West Facing House Vastu in Tamil

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

West Facing House Vastu in Tamil | மேற்கு பார்த்த வீட்டு வாசல் வாஸ்து Plan – இன்றைய கால கட்டத்தில் வீடு வாங்க நினைக்கும் அனைவரும் மேற்கு வீடு வாசல் என்றாலே யாரும் வீட்டினை வாங்க விருப்பம் செலுத்துவதில்லை. இது உண்மைதானா என்று பார்ப்போம்.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

West Facing House Vastu in Tamil
West Facing House Vastu in Tamil

வாஸ்து சாஸ்திரம் படி ஒரு வீட்டை அமைக்கும் போது வடக்கு, கிழக்கு திசையில் அமைப்பது மட்டும் தான் நல்லது என்று மற்ற திசைகளில் வாசல்கள் அமைக்க கூடாது என எந்த கருத்தையும் இல்லை. எல்லாத் திசையும் நன்மையளிக்கக் கூடியது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

ஏற்கெனவே நாம் பார்த்தபடி, பொதுவாக வீடு யாருடைய பெயரில் வாங்குகிறோமோ அவருடைய ஜாதகத்தின் படியே மனை அமையும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஜாதகரின் லக்கினம், ராசி, 4ஆம் வீடு அல்லது அதில் உள்ள கிரகங்கள் இதனை வைத்தே தீர்மானிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது ஒருவருக்கு எப்படி வீடு அமையும், எந்த சூழலில் வீடு அமையும் என்றும் மேலும் எந்த திசை வாசல் உள்ள வீடு ஜாதகருக்கு நல்லது என்றும் தீர்மானிக்க முடியும்.

உங்கள் அருகில் உள்ள நல்ல ஜோதிடரிடம் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது.

Read More: Vastu for House in Tamil | வீடு அமைக்க வாஸ்து சாஸ்திரம் 

மேற்கு வீடு வாசல் யாருக்கு நல்லது

பொதுவாக மேற்கு வீட்டு வாசல் மிதுனம், துலாம், கும்பம் லக்னம் மற்றும் ராசி காரர்களுக்கு நல்லது. இவர்கள் மேற்கு பார்த்த வாசலில் வீடு கட்டி குடியேறலாம்.

தொழிலாளர்களுக்கும், ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும், நிரந்தர வருமானம் பெறுபவர்களுக்கு மேற்கு வாசல் மனை நல்ல பலனை தரும்.

நிரந்தர வேளையில் பணி புரிபவர்களுக்கும், கடினமான உழைப்பாளிகளுக்கும் மேற்கு மனை வாசல் பிரச்சனைகளை தராது.

இரும்பு வியாபாரம், எண்ணெய் கடைகள், இரும்பு பொருட்கள் தயாரிப்பு, எண்ணெய் ஆலைகள் வைத்திருப்பவர், பாத்திரக்கடை, வாகன தொழில் போன்ற வியாபாரங்கள் செய்பவர்களுக்கு மேற்கு திசை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பது நன்மையே தரும்.

மேற்கு திசை பார்த்த வாசல் இருக்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள் ஏற்படும். அங்குவசிப்பவர்கள் நோய் நொடிகளால் அதிகம் பாதிக்கப்படமாட்டார்கள்.

பாதிப்புகள் (மற்ற ராசி மற்றும் லக்கின காரர்களுக்கு)

பொதுவாக பார்க்கும்பொழுது மேற்கு மனை வாசல் உள்ள வீடுகள் அதிர்ஷ்டத்தை தராது. இங்கு வசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்காது. ஆனால், உழைத்து முன்னேறுபவர்கள்.

சிறிய வெற்றிக்கும் கூட பெரிய முயற்சி எடுக்க வேண்டி வரும்.

எந்த செயலையும் முடிக்கும் நேரத்தில் தடுத்துவிடும்.

வாஸ்து அமைக்கும் முறை

சமையலறை – தென்கிழக்கு, வடமேற்கு
பூஜை அறை – வட கிழக்கு, கிழக்கு, மேற்கு,
படுக்கையறை – தென் மேற்கு, மேற்கு, தெற்கு
ஹால் (விருந்தினர் அறை) – தென்மேற்கு நீங்கலாக எங்கு வேண்டுமானாலும், அமைக்கலாம்
கழிப்பறை – தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு பார்த்து அமைக்க வேண்டும்.
தண்ணீர்த் தொட்டி – வடகிழக்கு பாகத்தில் அமைக்கலாம்.

Read More:

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்