Pooja Room Vastu in Tamil

Pooja Room Vastu in Tamil
Pooja Room Vastu in Tamil | பூஜை அறை வாஸ்து குறிப்புகள் – காலை எழுந்தவுடன் நாம் அனைவரும் இறைவனை தொழுதுவிட்டு பின்னர் அன்றைய தினத்தை நமதாக்கிக்கொள்வது நல்லது. இவ்வாறு வழிபடுவது நம்மில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை வளர்க்கும். அவ்வாறு நேர்மறை ஆற்றலை வளர்க்கும் பூஜை அறையை வீட்டின் எந்த பகுதியில் அமைப்பது நல்லது என்று பார்ப்போம்.
பூஜை அறையை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால்தான் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் வீட்டில் பூஜை அறையை ஈசான்ய மூலையில்(வடகிழக்கே)அமைத்து, சுவாமிப் படங்கள் கிழக்கு நோக்கி இருப்பதைப் போன்று அமைக்க வேண்டும்.
Read More: Manaiyadi Sasthiram | வீடு அமைக்க வாஸ்து சாஸ்திரம்
Pooja Room Vastu in Tamil | பூஜை அறை வாஸ்து
பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்து கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் இருக்கும் தீபமானது கிழக்கு நோக்கி பிரகாசிக்க வேண்டும்.
சுவாமி படங்களை மேற்கு திசையில் கிழக்கு நோக்கி இருக்குமாறு வைத்து வழிபட வேண்டும்.
வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
தெற்கு திசையில் உள்ள சுவற்றில் வடக்கு பார்த்தாற்போல பூஜைக்குரிய படங்களை வைத்துவிட்டு, கிழக்கு நோக்கி அமர்ந்து வழிபாடு செய்யலாம்.
ஈசான்ய மூலையில் பூஜை அறையை அமைக்க முடியாதவர்கள் இரண்டாவது option ஆக வடமேற்கே திசையில் பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம்.
வசிக்கும் வீடு கிழக்கு திசையில் தாழ்ந்தும், தெற்கும் மேற்கும் உயர்ந்து இருக்க வேண்டும்.
காற்றோட்டமானது அறிவியல் பூர்வமாக கிழக்கு திசை மற்றும் வடக்கிலிருந்தே வீசும். அதனால் காற்று கிழக்கு மற்றும் வடக்கிலிருந்து வீட்டுக்குள் நுழைந்து தெற்கு மற்றும் மேற்கு வழியே வெளியேற வேண்டும். இவ்வாறு உருவாகும் காற்றோட்டத் திசை மாறினால் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் ஏற்படும்.
பூஜை அறையில் விளக்கின் திரி தெற்கு திசை நோக்கி இருக்கும்படி வைக்கக்கூடாது.
வீட்டின் பூஜை அறையில் மஞ்சள், குங்குமம், திருநீறு, சந்தனம், சாம்பிராணி மற்றும் ஊதுவத்தி போன்ற தெய்வ மணம் வீசும் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
பூஜை அறையில் தேவையற்ற பொருள்களை வைக்கும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது.
Read More: Manaiyadi Sasthiram | வீடு அமைக்க வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து அமைக்கும் முறை
சமையலறை – தென்கிழக்கு, வடமேற்கு
பூஜை அறை – வட கிழக்கு, கிழக்கு, மேற்கு,
படுக்கையறை – தென் மேற்கு, மேற்கு, தெற்கு
ஹால் (விருந்தினர் அறை) – தென்மேற்கு நீங்கலாக எங்கு வேண்டுமானாலும், அமைக்கலாம்
கழிப்பறை – தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு பார்த்து அமைக்க வேண்டும்.
தண்ணீர்த் தொட்டி – வடகிழக்கு பாகத்தில் அமைக்கலாம்.
தெரிந்துகொள்க
ஜாதகப்படி வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள்
மனையடி சாஸ்திரம் மற்றும் அதன் அடிக்கணக்கு
படுக்கை அறை வாஸ்து குறிப்புகள்
படிக்கும் அறை வாஸ்து குறிப்புகள்
North Facing House Vastu in Tamil
East Facing House Vastu in Tamil
West Facing House Vastu in Tamil
South Facing House Vastu in Tamil
வீட்டு மனையின் அடிகளும் அதன் பயன்களும்