Skip to content
Home » ஜோதிடம் » முகூர்த்த சுத்தம் நல்ல நாள் பார்ப்பது எப்படி?

முகூர்த்த சுத்தம் நல்ல நாள் பார்ப்பது எப்படி?

முகூர்த்த சுத்தம் – நாம் இந்த பதிவில் நல்ல நாள் பார்ப்பது எப்படி? மற்றும் முகூர்த்த சுத்தம் என்றால் என்ன? முகூர்த்த தினம் எப்படி கண்டறிவது என்று பார்ப்போம். இதன் மூலம் நாம் ஒரு புதிய செயலை தொடங்கவும், தொடங்கிய செயலில் வெற்றி பெறவும், புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் இருக்கிறதா என்று காண என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போம்.

முகூர்த்த சுத்தம் நல்ல நாள் பார்ப்பது எப்படி
முகூர்த்த சுத்தம் நல்ல நாள் பார்ப்பது எப்படி

முதன்மையாக நான் கூற விரும்புவது சுப முகூர்த்தம் குறிக்க நாள், திதி, நட்சத்திரம், மற்றும் லக்கின சுத்தமாக அமைந்தாலே ஓரளவுக்கு போதுமானது தான். இங்கு லக்னம் என்பது முகூர்த்த லக்னம் ஆகும். இருப்பினும் பாரம்பரியபடி என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்று பார்ப்போம்.

முகூர்த்த சுத்தம் குறிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

அன்றைய தினம், கரிநாள் மற்றும் தனிய நாட்களாக இருக்க கூடாது.

சமநோக்கு நாளாக இருந்தால் மத்திம பலன், மேல்நோக்கு நாள் நல்ல பலனை தரும். (இந்த விதி வீடு கட்ட துவங்கும் பணி, போர் போடுவது, கிணறு வெட்டுவது போன்றவற்றில் மாறுபடும்.)

சுப நிகழ்ச்சி நடக்க இருக்கும் தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசையோ அல்லது இரண்டு பௌர்ணமியோ வரக்கூடாது. ஜோதிட விதிப்படி அவை சூன்ய மாதங்கள் எனப்படும்.

Read More: திருமண சுப முகூர்த்தம் குறித்தல்

முகூர்த்த குறித்த தினத்தில் சுப கிரகங்களான குருவும் சுக்கிரனும் அஸ்தமனம், வக்கிரம் நிலையில் இல்லாமல் இருக்க வேண்டும்.

சுப முகூர்த்தம் குறித்த நேரம் கௌரி பஞ்சாங்கப்படி சுபவேளையாக இருக்க வேண்டும்.

சுப ஹோரை காலமாக இருத்தல் நல்லது.

அன்றைய தினத்தில் குறித்த முகூர்த்தம், நடத்தப்படும் சுபகாரியத்திற்கு தகுந்தவாறு அமைய வேண்டும்.

குறிப்பு: சுப முகூர்த்தம் குறிக்க நாம் பின்பற்ற வேண்டிய முறைகளின்படி பார்த்தால் எவருக்கும் சுப முகூர்த்தம் தினம் அமையாது என்பது உண்மைதான். ஆகவேதான் முதன்முதலாக நான் கூறியது, சுப முகூர்த்தம் குறிக்க நாள், திதி, நட்சத்திரம், மற்றும் லக்கின சுத்தமாக அமைந்தாலே ஓரளவுக்கு போதுமானது தான். இங்கு லக்னம் என்பது முகூர்த்த லக்னம் ஆகும்.

இதிலும் லக்னம் மற்றும் லக்கினத்திற்கு 7ஆம் வீடும், 8ஆம் வீடும் கண்டிப்பாக எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.

இந்த பதிவினை அனைவரும் தெரிந்துகொள்வதற்காக பதிவிட்டுள்ளேன். மேற்படி குழப்பங்கள் இருப்பின் நல்ல ஜோதிடரை சென்று ஆலோசிக்கவும்.

நன்றி வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

தெரிந்து கொள்க

Video: அடிப்படை ஜோதிடம் கற்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்