Skip to content
Home » ஜோதிடம் » சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

சர்ப்ப தோஷம் என்றால் என்ன?

Sarpa Dosha in Tamil – சர்ப்ப தோஷம் அல்லது ராகு கேது தோஷம் என்பது ஆகியவை மனிதனுக்கு குடும்பம் மற்றும் மணவாழ்வில் மகிழ்ச்சி தரக்கூடிய பாவங்களான 1,2,5,7,8,12ஆம் வீடுகளில் இருந்தால் சர்ப்ப தோஷம் அல்லது ராகு கேது தோஷம் என்று அழைக்கப்படுகிறது.

சர்ப்ப தோஷம்
சர்ப்ப தோஷம்

லக்கினத்தில் அமர்ந்த சர்ப்பங்கள் நிலையில்லாத குணம், திருமண தாமதம், நிம்மதியற்ற வாழ்க்கையை தரும், எடுக்கும் முடிவுகளால் வருத்தம் அடைவது, மன வாழ்வில் பற்றற்ற நிலை உண்டாக்கும்.

2ல் அமர்ந்த ராகு கேது நல்ல குடும்ப சூழ்நிலையை அமைத்து கொடுக்காது பேசினால் பிரச்சனை, வாக்கு சுத்தமின்மை, வாக்கு கொடுத்தால் காப்பாற்றாமல் போய் விடும். திருமண தாமதம் உண்டாக்கும்.

தெரிந்து கொள்க சர்ப்ப தோஷம் திருமணம் பொருத்தம்கால சர்ப்ப தோஷம் | ராகு கேது தோஷ திருமண பொருத்தம்

5ஆம் வீட்டில் அமர்ந்த சர்ப்பங்கள் ஆழ்மனதில் சூழ்ச்சி வஞ்சக எண்ணத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கும், புத்திர பாக்கியத்தை தாமதப்படுத்தும், புத்திரர்களால் அமைதியற்ற நிலை உருவாகும்.

7ல் அமர்ந்த ராகு கேது சர்ப்பங்கள் மணவாழ்க்கையை பாதிக்கும். நண்பர்களிடையே சுமூக நட்பு இருக்காது, கூட்டு தொழிலால் விரையம் உண்டாகும். விரோதமான திருமண வாழக்கை அமையும். திருமணத்தில் பல்வேறு மனவருத்தமும், தடைகள், தாமதங்களுக்கு பிறகே நடைபெறும்.

8ல் அமர்ந்த ராகு கேது எனும் சர்ப்பங்கள் காலதாமதமான திருமணம், பிரச்னைகளுக்குரிய மணவாழ்க்கை ஏற்படுத்தும். மேலும் குடும்ப பிரச்சனையால் வாழும் இடத்தில் அவமானம் ஏற்படும். மேலும் ஜாதகருக்கு கீழ்த்தரமான பழக்க வழக்கத்தையும், அவமானத்துக்கு அஞ்சாதவராகவும், விஷ ஜந்துக்களால் பயம் ஏற்படும் அமைப்பு உண்டாக்கும்.

12ஆம் வீட்டில் நின்ற சர்ப்பங்கள் திருப்தியற்ற தாம்பத்தியம், அடிக்கடி குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது, களத்திரத்தின் ஆரோக்கியமின்மை மற்றும் அவற்றால் தேவையற்ற விரையங்கள் ஏற்படுத்தும்.

சர்ப்ப தோஷம் பரிகாரம், நிவர்த்தி

ராகு கேது தோஷம் பரிகாரம் நிவர்த்தி – அடிக்கடி சிவன் கோயில், அம்மன் கோயில் சென்று சர்ப்ப சாந்தி வழிபாடு செய்வது நல்லது. வாழ்வில் பிரச்சனைகளை குறைத்து நல்வழி காட்டும்.

நாக பஞ்சமி அன்று சர்ப்ப சாந்தி வழிபாடு நடக்கும் கோயிலுக்கு சென்று பூஜைக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக்கொடுத்து வழிபடு செய்து வரலாம் அல்லது அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய பிரச்சனைகள் குறையும். நாக பஞ்சமி என்பது சதுர்த்தி திதியும் பஞ்சமி திதியும் ஒன்றாக வருவது ஆகும். கோயிலில் உள்ள அர்ச்சகரிடம் கேட்டால் அவர்களே சொல்லுவார்கள். அன்றைய தினம் சென்று வழிபாடு செய்து நன்மை பெறுங்கள்.

கேள்வி பதில்கள்

ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா?

ராகு கேது தோஷம் உள்ள ஜாதகத்தை சுத்த ஜாதகத்துடன் இணைப்பது நல்லதல்ல, இருப்பினும் காதல் செய்தவர்கள், சொந்தத்தில் பெண் எடுப்பது என்கிற பொழுதில் ஜாதக கட்டம் அதாவது லக்கின பொருத்தம் மிக சிறப்பாக இருந்தால் திருமணம் செய்யலாம்.

ராகு கேது தோஷம் விதிவிலக்கு

ராகு கேது தோஷம் பரிகாரம் மற்றும் நிவர்த்தி பற்றி இந்த பதிவிலியே கூறியுள்ளோம் படித்து கொள்ளவும்.

ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை ராகு கேது தோஷம் உள்ள பையனுடன் பொருத்தலாம். சந்தேகம் இருந்தால் ராகு கேது தோஷம் திருமண பொருத்தம் பற்றி பதிவிட்டுள்ளோம் அந்த தலைப்பை பார்க்கவும்.

ராகு கேது தோஷம் ஜாதகம்

1,2,5,7,8,12 ஆம் வீடுகளில் ராகு கேது இருக்க ராகு கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷ ஜாதகம் எனலாம்.

ராகு கேது என்றால் என்ன?

அறிவியல் பூர்வமாக கூற வேண்டுமென்றால் ராகு கேது என்பவை பூமி சூரியனை சுற்றி வரும் வட்ட பாதையும் சந்திரன் பூமியை சுற்றி வரும் வட்ட பாதையும் வெட்டிக் கொள்ளும் இடமே ஆகும்.

ராகு கேது தோஷம் திருமணம்

ஏற்கெனவே ராகு கேது தோஷம் திருமண பொருத்தம் பற்றி பதிவிட்டுள்ளோம் அந்த தலைப்பை பார்க்கவும்.

Read More:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்