South Facing House Vastu in Tamil

South Facing House Vastu plan in Tamil | தெற்கு பார்த்த வீட்டு வாசல் வாஸ்து – இன்றைய கால கட்டத்தில் வீடு வாங்க நினைக்கும் அனைவரும் தெற்கு வீடு வாசல் என்றாலே ஒதுங்கி விடுகிறார்கள், யாரும் வீட்டினை வாங்கவும் விருப்பம் செலுத்துவதில்லை. இது உண்மைதானா என்று பார்ப்போம்.

South Facing House Vastu in Tamil

South Facing House Vastu in Tamil

பொதுவாக வீடு யாருடைய பெயரில் வாங்குகிறோமோ அவருடைய ஜாதகத்தின் படியே மனை அமையும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஜாதகரின் லக்கினம், ராசி,  4ஆம் வீடு அல்லது அதில் உள்ள கிரகங்கள் இதனை வைத்தே தீர்மானிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது ஒருவருக்கு எப்படி வீடு அமையும், எந்த சூழலில் வீடு அமையும் என்றும் மேலும் எந்த திசை வாசல் உள்ள வீடு ஜாதகருக்கு நல்லது என்றும் தீர்மானிக்க முடியும்.

அதனால் பொத்தாம் பொதுவாக கிழக்கு மற்றும் வடக்கு வாசல் மட்டும் நல்லது மற்ற வீட்டு வாசல்கள் நல்லவை அல்ல என்று ஒதுக்க கூடாது. உங்கள் அருகில் உள்ள நல்ல ஜோதிடரிடம் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது.

Read More: Vastu for House in Tamil

தெற்கு வீடு வாசல் யாருக்கு நல்லது (South Facing House Vastu Plan in Tamil)

பொதுவாக தெற்கு வீட்டு வாசல் ரிஷபம், கன்னி, மகரம் லக்னம் மற்றும் ராசி காரர்களுக்கு நல்லது. இவர்கள் தெற்கு பார்த்த வாசலில் வீடு கட்டி குடியேறலாம்.

தொழிலதிபர்களுக்கு, வியாபாரிகளுக்கும் தெற்கு வாசல் மனை நல்ல பலனை தரும்.

புதிய தொழில் தொடங்குபவர்கள் தெற்கு மனை அமைத்து தொழில் தொடங்க நன்றாக இருக்கும்.

தெற்கு மனை பெண்களுக்கு சிறப்பை தரும், அதனால் ஜாதகர் பெண்ணாக இருக்க நல்ல பலன் தரும். அப்படி இல்லையென்றால் ஜாதகரின் தாயார் அல்லது மனைவியை கூட்டாக சேர்த்து தெற்கு மனை வாசல் உள்ள வீடு வாங்கி குடியேறலாம்

பாதிப்புகள் (மற்ற ராசி மற்றும் லக்கின காரர்களுக்கு)

பொதுவாக பார்க்கும்பொழுது தெற்கு மனை லாபத்தை விட செலவுகளை அதிகப்படுத்தும்.

சேமிப்புகள் சேருவது கடினம்

அதிக திருஷ்டி தோஷம் அடிக்கடி உண்டாகும்.

மனையின் தென்கிழக்கு பகுதி துண்டிக்கப்பட்டு, தென்மேற்கு பகுதி நீண்டிருந்தால் மிகவும் மோசமான பலன்களையே தரும். (இது அனைத்து ராசி மற்றும் லக்கின காரர்களுக்கும் பொருந்தும்)

வாஸ்து அமைக்கும் முறை

சமையலறை – தென்கிழக்கு, வடமேற்கு
பூஜை அறை – வட கிழக்கு, கிழக்கு, மேற்கு,
படுக்கையறை – தென் மேற்கு, மேற்கு, தெற்கு
ஹால் (விருந்தினர் அறை) – தென்மேற்கு நீங்கலாக எங்கு வேண்டுமானாலும், அமைக்கலாம்
கழிப்பறை – தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு பார்த்து அமைக்க வேண்டும்.
தண்ணீர்த் தொட்டி – வடகிழக்கு பாகத்தில் அமைக்கலாம்.

Read More: Vastu Feet for House in Tamil | வீடு அமைக்க வாஸ்து சாஸ்திரம் 

12 Zodiac Signs

You may also like...