Skip to content
Home » ஜோதிடம் » ராகு கேது தோஷ திருமண பொருத்தம்

ராகு கேது தோஷ திருமண பொருத்தம்

ராகு கேது தோஷ திருமண பொருத்தம் (Rahu Ketu Dosha Marriage Match in Tamil) – ஒருவருடைய ஜாதகத்தில் முழு பாவகத்தையும் ஆளக்கூடிய சக்திகள் படைத்தவர்கள் ராகு-கேது பகவான்கள். அவர்கள் எந்த இடத்தில இருந்தால் என்ன மாதிரியான தோஷம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

Rahu Ketu
ராகு கேது தோஷ திருமண பொருத்தம்

பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது மன நிம்மதியை தரக்கூடிய பாவகங்களான 1,2,5,7,8,12ஆம் இடத்தில் அமர்ந்தால் அது ராகு கேது தோஷம் என்று அழைக்கப்படுகிறது.

ராகு கேது என்றால் என்ன?

அறிவியல் பூர்வமாக கூற வேண்டுமென்றால் ராகு கேது என்பவை பூமி சூரியனை சுற்றி வரும் வட்ட பாதையும் சந்திரன் பூமியை சுற்றி வரும் வட்ட பாதையும் வெட்டிக் கொள்ளும் இடமே ஆகும்.

ராகு-கேது பகவான்கள் நிழல் கிரகங்கள் கிடையாது அது நிழல் கதிர்கள் அதாவது சாயா கிரகங்கள்.

பரி பூரண சூரியகிரகணம் ராகுவால், பரி பூரண சந்திரகிரகணம் கேதுவால் நிகழ்கிறது.
Buy Book Rs64.00

ராகு கேது திருமண தோஷம்

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது மன நிம்மதியை தரக்கூடிய பாவகங்களான 1,2,7,8 ஆம் இடத்தில் அமர்ந்தால் அது சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது.

இதனால் ஜாதகருக்கு நிலையில்லாத குணம், மணவாழ்வில் மகிழ்ச்சியின்மை, திருமண தாமதம், நிம்மதியற்ற வாழ்க்கை, அமைதியற்ற குடும்ப சூழ்நிலை, பேசுவதில் கடுமை, மனக்குறைவான மணவாழ்க்கை, அடிமனதில் வஞ்சகத்தோடு இருக்க செய்தல் போன்றவற்றை உருவாக்கும்.

மேலும் புத்திரத்தடை, எதிர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும், எண்ணங்களுக்கு மாறாகவே வாழ்க்கை அமையும். 8ல் ராகு அமைய பிரச்சினைக்குரிய மணவாழ்க்கை, வீதிக்கு வந்து ஜாதகர் அவமானப்படுத்தல் நடக்கும்.

மேற்கூறிய அமைப்பில் உள்ள ஜாதகத்தை அதே அமைப்பு உள்ள ஜாதகத்துடன் இணைக்க வேண்டும். அதாவது, இது போன்ற அமைப்பு தோஷம் உள்ள ஜாதகங்களை அதே போல 1,2,7,8 இல் ராகு கேது உள்ள ஜாதகங்களை இணைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் புரிதல் இருக்கும், விட்டுக்கொடுத்து வாழும் தன்மையும் இருக்கும்.

ராகு கேது புத்திர தோஷம்

ஒரு ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது நிற்க புத்திர தோஷம் உண்டாகிறது. தாமதமான குழந்தைபேறு, குழந்தைப்பேறில் பொழுது பிரச்சினை, குழந்தைகளால் திருப்தியற்ற மனநிலை ஆகியவற்றை உண்டாக்கும்.

ஜாதகம் பொருத்தம் பார்க்கும் பொழுது 5ஆம் இடத்தில சர்ப்ப கிரகங்களான ராகு கேது உள்ள ஜாதகத்தை 5 ஆம் இடத்தில ராகு கேது இல்லாத ஜாதகத்துடன் பொருத்தி அமைக்க வேண்டும்.

ராகு கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம்

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது மன நிம்மதியை தரக்கூடிய பாவகங்களான 1,2,7,8 ஆம் இடத்தில் அமர்ந்தால் அது சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது.

இதனால் ஜாதகருக்கு நிலையில்லாத குணம், மணவாழ்வில் மகிழ்ச்சியின்மை, நிம்மதியற்ற வாழ்க்கை, அமைதியற்ற சூழல், கடுமையான பேச்சு, பழிவாங்கும் எண்ணம் இருக்க செய்தல் போன்றவற்றை உருவாக்கும்.

மேலும் எதிர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும், எண்ணங்களுக்கு மாறாகவே வாழ்க்கை அமையும். 8ல் ராகு அமைய பிரச்சினைக்குரிய மணவாழ்க்கை, ஜாதகர் அவமானப்படுத்தல் நடக்கும்.

12ல் ராகு இருக்க குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வது, திருப்தியற்ற தாம்பத்தியம் ஆகியவற்றை கொடுக்கும்.

கால சர்ப்ப தோஷம்

ஒரு ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையில் மற்ற 7 கிரகங்களும் அடைபடுவது கால சர்ப்ப தோஷம் ஆகும். இதனால் ஜாதகருக்கு கல்வி, உத்தியோகம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற விஷயங்களில் தடை, தாமதம், அவமானம், இடையூறுகளை உண்டாக்கும். மேலும் நாட்பட்ட திருமணம் ஏற்படும்.
Buy Book Rs64.00

Read More:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்