Skip to content
Home » Vasthu in Tamil » ஜாதகப்படி வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள்

ஜாதகப்படி வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள்

ஜாதகப்படி வீடு, மனை யோகம் சொந்த வீடு கட்டி வாழும் உள்ளதா என அறியும் வழிமுறைகள் – இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்குமே சொந்த வீடு கட்டி வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் அது எல்லோருக்கும் அமைவதில்லை. சிலர் கடைசி வரை வாடகை வீட்டிலேயே வசிக்கிறார்கள். சிலருக்கு பூர்விக சொத்துக்கள் மூலம் வசிக்கிறார்கள். சிலர் வெளியூரில் சென்று வீடு வாங்கி அங்கேயே வசித்து வருகிறார்கள்.

ஜாதகப்படி வீடு, மனை யோகம்
ஜாதகப்படி வீடு, மனை யோகம்

சிலருக்கு சொந்த வீட்டிலும் ஊரிலும் வாழும் அமைப்பு இருக்காது. சிலர்க்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருக்கும். சிலர் கட்டிய வீட்டின் மூலம் வருவாய் பெறுவார்கள். சிலருக்கு அதனால் நஷ்டம், கடன் உண்டாகும். இவை அனைத்தும் ஜாதகப்படி எவ்வாறு நடைபெறுகிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

மனை யோகம் அறியும் வழிமுறைகள்

ஒருவரின் ஜாதகத்தில் 4ஆம் ஸ்தானம் வீடு, மனையோகத்தை குறிக்கும்.

ஒருவர் சுய ஜாதகத்தில் 4ஆம் வீட்டின் அதிபதி கிரகம் சுபகிரகங்களுடன் சேர்க்கை பெற்று லக்கின கேந்திரத்தில் இருந்தால் நிச்சயம் வீடு, மனை யோகம் உண்டு.

4ஆம் பாவதிபதி மற்றும் 10ஆம் பாவாதிபதி பரிவத்தனை பெற்றிருந்தாலும் ஜாதகருக்கு கண்டிப்பாக மனை யோகம் உண்டு.

4ஆம் பாவாதிபதி 11ஆம் வீட்டில் இருந்தால் புதிய வீடு கட்டி குடிசெல்லும் அமைப்பு உண்டாகும்.

நான்காம் வீட்டின் அதிபதி 4 அல்லது 10ஆம் வீடுகளில் இருப்பின் மனையோகம் உண்டு.

நான்காம் வீட்டின் அதிபதி லக்கினத்திற்கு 3,6,8,12 ஸ்தானங்களில் அமைந்து குரு செவ்வாய் பார்வை அல்லது சேர்க்கை ஏற்பட்டிருப்பின் வீடு, மனை யோகம் ஏற்படும் இருப்பினும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது.

செவ்வாய் 6,8,12ஆம் ஸ்தானங்களில் இருந்து குரு பார்வை அல்லது சேர்க்கை இல்லாமல் இருந்தால் ஜாதகருக்கு வீடு அமைவது கடினம்.

சுக்கிரன்-ராகு இணைந்து 11ஆம் வீட்டில் அமைந்தால் வாஸ்து இல்லாத வீடு கிட்டும். வேற்று மதத்தவர் அல்லது இனத்தவர் (அந்நியர்) அல்லது பெண்களால் சொத்து அமையும்.

சுக்கிரன்-குரு, லக்கின பாவகத்தில் அல்லது 7ஆம் வீட்டில் சேர்க்க பெற்றிருந்தால் பணவசதி உண்டு. நல்ல ஆடம்பரமான வீடு அமையும்.

4ல் ராகு அமைய பெற்றவர்களுக்கு நிலையான வீடு அமைவது கடினம், அவர்கள் தன உறவினர்கள் பெயரில் வீடு வாங்கிக்கொள்வது நல்லது. அப்படி இல்லையென்றால் வாஸ்து குறைபாடு உள்ள வீடு, வீடு கட்டி குடிப்போகாமல் வாடகைக்கு விடுவது நல்லது.

4ஆம் பாவகாதிபதி வக்கிரம் பெற்று 5ஆம் வீட்டில் அமர்ந்திருந்தாள் பூர்விக சொத்துக்களுக்கு தடை உண்டாகும். வீட்டினை விற்று விடுவது நல்லது.

குருவும், சந்திரனும் கேந்திரத்தில் கெடாமல் இருந்தால் வீடு மனையோகம் உண்டு.

சுக்கிரன் 6,12ஆம் ஸ்தானங்களில் இருந்தால் ஏதாவது ஒரு காலகட்டத்தில் வீடு மனை யோகம் உண்டாகும்.

4ஆம் வீட்டின் அதிபதி கிரகம் லக்கினத்திற்கு 6,8,12க்குரிய நட்சத்திர சாரம் பெற்றிருந்தால் வீடு வாசல் அமைந்தாலும் திருப்தியாக இருக்காது.

நான்காம் பாவாகதிபதி ராகு கேதுவுடன் சேர்ந்து 6,8,12ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வீடு வாங்காமல் இருப்பது சிறந்தது. தன் மனைவி, மகன், மகள் பெயரில் வீடு வாங்கிக்கொள்வது நல்லது.

4ஆம் அதிபதி 10ல் இருந்தால் வேலை செய்யும் அலுவலகத்தின் வீடுகளில்(quarters house) வசிக்க வேண்டி வரும்.

நான்காம் வீட்டின் அதிபதி 12ஆம் வீட்டில் ராகு கேது சேர்க்கை பெற்றிருந்தால் வீடு அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும்.

லக்கினாதிபதி உச்சம் பெற்று கேந்திர கோணங்களில் இருந்தால் சகல வசதிகளுடன் கூடிய வீடு அமையும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்