Skip to content
Home » ஜோதிடம் » தினப் பொருத்தம்

தினப் பொருத்தம்

தினப் பொருத்தம் பார்ப்பது எப்படி?(Dina Porutham Meaning in Tamil) – தினம் என்றால் கிழமை அல்லது நட்சத்திரம் என்று பொருள். நாள்தோறும் சந்திரபகவான் தங்கும் இடம்(ஷேத்திரம்), அதுவே நாள் ஷேத்திரம் இது மருவி நட்சத்திரம் ஆனது. திருமண பொருத்தம் பார்க்கையில் தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று. அதனை பற்றி தெரிந்து கொள்வோம்.

தினப் பொருத்தம்
தினப் பொருத்தம்

பெண் நட்சத்திரத்தை முதலாக கொண்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ண 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 22, 24, 26, 27 வந்தால் தினப் பொருத்தம் உண்டு. வேறு எண் வந்தால் தினபொருத்தம் இல்லை.

மற்றோரு வகையில் பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கூட்ட தொகையை 9 ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை தினப் பொருத்தம் உண்டு.

உதாரணம்: பெண் நட்சத்திரம் அஸ்வினி, ஆண் நட்சத்திரம் அனுஷம் என்றால் பெண் நட்சத்திரம் முதல் அஸ்வினி 1, பரணி 2, கிருத்திகை3 என்று எண்ண வேண்டும். ஆண் நட்சத்திரம் சதயம் 17 வது நட்சத்திரமாக வரும். எனவே தினப் பொருத்தம் உண்டு.

வேறு வழியில் 17ஐ 9ஆல் வகுக்க(17/9) மீதி 8 வரும் அதனால் பொருத்தம் உண்டு. மீதி 3, 5, 7 வந்தால் பொருத்தம் இல்லை.

Video: அடிப்படை ஜோதிடம் கற்க

கேள்வி பதில்கள் – Marriage Matching in Tamil

முக்கிய திருமண பொருத்தமாக பார்க்க வேண்டியவை எவை?

முக்கிய திருமண பொருத்தமாக நட்சத்திர பொருத்தம், ராசி பொருத்தம் மற்றும் லக்கின பொருத்தம் ஆகியவை பார்க்க வேண்டும். லக்கின பொருத்தம் என்பது பாவக ஆய்வு ஆகும். இருவர் ஜாதகத்திலும் 12 பாவகத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.

அது மட்டுமில்லாமல் ஒவ்வொருவருக்கும் தோஷம் உள்ளதா அல்லது இல்லையா என்று ஆய்வு செய்து பொறுத்த வேண்டும்.

திருமணம் செய்ய கூடாத நட்சத்திரம் எவை?

ஏற்கெனவே வேறு பதிவில் சேரக்கூடாது நட்சத்திரங்கள் பற்றி தெளிவாக கூறியுள்ளோம் லிங்க் ஐ கிளிக் செய்யவும். நட்சத்திர பொருத்தம்

திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எவை?

ஏக நட்சத்திரமாக இருந்து பொருந்தும் நட்சத்திரங்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், திருவோணம். மற்றபடி பொதுவாக என்றால் இந்த லிங்க் ஐ கிளிக் செய்யயவும். நட்சத்திரம் பொருத்தம் அட்டவணை

எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?

அனுபவத்தில் 5க்கு மேல் இருந்தால் நல்லது. அதுமட்டும் போதாது இவருடைய ஜாதக பாவக ஆய்வும் மேற்கொண்டு திருமணம் முடித்தல் நல்லது. நட்சத்திரம் பொருத்தம் அட்டவணை

திருமண நட்சத்திர பொருத்தம்  பார்ப்பது எப்படி?

திருமண நட்சத்திர பொருத்தம் தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும். 10 பொருத்தம்

நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?

திருமண பொருத்தத்தில் தசவித பொருத்தங்கள் உள்ளன. அவை

1) Dina Porutham,
2) Gana Porutham,
3) Mahendra Porutham,
4) Sthree Deergam,
5) Yoni Porutham,
6) Rasi Porutham,
7) Rasi Athipathi Porutham,
8) Vasya Porutham,
9) Rajju Porutham,
10) Vedai Porutham ஆகும்.
இவைகளை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும். 10 பொருத்தம்

பொருந்தாத நட்சத்திரங்கள் எவ்வாறு பார்ப்பது ?

ஏற்கெனவே வேறு பதிவில் சேரக்கூடாது நட்சத்திரங்கள் பற்றி தெளிவாக கூறியுள்ளோம் லிங்க் ஐ கிளிக் செய்யவும். சேரக்கூடாத நட்சத்திரங்கள்

ஒரே ராசி ஒரே லக்னம் திருமணம் செய்யலாமா?

ஒரே ராசி ஒரே லக்கினம் திருமணம் செய்யலாம் இருப்பினும் திசா சந்தி இல்லாமலும் ரஜ்ஜு யோனி பொருத்தம் இருக்க வேண்டும். மேலும் இவருடைய கட்ட பொருத்தம் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.

ஏகராசி ஏக நட்சத்திரம் பொருத்தம் செய்யலாமா?

இந்த பதிவில் மேலே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம் ஏக நட்சத்திரம் உத்தம பொருத்தம் உள்ளவை மற்றும் மத்திம பொருத்தம் உள்ளவை அதனை ஏற்படும் பிரச்சனைகள் என்று அதனை தெளிவாக படித்து பயன் பெறவும். நன்றி

Read More:-

Video: அடிப்படை ஜோதிடம் கற்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்