Diwali Wishes in Tamil

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

தீபாவளி வாழ்த்துக்கள்Happy Diwali Wishes in Tamil – இந்த பதிவில் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் கவிதைகள், வாழ்த்து அட்டையில் எழுதுவதற்கான தமிழ் வரிகள், தீபாவளி வாழ்த்து மேற்கோள் செய்திகள் ஆகியவற்றை கொடுத்துள்ளோம் படித்து பயன்பெறுக.

Diwali Wishes in Tamil
Diwali Wishes in Tamil

தீபங்கள் ஒளிர, பட்டாசு வெடிக்க, இனிப்புகள் பகிர, இன்பங்கள் பொங்க இனிய தீபாவளி நல்லவாழ்த்துக்கள்.

வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க, வீதியெங்கும் பட்டாசோடும், மத்தாப்போடும் கொண்டாடுவோம் தீபாவளியை

இந்த தீபாவளி முடிவில்லா மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வத்துடன் உங்கள் வாழ்க்கையை எப்போதும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள். இனிய & பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்!!

அன்பு பகிர்ந்து, மகிழ்ச்சி நிறைந்து, உறவுகள் இணைந்து கொண்டாடுவோம் தீபாவளியை

மகிழ்வான லட்டுக்கள், ஒளிரும் விளக்குகள், சிரிப்புடனும் சந்தோசத்துடனும் கொண்டாடுவோம் தீபாவளியை.

துன்பம் எனும் இருளை அகற்றி நன்மை எனும் தீபம் ஒளிர இனிமையாய் இனைந்து குதூகலத்தோடு கொண்டாடுவோம் தீபாவளியை

தீப விளக்கேற்றி, இருளை அகற்றி, அருளை சேர்த்து தீபாவளியை கொண்டாடுவோம் இனிமையாக

துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, வீடெங்கும் ஒளிவூட்டி வரவேற்போம் தீபாவளியை

அனைத்து விதமான இன்பங்களும் உங்கள் குடும்பத்திற்கு வந்தடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இந்த தீபாவளி புதிய கனவுகள், புதிய நம்பிக்கைகள், சிறந்த கண்ணோட்டங்கள், பிரகாசமான சிந்தனைகள், அழகான மகிழ்ச்சியான ஆச்சரியங்கள் மற்றும் தருணங்கள் உங்கள் வீடுகளில் நிரம்பட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்

நிறைய இனிப்புகள், புத்தாடைகள், எண்ணற்ற பட்டாசுகள், வான வேடிக்கைகள், மற்றும் முடிவற்ற கொண்டாட்டங்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள் !! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்….!!!

இனிய உறவுகளாக தீபாவளி தினம் போன்று எப்போதும் ஒன்றாக கூடி இருப்போம், என்று உறுதியளிப்போம். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இனிய குழந்தைப் பருவ நினைவுகள் நிறைந்த பண்டிகை, பட்டாசுகள் நிறைந்த வானம், இனிப்புகள் நிறைந்த வாய், ஒளி நிறைந்த வீடு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இதயம்… உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

குழந்தைகளுக்கு பசுமையான எதிர்காலத்தை கொடுங்கள். பட்டாசு வேண்டாம் என்று சொல்லுங்கள். 2021 தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபாவளி ஒளிரும் திருவிழா உங்களையும் உங்களுடைய குடும்பத்தையும் எல்லா வழிகளிலும் பிரகாசிக்கச் செய்யட்டும்! உங்களுக்கு சிறப்பான தீபாவளி வாழ்த்துக்கள்!

இந்த மங்களகரமான தீபத் ஒளித்திருநாளில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் சந்தோசங்கள் உங்கள் நாட்களை ஒளிரச் செய்யட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..!!

தீபாவளியின் சுடர் உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யட்டும். உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான மற்றும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளியின் விளக்குகள் உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை தருபவை. நீங்கள் இந்த நிகழ்வைக் கொண்டாடி, நல்ல விஷயங்களை அடைய வாழ்த்துக்கள்.

Keywords:  Deepavali Wishes in Tamil Kavithai | Diwali Wishes Quotes in Tamil

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்