Skip to content
Home » ஜோதிடம் » ரஜ்ஜு பொருத்தம்

ரஜ்ஜு பொருத்தம்

ரஜ்ஜு பொருத்தம்(Rajju Porutham in Tamil) – ரஜ்ஜு பொருத்தம் அட்டவணை –  இந்த பதிவில் ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன? அதன் வகைகள்  மற்றும் அவற்றை எவ்வாறு திருமண பொருத்தத்திற்கு பார்க்க வேண்டும் என்று பார்ப்போம். பெண்ணின் மாங்கல்ய பாக்கியம் மற்றும் ஆணின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு ரஜ்ஜு தோஷம் இருக்கிறதா என பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், இந்தப் பொருத்தத்தை ஆராய்ந்து பார்த்துத்தான் திருமணம் நிச்சயிக்க வேண்டியுள்ளது.

ரஜ்ஜு பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம்

ரஜ்ஜு ஐந்து வகைப்படும்

1) சிரோரச்சு
2) கண்டரச்சு
3) உதாரரச்சு
4) ஊருரச்சு
5) பாதரச்சு

ரஜ்ஜு பொருத்தம் அட்டவணை

சிரோரச்சு

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்

கண்டரச்சு

ஆரோகணம் – ரோகிணி, அஸ்தம், திருவோணம்
அவரோகணம் – திருவாதிரை, சுவாதி, சதயம்

உதாரரச்சு

ஆரோகணம் – கார்த்திகை, உத்தரம், உத்ராடம்
அவரோகணம் – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

ஊருரச்சு

ஆரோகணம் – பரணி, பூரம், பூராடம்
அவரோகணம் – பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பாதரச்சு

ஆரோகணம் – அசுவினி, மகம், மூலம்
அவரோகணம் – ஆயில்யம், கேட்டை, ரேவதி

இரச்சு திருமண பொருத்தம் விபரம்

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தால் பொருந்தாது. இருப்பினும் ஆரோகணம், அவரோகணம் பொருத்தம் செய்யலாம் பின்வரும் குறிப்பை படிக்கவும்.

குறிப்பு: ஒரே ரச்சுவில் ஆரோகணம், அவரோகணம் என்று இரு பிரிவுகள் உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தாலும், ஆரோகணம், அவரோகணம் வேறாக இருந்தால் பொருத்தம் செய்யலாம் பொருத்தம் உண்டு.

ரஜ்ஜு பொருத்தம் – கேள்வி பதில்கள்

ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?

சில நட்சத்திரங்களை இரச்சுபொருத்தம் இல்லாமல் செய்யலாம். ஏக ரஜ்ஜு உள்ள நட்சத்திரங்களை பொருத்தம் செய்யலாம், அதனைப்பற்றி ஏற்கெனவே கடந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம் அவற்றை தெரிந்துகொள்ள இந்த . ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம் கிளிக் செய்யவும்.

தாலி பொருத்தம் அல்லது கயிறு பொருத்தம் என்றால் என்ன?

தாலி பொருத்தம் மற்றும் கயிறு பொருத்தம் என்பது ஜாதகத்தில் 8ஆம் பாவத்தை ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் நட்சத்திர பொருத்தத்தில் இரச்சு பொருத்தத்தை பார்க்க வேண்டும்.

திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?

திருமண பொருத்தத்தில் தசவித பொருத்தங்கள் உள்ளன. அவை

1) Dina Porutham,
2) Gana Porutham,
3) Mahendra Porutham,
4) Sthree Deergam,
5) Yoni Porutham,
6) Rasi Porutham,
7) Rasi Athipathi Porutham,
8) Vasya Porutham,
9) Rajju Porutham,
10) Vedai Porutham ஆகும்.
இவைகளை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள 10 திருமண பொருத்தம் பார்க்க வேண்டும்.

Read More:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்