ஜென்ம நட்சத்திர குறியீடு மற்றும் உருவம்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

ஜென்ம நட்சத்திர குறியீடு மற்றும் உருவம் (Nakshatra Symbols) – ஜென்ம நட்சத்திரம் என்பது நாம் பிறக்கும்போது கோச்சார சந்திரன் எந்த நட்சத்திர பாதத்தில் நிற்கிறதோ அந்த நட்சத்திரமே ஜென்ம நட்சத்திரம் ஆகும். நம் முன்னோர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கென குறியீடுகள், உருவங்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

ஜென்ம நட்சத்திர குறியீடு மற்றும் உருவம்
ஜென்ம நட்சத்திர குறியீடு மற்றும் உருவம்

அந்த உருவங்களை நாம் அன்றாட தேவை, தொழிலுக்கு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம். பின்வரும் பதிவில் 27 நட்சத்திர குறியீடுகள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோம்.

27 நட்சத்திர குறியீடுகள் (Nakshatra Symbols)

1. அஸ்வினி – குதிரைத் தலை, குதிரை உருவம்.
2. பரணி – மண் பாத்திரம், அடுப்பு, முக்கோண வடிவம்.
3. கிருத்திகை – கத்தி, வாள், ஹோம தீ ஜூவாலை.
4. ரோகிணி – தேர், வண்டி, கோவில், ஆலமரம், சக்கரம்.
5. மிருகசீரிஷம் – மான் தலை, தேங்காயின் கண்.
6. திருவாதிரை – மனித தலை, வைரம், நீர்த்துளி.
7. புனர்பூசம் – வில், அம்புக்கூடு.
8. பூசம் – தாமரை, புடலம் பூ, அம்பு, பசுவின் மடி.
9. ஆயில்யம் – சர்ப்பம், அம்மி.

10. மகம் – வீடு, பல்லக்கு, நுகம்.
11. பூரம் – கட்டிலின் இரு கால்கள், சங்கு, மெத்தை.
12. உத்திரம் – கட்டில் கால்கள், மெத்தை.
13. ஹஸ்தம் – கைகள், உள்ளங்கை.
14. சித்திரை – முத்து, ரத்தினக் கற்கள்.
15. சுவாதி – புல்லின் நுனி, அசையும் தீபச்சுடர்.
16. விசாகம் – முறம், தோரணம், பானை செய்யும் சக்கரம்.
17. அனுஷம் – குடை, மலரும் தாமரை, வில் வளைவு.
18. கேட்டை – குடை, குண்டலம், ஈட்டி.

19. மூலம் – அங்குசம், சிங்கத்தின் வால், யானை தும்பிக்கை.
20. பூராடம் – விசிறி, முறம், கட்டில் கால்கள்.
21. உத்திராடம் – யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்.
22. திருவோணம் – காது, மூன்று பாதச்சுவடுகள், அம்பு.
23. அவிட்டம் – மிருதங்கம், உடுக்கை.
24. சதயம் – பூங்கொத்து, வட்ட வடிவம்.
25. பூரட்டாம் – கட்டிலின் இரு கால்கள், வாள், இரு மனித முகங்கள்.
26. உத்திரட்டாம் – கட்டில் கால்கள், இரட்டையர்கள்.
27. ரேவதி – மீன், மத்தளம்.

தெரிந்துகொள்க 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்