ராகு பகவான் வரலாறு
இந்த பதிவில் ராகு பகவான் வரலாறு, ராகு தரும் நன்மைகள் மற்றும் ராகு பகவான் தொழில்கள் ஆகியவற்றை காண்போம். உபஜெய ஸ்தானத்தில் ராகு இருந்தால் என்ன பலன் என்றும் தெரிந்துகொள்வோம்.
ராகு பகவான் வரலாறு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது, அமுதத்தை உண்ண தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. போட்டியைத் தீர்த்துவைக்க ஸ்ரீ மகாவிஷ்ணு மோகினி(பெண்) அவதாரம் எடுத்து அமுதத்தை தேவர்களுக்கு பெரும்பகுதியை வழங்கிக் கொண்டிருந்தார்.
அவ்வாறு வழங்குவதை கண்டா ஸ்வர்பானு என்கிற அசுரன் தனக்கு அமுதம் கிடைக்காது என்று எண்ணி சூரியன் மற்றும் சந்திரன் இருவருக்குமிடையே தேவர் ரூபமெடுத்து அமுதத்தை வாங்கி உண்டார்.
இதை சூரியன் மற்றும் சந்திரன் கண்டுபிடித்து ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் எடுத்துச் சொன்னார்கள். ஸ்ரீ மகா விஷ்ணு தன் கையிலிருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதனால் தலை முதல் மார்புவரை உள்ள பகுதி தனியாகவும், உடல் தனியாக வேறு இடத்தில் விழுந்தது.
தனியாக விழுந்து கிடந்த உடல் பாகத்தை மினி என்ற என்கிற அந்தணர் வளர்த்து வந்தார், கேது ஞான மார்க்கங்களை அவரிடம் கற்று, ஸ்ரீ விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் செய்து பாம்பு தலையைப் பெற்று கிரக பதவியை அடைந்தார்.
சர்ப்ப தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் வகைகள் பற்றி தெரிந்து கொள்க.
சர்ப்ப தோஷம் என்றால் என்ன? | கால சர்ப்ப தோஷம் | சர்ப்ப தோஷம் திருமணம் பொருத்தம்
ராகு பகவான் தொழில்கள்
சாப்ட்வேர், ஆன்லைன் சம்பந்தமான வேலைகள், வெளிநாட்டு வேலை, தகவல் அந்நிய சகவாசம், வேற்று மொழி பேசுவதனால் சம்பாதிப்பது, மாந்திரீகம், செய்வினை செய்வது, கலப்படம் செய்யும் தொழில், இருதய சிகிச்சை நிபுணர், துப்புரவு, சர்வாதிகாரம் செய்வது, குலம், ஜாதிக்கு விரோதமான தொழில், மூங்கில் வியாபாரம் போன்றவை ராகு பகவான் தொழில்கள். இவைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேறலாம்.
ராகு தரும் நன்மைகள்
ராகு கேது என்றாலே எல்லோருக்கும் பயம்தான். ஜாதகத்தில் எவ்விடத்தில் இருந்தாலும் அந்த வீட்டின் முழு உரிமையையும் எடுத்துக்கொள்வார். ஒரு ஜாதகத்தில் 3,6,10,11ஆம் இடம் என்னும் உபஜெய ஸ்தானத்தில் ராகு இருந்தால் நற்பலனையே தருவார். அவர் என்ன தொழில் செய்தால் சிறப்பாக இருப்பார் என்று மேலே குறிப்பிட்டுள்ளோம் அதனை தெரிந்துகொண்டு நன்மை பெறவும். எல்லாவற்றையும் அனுபவித்து பின்பு மேலான ஞான அறிவையும் பெறுவார்கள்.
தெரிந்துகொள்க
- சனி பகவான் வரலாறு
- ராகு கிரக காரகத்துவம்
- கேது கிரக காரகத்துவம்
- கேது பகவான் வரலாறு
- கேது கிரகம் பற்றி தெரிந்து கொள்க
- சனி கிரக காரகத்துவம்
- நவகிரக ஸ்தலங்கள்
- Read All Astrology Articles in English