Bharathiyar Quotes in Tamil | பாரதியார் மேற்கோள் வரிகள் | Bharathiyar Famous Lines – இந்த பதிவில் மகாகவி பாரதியார் கூறிய சிறந்த வரிகளின் தொகுப்பை காணலாம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

1. கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.
2. பெற்றோர் தேடிய பணத்தில் வாழ்பவனை விட, தன் உழைப்பில் வாழ்பவனே உத்தமன்.
3. வேலையின்றி சோம்பித் திரிபவன் உலகில் ஏளனத்திற்கு ஆளாவான்.
4. பிச்சை ஏற்பவன் மான அவமானத்தை விட்டு விடுகிறான்.
5. உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது அதை வெல்ல ஆசைகளை விடுங்கள்.
6. மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்.
7. வாழ்வில் நேர்மையைப் பின்பற்றினால், கால்கள் சரியான பாதையில் நடக்கத் தொடங்கி விடும்.
8. புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே.
9. பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டில் நல்ல வளர்ச்சியோ, மாற்றமோ உண்டாகாது.
10. அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும்.
11. ஒருவரது உள்ளத்தில் நேர்மையும்,உண்மையும் இருக்கிறதா என்பதை அவரது பேச்சைக் கொண்டே கணித்து விடலாம்.
12. நான் என்ற சொல்லுக்கு ‘சுயலாபம்’ என்று பொருள். அதை நீக்கி விட்டால் மனித சமுதாயம் எல்லையற்ற தெய்வீக நிலையை அடையும்.
13. மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது.
Read More:- ஞான பாரதியார் பாடல்கள் | பாரதியார் தேசிய பாடல்கள்
14. முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதையே நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.
15. எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
16. பயம், சந்தேகம், சோம்பல் முதலிய குணங்களை அடியோடு விட்டு விடுங்கள்.
17. திருமணமான பெண்ணைக் கணவர் சுதந்திரமுள்ளவளாக நடத்த வேண்டும். அவளின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
18. தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு.
19. கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயனில்லை. இனி நடக்க இருப்பதை சிந்தித்து செயல்படுபவனே புத்திசாலி.
20. உலகில் அநியாயம் பெருகி விட்டது என்று கருதி யாரும் நியாயத்தைப் புறக்கணிப்பது நல்லதல்ல.
Bharathiyar Quotes in Tamil – பாரதியார் மேற்கோள் வரிகள்
21. தெய்வம் விட்டது நல்வழி என்று எப்போதும் நினையுங்கள். ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்.
22. துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்.
23. தெய்வத்தை கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதும். தெய்வத்தின் அருள் உண்டாகும்.
24. வீட்டிலும்,வெளியிலும் எங்கும் எப்போதும் மனிதன் நேர்மையைப் பின்பற்றி வாழ வேண்டும்.
25. கல்வி அளிப்பதோடு குழந்தைகளின் உடல்நலனுக்கான விளையாட்டுப் பயிற்சிகளையும் அளிப்பது அவசியம்.
26. பிறருக்கு உதவி செய்வது நல்லது. அதிலும் ஏழைக்குழந்தையின் கல்விக்கு உதவுவது மிகவும் நல்லது.
27. உங்களை நீங்களே திருத்திக் கொள்ள தயங்காதீர்கள். திருந்தி விட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.
Read More:- ஞான பாரதியார் பாடல்கள் | பாரதியார் தேசிய பாடல்கள்
28. உள்ளத்தில் கர்வம் நுழைந்து விட்டால், தர்மத்தின் பிடியில் இருந்து மனிதன் நழுவி விடுவான்.
29. சென்றதை சிந்திப்பதை விட, இனிமேல் நடக்க இருப்பதைச் சிந்திப்பவனே புத்திசாலி.
30. தன்னை விட பலவீனமானவனுக்கு அநியாயம் செய்தால் தப்பில்லை என்று ஒருவன் நினைக்கும் வரை கலியுகம் இருக்கும்.
Bharathiyar Short Quotes in Tamil
31. மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை. பயம் என்னும் பெயரில் மனதிற்குள்ளேயே இருக்கிறது.
32. நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.
33. கண்ணைத் திறந்து குழியில் விழுவது போல, மனிதன் நல்லதை அறிந்தும் தீமையை விட முடியாமல் தவிக்கிறான்.
34. பேச்சு ஒரு விதமாகவும், செயல் வேறுவிதமாகவும் நடப்போரின் உறவைக் கனவிலும் நினைக்கவே கூடாது.
35. தெளிந்த அறிவும்,இடைவிடாத முயற்சியும் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் தொட்டதெல்லாம் துலங்கும்.
36. மற்றவர் உள்ளத்தில் உங்களைப் பற்றிய தவறான மதிப்பு உண்டாவதற்கு ஒருபோதும் இடம் அளித்து விடாதீர்கள்.
37. மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமாகும்.
38. பெரிய பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகு தான் சிறிய உண்மைகள் புரிய ஆரம்பிக்கின்றன.
39. தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. உனக்கு எதிலும் வெற்றியே உண்டாகும்.
40. கடமையைச் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பவனைக் காண்பது நமக்கு தீமையையே உண்டாக்கும்.
41. கொடுத்த வேலையைச் செய்யாமல் ஆதாயம் பெற முயல்பவன் பிச்சைக்காரனை விட கேவலமானவன்.
42. பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.
43. பழி வாங்கும் எண்ணத்துடன் பிறருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
44. மனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.
45. அதர்மம் இருந்தால் தர்மத்தின் அருமை புரியும். அதனால்
தர்மம் இருக்கும் வரை உலகில் அதர்மமும் இருந்தே தீரும்.
