படுக்கை அறை வாஸ்து குறிப்புகள்

மனையடி வாஸ்து சாஸ்திரத்தில் சரியாக படுக்கை அறை வாஸ்து(Bedroom Vastu in Tamil) முறையில் எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம் பின்பு அவ்வாறு அமைத்து மன அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வோம்.

படுக்கை அறை வாஸ்து குறிப்புகள்
படுக்கை அறை வாஸ்து குறிப்புகள்

ஒருவரிடம் எத்தனை கோடி செல்வங்கள் இருந்தாலும் எவ்வளவு புகழ் இருந்தாலும், தங்கத்தால் செய்த கட்டிலே இருந்தாலும் நல்ல உறக்கம் இல்லை என்றால் மன அமைதி கெடும். இவ்வுலகில் பணக்காரன் ஏழை என பாகுபாடு இல்லாமல் தூக்கம் இல்லாமையால் மன அமைதி கெட்டு வாழ்க்கையை தொலைத்தவர் பலர் உண்டு.

இந்த நிலைமாற மனையடி வாஸ்து சாஸ்திரத்தில் படுக்கையறை சரியாக அமைப்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

தென்மேற்கு பகுதியில் படுக்கை அறை அமைப்பது நல்ல பலனை தரும். உரிமையாளருக்கு ஆரோக்கியத்தையும் செழிப்பையும் தரும். புது தம்பதிகள் அல்லது இளம் தம்பதிகள் தென்மேற்கு பகுதியில் படுக்கை அறை அமைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

தென்மேற்கு பகுதியில் உள்ள படுக்கை அறை மற்ற அறைகளை விட 1inch ஆவது உயரமாக அமைத்துக்கொள்வது நிலையான இன்பத்தை தரும்.

அதேபோல தென்மேற்கு படுக்கை அறையுடன் இணைப்பு குளியலறை அமைக்காமல் இருப்பது நல்லது.

தென்மேற்கு திசையில் படுக்கை அறை அமைக்க முடியாதவர்கள் அலலது இரண்டாவது அறை அமைக்க விரும்புவார்கள் வடகிழக்கு திசையில் படுக்கை அறை அமைத்துக்கொள்ளலாம்.

வடகிழக்கு திசை படுக்கை அறை வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பானதாக அமையும். புது தம்பதியினருக்கு உகந்ததல்ல

தென்கிழக்கு(அக்னி மூலை) பகுதியில் படுக்கையறை அமைக்க உறக்கமே வராமல் தவிப்பார்கள், நிம்மதி என்பதே இருக்காது. தம்பதியினரிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

வடமேற்கு (வாயு மூலை) அமைப்பதும் சிறப்பை தராது. இருப்பினும் வேறு வழியில்லாமல் இருந்தால் வடமேற்கில் அமைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு சரியாக படுக்கையறை அமைத்து வாழ்வில் அனைத்து இன்பங்களையும் வாழ்க!

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்