டம்.

தேரோட்டம், திருவிழாக்களைக் கனவில் கண்டால், உடனடியாக உறவினர் ஒருவரின் மரணச் செய்தியைக் வரலாம்.

புயல், சூறாவளி கனவில் வந்தால் நோய் உண்டாகும்.

தனித்து உண்பதுபோல் கனவு கண்டால் துன்பங்கள் உண்டாகும். தொழிலில் நஷ்டம் உண்டாகும்.

போலீஸ் உங்களை காப்பாற்றுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு விருப்பம் இல்லாத சில செயல்களில் ஈடுபடுவதற்கான சூழல் அமையலாம்.

Best Social Media Marketing Toolkit

தேனீக்கள் கொட்டுவது போல் கனவு வந்தால் வீண் செலவுகள் உண்டாகும்.

பசு கன்று போடுவதைக் கனவில் கண்டால், துன்பங்கள் வந்தடையும்.

பசு விரட்டுவது போல் கனவு வந்தால் வியாதி உண்டாகும்.

நண்டு கனவில் கண்டால் முயற்சிக்கும் செயல்களில் இடையூறுகள் உண்டாகும்.

கற்பூரம் எரிவதுபோல் கனவு கண்டால், மற்றவருக்காக சாட்சி சொல்லவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ நேரிடலாம்.

இரும்பைத் தொட்டு எடுப்பதுபோல் கனவு காண்பது மிகவும் கெடுதலான சம்பவத்தை குறிக்கும்.

எலிகளை கனவில் கண்டால் எதிர்கள் பலம் பெறுவார்கள்.

யானை இறந்தது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த செயல்கள் முடிவடைவதில் காலதாமதம் ஆகும்.

வீட்டில் எலிகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

ஊனமானது போல் கனவு வந்தால் துக்க செய்தி வரும்.

குழந்தைகள் இறப்பதுபோல் கனவு காண்பது அவருக்கு வர இருக்கும் பேராபத்தைக் குறிக்கும்.

விந்தையான மனிதர் அல்லது நூதனப் பொருட்கள் கனவில் வந்தால், வரும் தீமையைச்(புதியவரை நம்ப வேண்டாம்) சுட்டிக்காட்டும்.

இடியுடன் மலை பொழிவதை கனவில் கண்டால், உறவினர் விரோதி ஆவர்.

முட்டை சாப்பிடுவது போல் கனவு வந்தால் வறுமை உண்டாகும்.

அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவது போல் கனவு கண்டால் செய்யும் செயலை பல முறை யோசித்து நிதானத்துடன் செய்ய வேண்டும்.

கனவில் சீப்பைக் கண்டால் சிக்கல்கள் உண்டாகும்

ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால், தீமை உண்டாகும்.வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு வந்தால் அவரது வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படக்கூடும்.

கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும்

கனவில் இஞ்சியைக் கண்டால், நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும்.

ஓசையைக் கேட்பதுபோல் வரும் கனவு, வீண் சச்சரவுகள் ஏற்படுவதைக் குறிக்கும்.

சாவி கொடுத்து காணாமல் போனால், பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரிடும்.

வீடு இடிந்து விழுவது போல் கனவு கண்டால், நாம் செய்யும் காரியங்களில் நிதானம் தேவை.

செருப்பினை கனவில் கண்டால் கெடுதிகள் ஏற்படும்.

வாடிய மலர்களை கனவில் கண்டால், வியாதி உண்டாகும்.

வர்ணம் பூசுவதாக கனவு காண்பது கெடுதல்.

திருமணம் ஆவது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

அட்டைப் பூச்சியை கனவில் கண்டால் பிடிக்கத்தவரிடம் இருந்து பிரச்னைகள் உருவாகலாம்.

நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.

பாலியல் கனவு பலன்கள் (udaluravu kanavu palangal)

முத்தம் கொடுப்பது போல் கனவு வந்தால் செல்வாக்கு சரியும்.

முகம் தெறியாத நபருடன் உடலுறவு வைத்து கொள்வது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்வில் உங்களுக்கு விருப்பம் இல்லாத சில செயல்களில் ஈடுபடுவதற்கான சூழல் அமையலாம்.

நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.

பெண்களின் உதடு ஓரத்தில் முத்தம் கொடுப்பது போல் கனவு வந்தால் சண்டை சச்சரவு வர போகிறது என அர்த்தம்.

முன்னாள் துணையுடன்/தோழி/தோழன்/ உடன் உறவு வைத்து கொள்வது போல் கனவு வந்தால், அவர்களுடன் இருந்த தொடர்புக்கு முற்று புள்ளி வைக்க போகிறது என்று பொருள்.

காய்கறி கனவு பலன்கள் (Vegetables kanavu palangal)

முள்ளங்கியை கனவில் கண்டால் செல்வ வளம் பெருகும்.

கிழங்கு வகைகளை கனவில் கண்டால் உடல் நலம் மேன்மை அடையும்.

முட்டை கோசை கனவில் கண்டால் உடல் வலுபெறும்.

முருங்கைக்காயை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும்.

வெங்காயத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால் நல்லது நடக்க போகிறது என்று பொருள்.

அவரை பூ மற்றும் அவரை காயை கனவில் கண்டால் நல்ல பலன்களே உண்டாகும்.

பட்டாணியை கனவில் கண்டால் மங்கள காரியங்கள் நடக்கும்.

ஏலக்காயை சாப்பிடுவது போல கனவு கண்டால் செல்வம் பெருகும்.

கொடி வகை காய்கறிகளை கனவில் கண்டால் வாரிசு உருவாகப் போகிறது என்று பொருள்.

தர்பூசணியை கனவில் கண்டால் செய் தொழிலில் லாபம்.

முள்ளங்கியை கனவில் கண்டால் செல்வ வளம் பெருகும்.

கொத்தவரக்காயை கனவில் கண்டால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.

இஞ்சியை கனவில் கண்டால், நோய்களால் பாதிப்பு உண்டாகும் என்று பொருள்.

காய்கறிகளைப் பறிப்பது போல கனவு கண்டால் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

பழங்கள் கனவு பலன்கள் (Fruits kanavu palangal)

பழங்களை கனவில் கண்டால் நல்ல விஷயங்கள் தடை ஏதும் இல்லாமல் நடக்கும்.

நாவல் பழத்தை கனவில் கண்டால், காரிய சித்தி உண்டாகும். பணம், புகழ், செல்வம், செல்வாக்கு உயரும்.

ஏலக்காயை கனவில் கண்டால் சமூகத்தில் நம்முடைய மதிப்பு அதிகரிக்கும், செல்வம் சேரும்.

ஆரஞ்சு பழத்தை கனவில் கண்டால் எதிர்பாராத பொருள் இழப்பு உண்டாகும்.

பழங்களை நறுக்குவது போல் கனவு கண்டால், தேவையற்ற குழப்பங்களும், பிரச்சனைகளும் நீங்கும்.

விபத்து கனவு பலன்கள் (vibathu kanavu palangal)

வாகன விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் இதுவரை நீங்கள் அனுபவித்த இன்னல்கள் அகலும்.

துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் காரியத்தில் தடை, உடல் நலம் குறைவு, விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம் மற்றும் குடும்ப பிரிவு உள்ளிட்டவை ஏற்படலாம்.

பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்

திருமணம் பற்றிய கனவு பலன்கள் (Thirumana kanavu palangal)

சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil

குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil

அறிமுகம்: இலவச இணையவழி ஜாதகம்

வாஸ்து அடிப்படை விதிகள்
குலதெய்வம் கோயில் வழிபாடு

2 comments