46. எரியும் விளக்கு இருந்தாலும் அதைக் காண கண்கள் வேண்டும். அதுபோல உதவி செய்ய பலர் உடனிருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.
47. எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.
48. எந்த தொழிலையும் முடியாது என்று கைவிடாதே. திறமையுள்ளவனிடம் பணியாளனாக இருந்தாவது அந்த தொழிலைக் கற்றுக் கொள்.
49. பிறருடைய பொருளை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் கூட பாவம் தான்.
50. உழைத்து வாழ்வது தான் சுகம். வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
Confidence Bharathiyar Quotes
51. பொய்யான நடிப்பையும், முகஸ்துதியாக பேசுவதையும் பொருட்படுத்தக் கூடாது. ஆனால், இப்படிப்பட்டவர்களையே தலையில் தூக்கி வைத்து உலகம் கொண்டாடுகிறது.
52. சோம்பலை புறக்கணியுங்கள். உழைப்பின்றி உலகில் எதையும் சாதிக்க முடியாது.
53. உடல் பலமுடன் இருக்க விரும்பினால், முதலில் மனதை வலிமையாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
54. உழைப்பதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
55. குறிக்கோளில் உறுதி மிக்கவனே லட்சியவாதி. அவனது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
56. தைரியம் என்ற சொல்லுக்கு அறிவு, துணிவு என்னும் இரு அர்த்தம் உண்டு.
57. ஒரு மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனுக்கு நட்பாக மாறி விடும்.
58. மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி.
59. எல்லா சாஸ்திரமும் ஒரே உண்மையை போதித்தாலும், எல்லாருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.
Read More:- ஞான பாரதியார் பாடல்கள் | பாரதியார் தேசிய பாடல்கள்
60. எந்த செயலுக்கும் காலம் ஒத்துழைக்காவிட்டால், அதனை நிறைவேற்றுதல் என்பது சாத்தியமாகாது.
61. மூலைக்கு மூலை உடற்பயிற்சி சாலை அமைத்தால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.
62. உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்.
63. சுயநலத்தை விடு. தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயத்தைப் பின்பற்று.
64. நடைமுறைக்கு ஒத்து வராத விஷயத்தை ஞானம் என்று சொல்வது பிழை.
65. பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் பெருகி விட்டால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை குறையும்.
66. செல்வம் தேட உலகில் பல வழிகள் இருந்தாலும், அவரவர் தகுதியறிந்து தேடுவதே நல்லது.
67. பிறர் நம்மைத் தாழ்வாகக் கருதவோ, நடத்தவோ இடம் அளிக்கக்கூடாது.
68. தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது.
69. தன்னம்பிக்கை, உற்சாகம் இரண்டும் இருந்தால் உடம்பில் எந்த வியாதியும் நுழைய முடியாது.
70. குற்றத்துக்கு காரணம் அறியாமையே. குற்றம் செய்யாமல் இருக்க விரும்பினால் நல்லவர்களுடன் பழக வேண்டும்.
Bharathiyar Famous Lines
71. அன்பு ஒன்றினால் மட்டுமே உலகிலுள்ள துன்பத்தை எல்லாம் மாற்ற முடியும்.
72. மனிதன் சம்பாதித்து கொள்ள வேண்டிய குணங்களில் மிக முக்கியமானது பொறுமை.
73. கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரை பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள்.
74. துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே.
75. ஊர் ஒற்றுமை கோவில் வழிபாட்டாலும், குடும்ப ஒற்றுமை வீட்டு வழிபாட்டாலும் பலப்படும்.
76. அன்பு ஒன்றே உலகத்திலுள்ள துன்பத்தை எல்லாம் மாற்றும் வலிமை படைத்தது.
77. கல்வியையும், தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு.
78. தர்மத்தை சூது கவ்வினாலும், இறுதியில் வெற்றி பெறுவது தர்மமே ஆகும்.
79. அச்சம் என்பது மரணத்திற்கு சமம், அது இருக்கும் வரையில் நீ அறிவாளியாக இருக்க முடியாது.
80. ஆலம் விழுது போல, பிள்ளைகள் பெற்றோரை தாங்கிப் பிடிக்க வேண்டும்.
81. யாருக்கும் பயந்து நமக்குத் தெரிந்த உண்மைகளை மறைக்கவோ, திரிக்கவோ கூடாது.
82. பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், பெரியவர்களிடம் மட்டுமே இருக்கும்.
83. தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் பயனுள்ளதை செய்வதே உழைப்பு.
84. ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. நடைமுறைக்கு வராத கருத்தை, அறிவு என்று சொல்லக்கூடாது.
85. நேர்மையும், துணிச்சலும் இருந்தால் தான் நேரான பாதையில் செல்ல முடியும்.
86. எல்லா மனித முயற்சியிலும் ஆரம்பத்தில் தவறு ஏற்படுவது இயல்பானதே.
87. பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டிலோ, வெளியிலோ எந்தச் செயலும் வெற்றி பெறாது.
88. காலம் பணத்தைப் போல விலை மதிப்பு கொண்டது. ஒருபோதும் பொழுதை வீணாகக் கழிப்பது கூடாது.
89. இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக் கொள்ள புத்திசாலியின் மனம் விரும்புவதில்லை.
90. ஜாதியின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பது பாவம். நீதிநெறி தவறாத நல்லவர்களே உயர் ஜாதி. மற்றவர்கள் தாழ்ந்தவர்கள்.
Read More:-
- பாரதியார் பாடல்கள் குழந்தை
- ஞான பாடல்கள் பாரதியார்
- பாரதியார் பாடல்கள் பெண்கள்
- பாரதியார் விடுதலை பாடல்கள்
- பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்
- Read More:- Amma kavithai in Tamil | Amma Quotes in Tamil
- Video: அம்மா பற்றிய வரிகள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்