ஸ்டோர் ரூம் வாஸ்து குறிப்புகள்

ஸ்டோர் ரூம் வாஸ்து குறிப்புகள் Store Room Vastu in Tamil – ஒரு வீடு கட்டும்பொழுது வாஸ்து சாஸ்திரப்படி எந்த திசையில் சரியாக பொருட்கள் வைக்கும் அறை(ஸ்டோர் ரூம்) அல்லது சேமிப்பு அறை அமைக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

ஸ்டோர் ரூம் வாஸ்து குறிப்புகள்
ஸ்டோர் ரூம் வாஸ்து குறிப்புகள்

தற்பொழுது உள்ள காலங்களில் மக்கள் பல வகையான பொருட்களை வாங்கி சேகரிக்கின்றனர். அதில் சில பொருட்கள் தினசரி பயன்பாட்டுக்கும், சில பொருட்கள் எப்போதாவது பயன்படுத்தும் வகையில் இருக்கும். இன்னும் சொல்ல போனால் கிராம புறங்களில் அரிசி, காய்கறி, தானிய மூட்டைகள் எல்லாத்தையும் ஓரிடத்தில் சேகரித்து வைப்பார்கள்.

இத்தகைய பொருட்களை எல்லாம் ஓரிடத்தில் பத்திரமாக வைக்க வீட்டில் “ஸ்டோர் ரூம்” எனப்படும் அந்த வகையில் வீட்டில் ஸ்டோர் ரூம் எங்கே அமைத்தால் நல்லது என்று தெரிந்துகொள்வோம்.

மேலும் நாம் சேமிக்கும் பணம், நகை போன்றவைகளை எந்த திசையில் வைப்பது சிறப்பை தரும் என்றும் பார்ப்போம்.

ஈசானிய மூலையில்(வடகிழக்கு) ஸ்டோர் ரூம் அமைத்தால் வீட்டில் பொருளாதார சீர்குலைவு உண்டாகும்.

அரிசி மூட்டைகள், தானியம் மற்றும் காய்கறி மூட்டைகளை வைப்பதற்கு வடக்கு திசை அறையையே பயன்படுத்தவேண்டும்.

தென்மேற்கு திசையில்(நைருதி மூலை) ஸ்டோர் ரூம் அமைத்தால் பொருட்கள் விருத்தி ஆகும். வளம் பெருகும்.

வீட்டினுள் பொருட்களை வைக்க அலமாரிகள் அமைக்க விரும்பினால் வடக்கு திசை பார்த்திருக்குமாறோ அல்லது கிழக்கு திசை பார்த்திருக்குமாறோ அமைக்க வேண்டும்.

பணம், நகை வைக்கும் அலமாரிகள், பீரோக்கள் தெற்கு மேற்கு சுவர்களை ஒட்டினாற்போல அதாவது தென்மேற்கு திசையில், வடக்கு பக்கம் பார்த்தவண்ணம் வைக்க பணவசதி பெருகும். செல்வம் சேரும்.அமைப்பது சிறந்த பலனை தரும்.

வீட்டின் தெற்கு திசை மற்றும் மேற்கு திசை பகுதிகளில் ஸ்டோர் ரூம் அமைப்பதால் வீட்டில் வறுமை நிலை உண்டாகாது இருப்பினும் சுமாரான பலனையே தரும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்