விருட்ச பொருத்தம்
இந்த பதிவில் விருட்ச பொருத்தம் என்றால் என்ன? அதனை பார்ப்பது எப்படி? ஏன் விருட்ச பொருத்தம் பார்க்கப்படுகிறது என்று தெரிந்து கொள்வோம். இதனை விருட்சப் பொருத்தம்(Virutcha Porutham) அல்லது பால் பொருத்தம் என்று கூறலாம்.

விருட்ச பொருத்தம்
அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்குண்டான மரங்கள் உள்ளன, அதனை பால் மரங்கள் மற்றும் பாலில்லாத மரங்கள் என்று பிரிக்கலாம். ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் பொருத்தம் உண்டு.
விருட்ச பொருத்தம் ஏன் பார்க்கப்படுகிறது?
10 முக்கிய திருமண பொருத்தம் பார்க்கையில் விருட்சப் பொருத்தம் இடம் பெறவில்லை. ஏனென்றால் விருட்சப் பொருத்தம் என்பது மகேந்திர பொருத்தம் இல்லாதவர்களுக்கு பார்க்கலாம். இது புத்திர பாக்கியத்தை குறிக்கும். ஆண், பெண் இருவரில் யாருக்காவது ஒருவருக்கு பால் மரமாக இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
இங்கு பால் மரங்கள் பால் இல்லாத மரங்கள் பற்றி பார்ப்போம்.
பால் இருக்கும் மரங்கள்(விருட்சம்)
கார்த்திகை – அத்தி
ரோகிணி – நாவல்
பூசம் – அரசு
ஆயில்யம் – புன்னை
மகம் – ஆல்
பூரம் – பலா
உத்தரம் – அலரி
அஸ்தம் – வேலம்
கேட்டை – பிராய்
மூலம் – மா
பூராடம் – வஞ்சி
உத்ராடம் – பலா
திருவோணம் – எருக்கு
பூரட்டாதி – தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத மரங்கள்(விருட்சம்)
அசுவினி – எட்டி
பரணி – நெல்லி
மிருகசீரிஷம் – கருங்காலி
திருவாதிரை – செங்கருங்காலி
புனர்பூசம் – மூங்கில்
சித்திரை – வில்வம்
சுவாதி – மருதம்
விசாகம் – விளா
அனுஷம் – மகிழ்
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
உத்ரட்டாதி – வேம்பு
குறிப்பு
பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால், மகேந்திர பொருத்தம் பார்க்கப்படும். மகேந்திர பொருத்தம் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு அமைந்துள்ள இடம் இவைகள் ஆராயப்படும்.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Read More:-
- நட்சத்திர பொருத்தம்
- ராசி பொருத்தம் விளக்கம்
- திருமண பொருத்தம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
- ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Read All Astrology Articles in English