வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள்
இந்த பதிவில் வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டிற்கான மரங்களின் தன்மைகள், வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள் மற்றும் வீட்டில் இருக்க கூடாத மரங்கள், வீடுகட்ட பயன்படுத்தும் மரங்களை தேர்வு செய்வது பற்றிய தகவல்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள்
வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள்
தென்னை, பலாமரம், ,வாழை மரம், கமுகு, மாதுளை, வேம்பு, கொன்றை மரம், மாமரம், நாரத்தை மரங்களை வளர்க்கலாம்.
மேலும் திராட்சை, எலுமிச்சை, முல்லை, மல்லிகை, துளசி, பவளமல்லி, பன்னீர்ச்செடி, திருநீர் பத்திரி, கற்பூரவல்லி போன்ற செடிகள் மற்றும் கொடிகளை வளர்ப்பதால் நன்மையே உண்டாகும்.
மேலே குறிப்பிட்ட மரங்கள் மற்றும் செடிகளை வீட்டில் வளர்ப்பதால் நன்மையே விளையும், மகாலட்சுமி வாசம் செய்வாள், இறைவன் அருள் எப்பொழுதும் நிறைந்திருக்கும், உடல் ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை, செல்வ வளம் நிறைந்திருக்கும்.
வீட்டில் இருக்க கூடாத மரங்கள்
புளியமரம், அலரிமரம், முருங்கைமரம், வாகை மரம், மருதமரம், பருத்தி மரம், பனை மரம், எட்டி, நாவல், எருக்கஞ்செடி, ஆமணக்கு செடி போன்றவற்றை வீட்டிலோ அல்லது வீட்டை சுற்றிலோ வளர்க்க கூடாது.
அரசமரம், ஆலமரம் ஆகியவை மனையிலோ மனைக்கு அருகாமையிலோ அமைக்க கூடாது.
இப்படிப்பட்ட மரங்களை வீட்டிலோ அல்லது வீட்டின் சுற்றுப்புறத்திலோ வைத்தால் மனையில் வசிப்பவர்களுக்கு நன்மை விளையாது, பிரச்சனைகள் உண்டாகும், உடல் ஆரோக்கியம் கெடும், மகாலட்சுமி அருள் இருக்காது. இவற்றை தவிர்ப்பது நல்லது.
வீடுகட்ட பயன்படுத்தும் மரங்களை தேர்வு செய்வது
வீடுகட்ட மரங்களை தேர்வு செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.
வீட்டிற்காக மரத்தை வெட்டும்போது அதிலிருந்து திரவமோ, பால் போலவோ தொடர்ந்து கசிந்து கொண்டே இருக்கக்கூடாது. அப்படியிருக்கும் மரத்தை பயன் படுத்தக்கூடாது.
மரமானது வெட்டப்பட்டு கீழே விழும்போது அழுகுரல் சத்தம், கீறுவது போன்று சத்தம் வந்தாலும் அந்த மரத்தை வீடுகட்ட பயன்படுத்தக்கூடாது.
மாறாக மரம் வெட்டப்படும் போது யானை பிளிறுவது மற்றும் புலி உறுமுவது போன்று சத்தம் கேட்டால் நல்லது.
வெட்டப்படும் மரங்கள் வடக்கு திசையில் விழுந்தால் மிகவும் உத்தமம் மற்ற திசைகள் மத்திமம் பலனையே தரும்.
நடைமுறையில் யாரும் இவ்வாறு செய்வதில்லை இருப்பினும் இப்படிப்பட்ட மரங்களை பயன்படுத்தி வீடு கட்டி நன்மையை பெறுங்கள்.
தெரிந்துகொள்க
வீட்டின் வாசல் படிகள் அமைக்க வாஸ்து
ஜாதகப்படி வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள்
மனையடி சாஸ்திரம் மற்றும் அதன் அடிக்கணக்கு
படுக்கை அறை வாஸ்து குறிப்புகள்
படிக்கும் அறை வாஸ்து குறிப்புகள்
North Facing House Vastu in Tamil
East Facing House Vastu in Tamil
West Facing House Vastu in Tamil
South Facing House Vastu in Tamil
வீட்டு மனையின் அடிகளும் அதன் பயன்களும்