Skip to content
Home » ஜோதிடம் » பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?

பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?

பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?(panchangam in tamil) – பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை கொண்டது. பஞ்ச என்றால் ஐந்து என்றும் அங்கம் என்பது உறுப்பு ஆகும். அவை 1) வாரம் 2) திதி 3) நட்சத்திரம் 4) யோகம் 5)கரணம்

பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?

1) கிழமை

பஞ்சாங்கத்தில் வாரம் என்பது கிழமை ஆகும். 7 கிழமைகளில் ராகு கேது தவிர மற்ற 7 கிரகங்களுக்கு ஆதிக்கம் இருப்பதை காட்டும். அவை

ஞாயிறு கிழமை – சூரியன்
திங்கள் கிழமை – சந்திரன்
செவ்வாய் கிழமை – செவ்வாய்
புதன் கிழமை – புதன்
வியாழன் கிழமை – குரு
வெள்ளி கிழமை – சுக்கிரன்
சனி கிழமை – சனி

2) திதி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரமாகும். அமாவாசையில் சூரியன் சந்திரன் இணைந்திருப்பது. பௌர்ணமி என்பது சூரியனும் சந்திரனும் 180 பாகையில் எதிர் எதிர் இருப்பது. சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் அமாவாசையில் இருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் விலகி செல்ல ஒரு திதிக்கு 12 பாகை ஆகும். இவ்வாறு 30 திதிகள் கணக்கிடப்படுகிறது. அவை வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று அழைப்பர். அவை,

Read More: நல்ல சுப திதிகள் எவை

வளர்பிறை திதிகள் அமாவாசையிலிருந்து 1) பிரதமை 2)துவிதியை 3)திருதியை 4)சதுர்த்தி 5)பஞ்சமி 6)சஷ்டி 7)சப்தமி 8)அஷ்டமி 9)நவமி 10)தசமி 11)ஏகாதசி 12)துவாதசி 13)திரயோதசி 14)சதுர்தசி 15)பௌர்ணமி மொத்தம் 15 திதிகள்

அதேபோல தேய்பிறை திதிகள் பௌர்ணமியிலிருந்து 1) பிரதமை 2)துவிதியை 3)திருதியை 4)சதுர்த்தி 5)பஞ்சமி 6)சஷ்டி 7)சப்தமி 8)அஷ்டமி 9)நவமி 10)தசமி 11)ஏகாதசி 12)துவாதசி 13)திரயோதசி 14)சதுர்தசி 15)அமாவாசை ஆகும் ஓதம் 30 திதிகள் உள்ளன.

3) நட்சத்திரங்கள்

பஞ்சாங்கத்தில் 3வது அங்கமாக நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஜோதிடத்தில் நட்சத்திரங்கள் பங்கு மிக முக்கியமானதாகும். ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறதோ அதற்கேற்ப நன்மை தீமைகளை வழங்குகின்றன.

மேலும் சுப முகூர்த்தம் குறிக்க, திருமண நிச்சயம், காது குத்துதல், திருமண முகூர்த்தம் குறிக்க, கிரகப்பிரவேசம், வீடு கட்ட துவங்குதல், இறந்தவர்களின் அடைப்பு காலம், கடன் வாங்குதல், கடன் கொடுத்தால் போன்ற பல விசயங்களில் நட்சத்திரங்களின் பங்கு முக்கியமானதாகும். அவற்றில் பொதுவாக நல்ல நட்சத்திரங்கள், தீதுறு நட்சத்திரங்கள் (தீமை) என்று பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன அவை,

1)அஸ்வினி 2)பரணி 3)கார்த்திகை 4)ரோகினி 5)மிருகசீரிடம் 6)திருவாதிரை 7)புனர்பூசம் 8)பூசம் 9)ஆயில்யம்
10)மகம் 11)பூரம் 12)உத்திரம் 13)ஹஸ்தம் 14)சித்திரை 15)சுவாதி 16)விசாகம் 17)அனுஷம் 18)கேட்டை
19)மூலம் 20)பூராடம் 21)உத்திராடம் 22)திருவோணம் 23)அவிட்டம் 24)சதயம் 25)பூரட்டாதி 26)உத்திரட்டாதி 27)ரேவதி

4) யோகம்

பஞ்சாங்கத்தில் 4வது அங்கமாகும். யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரமாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியன் உள்ள தூரம் மற்றும் சந்திரன் உள்ள தூரம் இரண்டையும் கூட்டினால் கிடைப்பது ஆகும். யோகம் மொத்தம் 27 ஆகும். அவை,

1)விஷ்கம்பம் 2)ப்ரீதி 3)ஆயுஷ்மான் 4)சௌபாக்யம் 5)சோபனம் 6)அதிகண்டம் 7)சுகர்மம் 8)திருதி 9)சூலம் 10)கண்டம் 11)விருத்தி 12)துருவம் 13)வியாகாதம் 14)ஹர்ஷனம் 15)வஜ்ரம் 16)சித்தி 17)வியதீபாதம் 18)வரீயான் 19)பரீகம் 20)சிவம் 21)சித்தம் 22)சாத்தியம் 23)சுபம் 24)சுப்பிரமம் 25)பிராம்யம் 26)ஐந்திரம் 27)வைதிருதி

5) கரணம்

கரணம் பஞ்சாங்கத்தில் 5வது அங்கமாகும். ஒரு திதியில் பாதி அளவை குறிப்பது கரணம் ஆகும். ஏற்கெனவே ஒரு திதி என்பது 12 பாகை என்று பார்த்த்தோம், எனவே திதி என்பது 6 பாகை ஆகும். மொத்தம் 11 வகை கரணம் உண்டு. அவை
1)பவம் 2)பாலவம் 3)கௌலவம் 4)தைத்துளை 5)கரசை 6)வனிசை 7)பத்திரை 8)சகுனி 9)சதுஷ்பாதம் 10)நாகவம் 11)கிம்ஸ்துக்னம்

இந்த ஐந்து அங்கங்களையும் கொண்டு பஞ்சாங்கம் பார்க்க வேண்டும். உங்கள் பஞ்சாங்கத்தில் வாக்கியமாக இருந்தாலும் சரி திருகணிதமாக இருந்தாலும் சரி ஆங்கில தேதி மற்றும் தமிழ் தேதி கொடுக்கப்பட்டிருக்கும்.

ஜோதிடப்படி காலை சூரிய உதயம் முதல் அடுத்த சூரிய உதயம் வரை ஒரு நாள் ஆகும். சூரிய உதயம் காலை ஆறு மணி எனில் அதுவே அன்றையநாள் ஆகும். 6-12(பகல்) வரை முன்பகல் காலம் 12-6(பகல்)பிற்பகல் காலம் ஆகும். 6-12(இரவு) முன்னிரவு காலம் 12-6(இரவு) பின்னிரவு காலம்.

தமிழ் தேதியில் அன்றையநாளில் எது வரை நட்சத்திரம் உள்ளது அடுத்த நட்சத்திரம் தொடங்கும் நேரமும் மற்றும் கிழமை, கரணம், திதி, யோகம் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை கொண்டு கணக்கீடுக

மேலும் நல்ல நாள் பார்ப்பது எப்படி? திருமண சுப முகூர்த்தம் குறிப்பது எப்படி என்று இந்த லிங்க் ஐ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்க

நன்றி! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

தெரிந்துகொள்க 

Video: Learn Basic Astrology in Tamil

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்