Skip to content
Home » ஜோதிடம் » கேது கிரக காரகத்துவம்

கேது கிரக காரகத்துவம்

இந்த பதிவில் கேது கிரக காரகத்துவம் என்ன என்று தெரிந்துகொள்வோம். மேலும் அதனைக்கொண்டு நம் ஜாதத்தில் கேது வலுவாக நல்ல நிலையில் இருப்பின் எவையெல்லாம் நமக்கு உகந்தது எதற்கெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவெடுக்கலாம். அதேபோல கேது ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் எதற்கெல்லாம் நாம் வீண் முயற்சி செய்யாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கலாம்.

கேது கிரக காரகத்துவம்
கேது கிரக காரகத்துவம்

கேது காரகத்துவம்

மோட்ச காரகன், தாய் வழி மூதாதையர்கள் தாத்தா பாட்டி, துண்டிப்பது, சிறிதாக்குவது, அனைத்து இறைவன் செயல் என எண்ணுவது, துறவறம், ரிஷிகள், மறைபொருள், விரக்தி.

அபின், கஞ்சா, போலியின் வடிவம், ஞானம், குறிகிய பாதை, கயிறு, ஒற்றையடி பாதை, சிறிய சந்து, கம்பிகள், நார், நூல், சணல், கயிறு, wire, மலட்டுத்தன்மை, ரகசிய சதி வலை.

ஜோதிடம், தையல்கடை, வெட்டுவது, சித்த மருத்துவம், புலனாய்வு துறை, சட்டம், தண்டனை, நெருக்கடி, பூர்விக சொத்தை இழப்பது, ஏழ்மை, புண்கள், மௌன விரதம், மதநம்பிக்கை, தத்துவஞானம், வேதாந்தம், மோட்சம், மனோபலம், தனிமையாக இருத்தல்.

விநாயகர், ஆஞ்சநேயர், மகான்கள், கிறிஸ்துவ மதம், சர்ச், வைடூரியம், மெலிந்த தேகம், மன அழுத்தம், உள்நோய், கதிரியக்க கருவி, தொற்றுநோய், குடற்புழு, குறைந்த ரத்த அழுத்தம், பேச்சு குறைபாடு, வயிற்றுவலி, கண்டுபிடிக்க முடியாத நோய்கள்.

பப்பாளி, சீத்தாப்பழம், வடமேற்கு திசை, விரக்தி, ஞானம், கபடம், சித்தபிரம்மை, துருக்கள் கல், தீர்த்த யாத்திரை, புனித பயணம், மருத்துவம், சிறு நுணுக்கமான வேலை, மந்திரசக்தி மூலம் சிகிச்சை.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்