Skip to content
Home » Vasthu in Tamil » தலைவாசல் அமைக்க வாஸ்து சாஸ்திரம்

தலைவாசல் அமைக்க வாஸ்து சாஸ்திரம்

இந்த பதிவில் வீட்டில் தலைவாசல் அமைக்க வாஸ்து சாஸ்திர குறிப்புகள் மற்றும் தலைவாசல் அளவு நிர்ணயிப்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

தலைவாசல் அமைக்க வாஸ்து
தலைவாசல் அமைக்க வாஸ்து

பொதுவாக எந்த திசையில் வாயிற்படி அமைக்க வேண்டுமோ அந்த திசையில் உள்ள சுவற்றின் நீளத்தை அளவிட வேண்டும். பின் அளவிட்ட நீளத்தை 9 பங்குகளாக பிரிக்க வேண்டும். 9 பங்குகளையும் 9 கிரகங்களுக்கு கணக்கிட வேண்டும்.

இவ்வாறு 9 பங்குகளாக பிரித்த அளவில் முதல் மூன்று பங்குகளை மூன்று கிரகங்களுக்கும் கடைசி மூன்று பங்குகளை மூன்று கிரகங்களுக்கும் நடுவில் மூன்று பங்குகளை மூன்று கிரகங்களை கணக்கிட்டு வாயிற்படி அமைக்க வேண்டும்.

9 கிரகங்களும் வாசல்படி ஆளுமையும்

கேது -> ராகு -> சனி -> சுக் -> குரு -> புதன் -> செவ் -> சந் -> சூரி (வடக்கு)

தலைவாசல் நடுப்பகுதி புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உண்டான பகுதி வரும்படி வீட்டிற்கான வாயிற்படி அமைக்க வேண்டும்.

கிழக்கு திசையில் வாயிற்காலை வைக்க வடக்கிலிருந்து கணக்கிட வேண்டும்.

தெற்கு திசையில் வாயிற்காலை வைக்க கிழக்கிலிருந்து கணக்கிட வேண்டும்.

மேற்கு திசையில் வாயிற்காலை அமைக்க தெற்கிலிருந்து கணக்கிட வேண்டும்.

வடக்கு திசையில் வாயிற்காலை அமைக்க மேற்கிலிருந்து கணக்கிட வேண்டும்.

வாயிற்காலை வைக்கும் திசையில் உள்ள அளவை ஒன்பது கூறுகளாக்கி எந்த திசையிலிருந்து கணக்கிட வேண்டுமோ அவ்வாறு கணக்கிட்டு புதன், குரு,, சுக்கிரன் ஆகியவற்றின் இடத்தில் வைக்க நன்மை உண்டாகும்.

பொதுவாக புதன் பகுதியில் இரண்டு பங்கும், குரு பகுதியில் ஒரு பங்கும் இருக்குமாறு வாயிற்காலை வைப்பது உத்தமம்.

சூரியன், சந்திரன், செவ்வாய் கிரகங்களின் பாகம் மத்திமமாகும்.

சனி, ராகு, கேது ஆகியவற்றின் பாகங்களில் வாயிற்காலை வைக்கக்கூடாது. இவ்வாறு வைப்பதன் மூலம் ஆரோக்கியம் கெடும், வளம் குறையும் பலவிதமான தொல்லைகளும் கெடுதல்களை உண்டாகும்.

மேஷம், சிம்மம், தனுசு ராசிகளிலோ அல்லது லக்னங்களிலோ பிறந்தவர்கள் வடக்கு திசையை நோக்கியவாறு அமைக்க வேண்டும்.

ரிஷபம், கன்னி, மகரம் ராசிகளிலோ அல்லது லக்னங்களிலோ பிறந்தவர்கள் தெற்கு திசையை நோக்கியவாறு அமைக்க வேண்டும்.

மிதுனம், துலாம், கும்பம் ராசிகளிலோ அல்லது லக்னங்களிலோ பிறந்தவர்கள் மேற்கு திசையை நோக்கியவாறு அமைக்க வேண்டும்.

கடகம், விருச்சிகம், மீனம் ராசிகளிலோ அல்லது லக்னங்களிலோ பிறந்தவர்கள் கிழக்கு திசை நோக்கியவாறு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவரவர் ராசிகளுக்கோ லக்னங்களுக்கோ ஏற்ற திசையில் வாயில் அமைத்துக்கொள்ள எடுத்த காரியத்தில் வெற்றி, நோயற்ற வாழ்க்கையும், செல்வ வளமும் பெருகும்.

மேற்கூறிய ராசி, லக்கினத்திற்கு ஏற்ற திசைகள் அனைத்தும் பொது விதியே இருப்பினும் ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகப்படி நான்காம் இடத்திற்கு உண்டான கிரகத்தின் திசையில் வாசல் அமைக்க நன்மை உண்டாகும்.

நான்கு திசைகளிலும் வாசல் அமைக்க நன்மை உண்டாகும்.

கிழக்கு திசையை விட்டுவிட்டு மற்ற மூன்று திசைகளில் வாயிற்கால் வைப்பது நன்மை பயக்காது.

மேற்கு திசையை தவிர மற்ற மூன்று திசைகளில் வாசற்கால் அமைப்பது மிக மென்மையான பலன் உண்டாகும்.

தெற்கு திசையை தவிர மற்ற மூன்று திசைகளில் வாசற்கால் வைப்பதும் நம்மை உண்டாகும்.

மேற்கு திசையை விட்டு மற்ற முன்று திசைகளில் வாசற்கால் பிவைப்பது நன்மையே உண்டாகும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்