ஜென்ம நட்சத்திர குறியீடு மற்றும் உருவம் (Nakshatra Symbols) – ஜென்ம நட்சத்திரம் என்பது நாம் பிறக்கும்போது கோச்சார சந்திரன் எந்த நட்சத்திர பாதத்தில் நிற்கிறதோ அந்த நட்சத்திரமே ஜென்ம நட்சத்திரம் ஆகும். நம் முன்னோர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கென குறியீடுகள், உருவங்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

அந்த உருவங்களை நாம் அன்றாட தேவை, தொழிலுக்கு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம். பின்வரும் பதிவில் 27 நட்சத்திர குறியீடுகள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோம்.
27 நட்சத்திர குறியீடுகள் (Nakshatra Symbols)
1. அஸ்வினி – குதிரைத் தலை, குதிரை உருவம்.
2. பரணி – மண் பாத்திரம், அடுப்பு, முக்கோண வடிவம்.
3. கிருத்திகை – கத்தி, வாள், ஹோம தீ ஜூவாலை.
4. ரோகிணி – தேர், வண்டி, கோவில், ஆலமரம், சக்கரம்.
5. மிருகசீரிஷம் – மான் தலை, தேங்காயின் கண்.
6. திருவாதிரை – மனித தலை, வைரம், நீர்த்துளி.
7. புனர்பூசம் – வில், அம்புக்கூடு.
8. பூசம் – தாமரை, புடலம் பூ, அம்பு, பசுவின் மடி.
9. ஆயில்யம் – சர்ப்பம், அம்மி.
10. மகம் – வீடு, பல்லக்கு, நுகம்.
11. பூரம் – கட்டிலின் இரு கால்கள், சங்கு, மெத்தை.
12. உத்திரம் – கட்டில் கால்கள், மெத்தை.
13. ஹஸ்தம் – கைகள், உள்ளங்கை.
14. சித்திரை – முத்து, ரத்தினக் கற்கள்.
15. சுவாதி – புல்லின் நுனி, அசையும் தீபச்சுடர்.
16. விசாகம் – முறம், தோரணம், பானை செய்யும் சக்கரம்.
17. அனுஷம் – குடை, மலரும் தாமரை, வில் வளைவு.
18. கேட்டை – குடை, குண்டலம், ஈட்டி.
19. மூலம் – அங்குசம், சிங்கத்தின் வால், யானை தும்பிக்கை.
20. பூராடம் – விசிறி, முறம், கட்டில் கால்கள்.
21. உத்திராடம் – யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்.
22. திருவோணம் – காது, மூன்று பாதச்சுவடுகள், அம்பு.
23. அவிட்டம் – மிருதங்கம், உடுக்கை.
24. சதயம் – பூங்கொத்து, வட்ட வடிவம்.
25. பூரட்டாம் – கட்டிலின் இரு கால்கள், வாள், இரு மனித முகங்கள்.
26. உத்திரட்டாம் – கட்டில் கால்கள், இரட்டையர்கள்.
27. ரேவதி – மீன், மத்தளம்.
தெரிந்துகொள்க
- 27 நட்சத்திர பலன்கள்
- நல்ல நட்சத்திரங்கள்
- தீதுறு நட்சத்திரங்கள்
- நல்ல நாள் பார்ப்பது எப்படி?
- திருமண சுப முகூர்த்தம் குறிப்பது எப்படி
- நவகிரகங்கள் நிறங்கள்
- கிரகங்கள் நட்பு பகை சமம்
- Read All Astrology Articles in English
- Video: Learn Basic Astrology in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்