North Facing House Vastu in Tamil | வடக்கு பார்த்த வீட்டு வாசல் வாஸ்து – இன்றைய கால கட்டத்தில் வீடு வாங்க நினைக்கும் அனைவரும் வடக்கு வீடு வாசல் உள்ள வீட்டினை வாங்கவே அதிக விருப்பம் செலுத்துகிறார்கள். ஏனென்றால் பெரிய பெரிய தொழிலதிபர்கள், வியாபாரிகள் அனைவருமே வடக்கு வாசல் அமையப்பெற்ற வீட்டில் இருப்பது கண்கூடு.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
வாஸ்து சாஸ்திரம் படி அனைத்து திசையும் நன்மையளிக்கக் கூடியது என்று கூறுகிறது. இருப்பினும் பொதுவாக அனைவரும் விரும்பி வாங்குவது / கட்டுவது என்றால் கிழக்கு அல்லது வடக்கு வாசல் உள்ள வீட்டினையே. ஏனென்றால் இந்த வாசல் உள்ள வீடுகள் அதிர்ஷ்டம் நிறைந்தவையாகும்.
கோடனான கோடி செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கும் “குபேரன்” ஆதிக்கம் செலுத்தும் திசை வடக்கு திசை ஆகும்.
ஏற்கெனவே நாம் பார்த்தபடி, பொதுவாக வீடு யாருடைய பெயரில் வாங்குகிறோமோ அவருடைய ஜாதகத்தின் படியே மனை அமையும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஜாதகரின் லக்கினம், ராசி, 4ஆம் வீடு அல்லது அதில் உள்ள கிரகங்கள் இதனை வைத்தே தீர்மானிக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது ஒருவருக்கு எப்படி வீடு அமையும், எந்த சூழலில் வீடு அமையும் என்றும் மேலும் எந்த திசை வாசல் உள்ள வீடு ஜாதகருக்கு நல்லது என்றும் தீர்மானிக்க முடியும்.
உங்கள் அருகில் உள்ள நல்ல ஜோதிடரிடம் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது.
Read More: Manaiyadi Sasthiram | வீடு அமைக்க வாஸ்து சாஸ்திரம்
வடக்கு வீடு வாசல் யாருக்கு நல்லது | North Facing House Vastu in Tamil
பொதுவாக மேற்கு வீட்டு வாசல் கடகம், விருச்சிகம், மீனம் லக்னம் மற்றும் ராசி காரர்களுக்கு மிகவும் நல்லது. இவர்கள் வடக்கு பார்த்த வாசலில் வீடு கட்டி வாசிக்கலாம்.
சொந்தமாக தொழில் நடத்துபவர்கள், வியாபாரம் செய்பவர்கள் அனைவருக்கும் வடக்கு திசை நண்மையே தரும்.
பணம் அதிகம் வீணாகாமல் சேமிப்பு உயரும். திடீர் பொருள்வரவு சிலருக்கு ஏற்படுத்தும்.
தொழில், வியாபாரங்கள் செய்பவர்களுக்கு சொந்த வீடுகள் இல்லையென்றாலும் வடக்கு திசை பார்த்த வாடகை வீட்டில் குடியிருந்தாலும், குறுகிய காலத்திலேயே சொந்த வீடு அமையும்.
வடக்கு மனை வாசலில் இருப்பவர்களுக்கு பொருளாதார உயர்வு, ஆடம்பர பொருள் சேர்க்கை அமையும்.
மேலும், குழந்தைகளுக்கு பிரகாசமான வாழ்க்கை அமையும்.
வடக்கு பார்த்த வாசலில் உள்ள வீட்டில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் எப்போதும் இருக்கும்.
பெரிய அளவில் முதலீடு செய்பவர்களுக்கும் நன்மையே தரும்.
புதன் வீடுகளான மிதுனம், கன்னி லக்கின மற்றும் ராசி காரர்களுக்கு கூட நன்மையே தரும். இருப்பினும் ஜாதகத்தை ஆய்வு செய்தபின்பு முடிவு செய்து கொள்வது நல்லது.
Read More: Vastu Feet for House in Tamil | வீடு அமைக்க வாஸ்து சாஸ்திரம்
பாதிப்புகள்
வீட்டின் வாஸ்துப்படி வடகிழக்கு குறுக்கியோ வடமேற்கு நீண்டோ அமைந்தால் அவர்களுக்கு நற்பலனுக்கு பதிலாக எதிரான பலனையே தரும்.
ஆடம்பர பொருட்களுக்காக அதிக செலவு செய்வார்கள். கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது.
வடக்கு மனை வாசல் அமைந்தாலும் மற்றபடி வாஸ்து முறையில் குறை இல்லாமல் வீடு கட்டப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
வீட்டில் தலைவருடைய ஜாதகத்தில் புதன் நீச்சம் அடைந்தாலும் அல்லது வலுவிழந்தாலும் நற்பலனை தராது.
வாஸ்து அமைக்கும் முறை
சமையலறை – தென்கிழக்கு, வடமேற்கு
பூஜை அறை – வட கிழக்கு, கிழக்கு, மேற்கு,
படுக்கையறை – தென் மேற்கு, மேற்கு, தெற்கு
ஹால் (விருந்தினர் அறை) – தென்மேற்கு நீங்கலாக எங்கு வேண்டுமானாலும், அமைக்கலாம்
கழிப்பறை – தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு பார்த்து அமைக்க வேண்டும்.
தண்ணீர்த் தொட்டி – வடகிழக்கு பாகத்தில் அமைக்கலாம்.
- Read All Astrology Articles in English
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
- திருமண பொருத்தம்
- நட்சத்திர பொருத்தம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
- ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்