மாடியில் அறைகளை அமைக்க வாஸ்து குறிப்புகள்

மாடியில் அறைகளை அமைக்க வாஸ்து
இந்த பதிவில் ஒரு வீட்டின் மாடியில் அறைகளை அமைக்க வாஸ்து குறிப்புகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். மேலும் அவ்வாறு அமைத்து பயன் பெறுவோம்.
மாடியில் அறைகளை அமைக்க மேற்கு, மற்றும் தெற்கு திசைகளில் அறைகளை அமைத்துக்கொள்வது நல்ல பலனை தரும்.
வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் உள்ள பகுதிகளை திறந்த வெளியாக அமைக்க வேண்டும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் யாரும் அவ்வாறு கட்டுவதில்லை இருப்பினும் இந்த திசையில் அறைகளை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் இந்த திசைகளில் சிறிது வெற்றிடம் விட்டு அறைகளை கட்டிக்கொள்ளலாம்.
அவ்வாறும் செய்ய இயலாவிட்டால் அந்த திசைகளில் பால்கனி அமைத்துக்கொள்ளுங்கள். அதற்காக பால்கனி அந்த இடத்தில்தான்(திசையில்தான்) அமைக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
Read More: படுக்கை அறை வாஸ்து குறிப்புகள் | மனையடி சாஸ்திரம் | சமையலறை வாஸ்து | குளியலறை வாஸ்து
படுக்கையறை வாஸ்து சாஸ்திரம்
வீட்டின் முக்கிய அறைகளில் ஒன்று படுக்கை அறை. ஓய்வு என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் மனநிலைக்கு முக்கியமானது. தூக்கம், ஓய்வு எடுக்கக் கூடிய படுக்கை அறை வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது.
படுக்கை அறையில் வடக்கு பக்கம் பார்த்து பீரோ பண சேமிக்கும் அலமாரி வைக்க வேண்டும்.
2 படுக்கையறை அமைக்க விரும்புபவர்கள் இரண்டாவது அறையாக வடகிழக்கு பகுதியில் அமைக்கலாம்.
இளம் தம்பதியினர் தென்மேற்கு பகுதியிலும் வயதானவர்கள் வடகிழக்கு அறையிலும் தங்குவது நல்லது.
எத்தனை மாடிகள் காட்டினாலும் இந்த விதிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
குளியலறை வாஸ்து சாஸ்திரம்
வீட்டின் குளியலறை தென்மேற்கில் மட்டும் அமைய கூடாது மற்ற திசைகளில் அமைக்கலாம்.
சமையலறை வாஸ்து சாஸ்திரம்
தென் கிழக்கு பகுதி அக்னி மூலை எனவே வீட்டின் தென்கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைவதும், கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்ல அமைப்பாகும்.
அவ்வாறு அமைக்க இயலாதவர்கள் இரண்டாவது தேர்வாக வடமேற்கு திசையில் சமையலறை அமைக்கலாம்.
பூஜை அறைக்கு அருகில் இருக்கலாம். ஆனால் கழிப்பறைக்கு அருகில் சமையல் அறை மற்றும் பூஜை அறை இருப்பது நல்லதல்ல.
சமையலறை தொட்டி(Kitchen Sink) தென்கிழக்கில் இருக்க வேண்டும். வடமேற்கு 2வது தேர்வு(option).
மேலும் பொதுவாக அடித்தளத்தில் அறைகளை அமைக்க என்ன வாஸ்து கூறினோமோ அந்த விதிகளே இதற்கும் பொருந்தும். அதனை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தெரிந்துகொள்க
வீட்டின் வாசல் படிகள் அமைக்க வாஸ்து
ஜாதகப்படி வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள்
மனையடி சாஸ்திரம் மற்றும் அதன் அடிக்கணக்கு
படுக்கை அறை வாஸ்து குறிப்புகள்
படிக்கும் அறை வாஸ்து குறிப்புகள்
North Facing House Vastu in Tamil
East Facing House Vastu in Tamil
West Facing House Vastu in Tamil
South Facing House Vastu in Tamil