குளியலறை வாஸ்து குறிப்புகள்

குளியலறை வாஸ்து குறிப்புகள்Bathroom Vastu in Tamil – ஒரு வீட்டினுள் வாஸ்து சாஸ்திரப்படி எந்த திசையில் சரியாக குளியலறை அமைக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

குளியலறை வாஸ்து குறிப்புகள்
குளியலறை வாஸ்து குறிப்புகள்

வீடு எந்த திசை வாசலாக இருந்தாலும் சரி குளியலறை கிழக்கு திசையில் அமைத்துக்கொள்வது சிறப்பு.

கிழக்கு திசையில் அமைக்க முடியாதவர்கள் மாற்றாக வடமேற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் அமைத்துக்கொள்ளலாம்.

வடமேற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் குளியலறை அமைக்க வளமான வாழ்வு உண்டாகும்.

தென்மேற்கு படுக்கை அறையுடன் இணைத்து குளியலறை அமைக்க கூடாது. மேலும் தென்மேற்கில் குளியலறை அமைக்க கடன் பிரச்சனைகள், நோய் தொற்று உண்டாகும்.

படுக்கை அறையுடன் சேர்த்து குளியலறை அமைக்க விரும்புபவர்கள் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு திசையில் அமைத்துக்கொள்ளலாம்.

எந்த திசை நோக்கி குளிப்பது

கிழக்கு திசை நோக்கி குளிப்பது நல்லது உயர்பதவி, புகழ், அந்தஸ்து கிடைக்கும்.

தெற்கு திசை நோக்கி குளிக்கக்கூடாது தீய எண்ணங்கள் உண்டாகும். ஞாபக மறதி உண்டாகும்.

மேற்கு திசை நோக்கி குளிக்கக்கூடாது வருமானம் தடை உண்டாகும். உடல் ஆரோக்கியம் கெடும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்