Skip to content
Home » Vasthu in Tamil » East Facing House Vastu in Tamil

East Facing House Vastu in Tamil

East Facing House Vastu in Tamil | கிழக்கு பார்த்த வீட்டு வாசல் வாஸ்து – இன்றைய கால கட்டத்தில் வீடு வாங்க நினைக்கும் அனைவரும் கிழக்கு வீடு வாசல் உள்ள வீட்டினை வாங்கவே அதிக விருப்பம் செலுத்துகிறார்கள். ஏனென்றால் சூரியன் உதயத்தை பார்க்கும் விதத்தில் கிழக்கு வாசல் அமையும்.

East Facing House Vastu in Tamil
East Facing House Vastu in Tamil

வாஸ்து சாஸ்திரம் படி அனைத்து திசையும் நன்மையளிக்கக் கூடியது என்று கூறுகிறது. இருப்பினும் பொதுவாக அனைவரும் விரும்ப வாங்குவது / கட்டுவது கிழக்கு வாசல் உள்ள வீட்டினையே. ஏனென்றால் கிழக்கு வாசல் உள்ள வீடுகள் அதிர்ஷ்டம் உள்ளவையாகும்.

ஏற்கெனவே நாம் பார்த்தபடி, பொதுவாக வீடு யாருடைய பெயரில் வாங்குகிறோமோ அவருடைய ஜாதகத்தின் படியே மனை அமையும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஜாதகரின் லக்கினம், ராசி, 4ஆம் வீடு அல்லது அதில் உள்ள கிரகங்கள் இதனை வைத்தே தீர்மானிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது ஒருவருக்கு எப்படி வீடு அமையும், எந்த சூழலில் வீடு அமையும் என்றும் மேலும் எந்த திசை வாசல் உள்ள வீடு ஜாதகருக்கு நல்லது என்றும் தீர்மானிக்க முடியும்.

உங்கள் அருகில் உள்ள நல்ல ஜோதிடரிடம் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது.

Read More: Vastu Feet for House in Tamil | வீடு அமைக்க வாஸ்து சாஸ்திரம் 

கிழக்கு வீடு வாசல் யாருக்கு நல்லது

பொதுவாக மேற்கு வீட்டு வாசல் மேஷம், சிம்மம், தனுசு லக்னம் மற்றும் ராசி காரர்களுக்கு மிகவும் நல்லது. இவர்கள் கிழக்கு பார்த்த வாசலில் வீடு கட்டி குடியேறலாம்.

கிழக்கு பார்த்த வாசலில் வசிப்பவர்களுக்கு செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும்.

மேலும், இவர்கள் அரசு துறைகளினால் ஆதாயம் பெறுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் ஆதாயம் உண்டு.

வாஸ்து முறை சரியாக அமையப்பெற்ற கிழக்கு வாசல் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் இந்த சமுதாயத்தில் நன்மதிப்பு, புகழ், அந்தஸ்துடன் வாழ்வார்கள்.

இவர்கள் எந்த துறைகளில் வேலை செய்தாலும் அதில் முதன்மையானவராக திகழ்வார்கள். மேலும் முதன்மையாக வர கடினமாக உழைப்பார்கள், அதில் வெற்றியும் காண்பார்கள்.

நிரந்தர வேளையில் பணி புரிபவர்களாக இருப்பாங்கள்.

ஜாதகத்தில் சூரியன் நீச்சம் அடைந்தவர்கள் கிழக்கு திசை நோக்கிய வீடுகளை தவிர்ப்பது நல்லது.

நாட்பட்ட நோய்கள் தீராமல் இருப்பவர்கள் கிழக்கு வாசல் மனையில் இருந்தால் நோய்கள் குணமாகும்.

பாதிப்புகள்

வீடு யாருடைய பெயரில் இருக்கிறதோ அவருடைய ஜாதகத்தில் சூரியன் நீச்சம் அல்லது வலுவிழந்து இருந்தாலோ கிழக்கு வீட்டு வாசல் நன்மையை தராது. கண்டிப்பாக நல்ல ஜோதிடரை சென்று ஆலோசிக்கவும்.

இவர்கள் எடுக்கும் முடிவுகளில் இருந்து மாற மாட்டார்கள் அதுவே சில சமயங்களில் இவர்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

கிழக்கு மனை வாசல் அமைந்தாலும் மற்றபடி வாஸ்து முறையில் குறை இல்லாமல் வீடு கட்டப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.

Read More: Manaiyadi Sasthiram | வீடு அமைக்க வாஸ்து சாஸ்திரம் 

வாஸ்து அமைக்கும் முறை

சமையலறை – தென்கிழக்கு, வடமேற்கு
பூஜை அறை – வட கிழக்கு, கிழக்கு, மேற்கு,
படுக்கையறை – தென் மேற்கு, மேற்கு, தெற்கு
ஹால் (விருந்தினர் அறை) – தென்மேற்கு நீங்கலாக எங்கு வேண்டுமானாலும், அமைக்கலாம்
கழிப்பறை – தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு பார்த்து அமைக்க வேண்டும்.
தண்ணீர்த் தொட்டி – வடகிழக்கு பாகத்தில் அமைக்கலாம்.

Read More; 12 Zodiac Signs

Read More: Manaiyadi Sasthiram | வீடு அமைக்க வாஸ்து சாஸ்திரம் 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்