முக்கிய திருமண பொருத்தம் (Mukkiya Thirumana Porutham) – இந்த பதிவில் முக்கியமான திருமண பொருத்தம் என நாம் என்ன பார்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். பொதுவாக, ஆண் பெண் இருவரின் வாழ்க்கை தரம், புத்திர விருத்தி, குடும்ப ஒற்றுமை, அன்யோன்யம், வருமானம், சத்தியம், தர்மம், வம்சாவழி, குடும்ப மரபு ஆகியவற்றை ஆய்வு செய்து பின்னரே சரியாக ஜாதகம் பொருத்தம்(Accurate Thirumana Porutham in Tamil) செய்ய வேண்டும்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
முக்கிய திருமண பொருத்தம்
இரு ஜாதகங்களை இணைக்கும்போது சில முக்கியமான ஜாதகம் பொருத்தங்களை ஜோதிடர்கள் பார்ப்பது அவசியம். அவை
1) திருமணம் தொடர்பான தோஷங்கள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.
2) பாவக ரீதியான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
3) இருவருக்கும் என்ன திசா நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.
4) நட்சத்திர பொருத்தம்
இந்த நான்கும் பார்த்துதான் இணைக்க வேண்டும். அவைகளை பற்றி பார்ப்போம்
திருமணம் தொடர்பான தோஷங்கள்
1) செவ்வாய் தோஷம்
2) சர்ப்ப தோஷம்
3) கால சர்ப்ப தோஷம்
4) சனி தோஷம்
5) களத்திர தோஷம்
6) புத்திர தோஷம்
7) புனர்பூ தோஷம் ஆகியவை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
எளிதாக சொல்ல வேண்டுமென்றால் மணவாழ்வில் மகிழ்ச்சியை தரக்கூடிய 1,2,7,8ஆம் பாவகத்த்தில் அசுப கிரகங்கள் இருந்தால் தோஷங்கள் உண்டாகின்றன
செவ்வாய் தோஷம் – 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்க செவ்வாய் தோஷம் உண்டு.
சர்ப்ப தோஷம் – 1,2,5,7,8,12 ஆம் இடத்தில் ராகு கேது இருக்க சர்ப்ப தோஷம் உண்டு.
கால சர்ப்ப தோஷம் – ராகு மற்றும் கேது இருக்க அதற்குள்ளே மற்ற கிரகங்கள் இருப்பின் கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
சனி தோஷம் – 1,2,5,7,8,12 ஆம் இடத்தில் சனி இருக்க சனி தோஷம் ஏற்படுகிறது.
களத்திர தோஷம் – 1,2,7,8 ஆகிய இடங்களில் அசுப கிரகங்கள் இருக்க களத்திர தோஷம் உண்டாகிறது.
புத்திர தோஷம் – 5ஆம் அதிபதி கெட்டிருப்பது, 5ஆம் பாவகம் வலிமை இழந்திருப்பது அல்லது ராகு கேது போன்ற அசுப கிரகங்கள் 5ஆம் வீட்டில் அமர்ந்து இருப்பது புத்திர தோஷத்தை உண்டாகிறது.
புனர்பூ தோஷம் – புனர்பூ தோஷம் சனி மற்றும் சந்திரன் தொடர்பால் ஏற்படுகிறது. சனி மற்றும் சந்திரன் எவ்வகையிலாவது தொடர்பு பெற்றிருந்தாலும் புனர்பூ தோஷம் உண்டாகிறது.
இவ்வாறு தோஷம் உள்ள ஜாதகங்களை அதேபோல தோஷம் உள்ள ஜாதகத்துடன் பொருத்தம் செய்ய வேண்டும்.
மேற்கூறிய தோஷங்களை பற்றி விரிவாக பின்வரும் பதிவில் பார்ப்போம். இந்த பதிவில் முக்கியமாக திருமண பொருத்தம் செய்யும்பொழுது பார்க்கவேண்டியவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
Read More: ராகு கேது தோஷ திருமண பொருத்தம் | ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்
பாவக ரீதியான ஆய்வு (சிறந்த ஜாதகம் பொருத்தம் )
ஜாதகம் பொருத்தத்தில் மிக முக்கியமாக பாவக ஆய்வு பார்க்கப்படவேண்டும். ஒருவருக்கு லக்ன பொருத்தம் மற்றும் மற்ற அனைத்து பாவக ஆய்வுகளையும் ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும். அணைத்து பாவகங்களின் ஆய்வும் முக்கியம் உதாரணமாக 5ஆம் பாவகம் வம்ச விருத்தி, 2,11ஆம் இடம் வருமானம் லாப ஸ்தானம் ஆகும்.
இதில் 5ஆம் பாவகம் ஆண் பெண் இருவருக்கும் வலுவிழந்து இருப்பின் பொருத்தம் செய்ய கூடாது. அதே போல 2, 11ஆம் பாவகம் பொருளாதார நிலை மற்றும் வருமானம் பற்றிய ஸ்தானம், இந்த பாவகங்கள் ஒருவருக்கு இந்த ஸ்தானம் வலுவிழந்து மற்றவருக்கு வலுவாக இருப்பின் பொருத்தம் செய்யலாம். இருவருக்கும் வலுவிழந்து இருப்பின் பொருத்தம் செய்ய கூடாது. இதே போல மற்ற பாவகங்களையும் ஆய்வு மேற்கொண்டு பொருத்தம் செய்ய வேண்டும்.
திசா சந்தி
இருவருக்கும் ஒரே திசா நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஒரே திசா நடக்கும்போது பொருத்தம் செய்ய கூடாது. விதிவிலக்காக சில நட்சத்திரங்கள் உள்ளன அவைகளை ஏக நட்சித்திர பொருத்தம் என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன் சென்று பார்க்கவும். ஆனால் நடைமுறையில் ஒரே திசா நடக்கும் கணவன் மனைவியின் குடும்ப வாழ்க்கை பிரச்சினைக்குள்ளாகிறது.
இருவர்க்கும் ராகு திசா மற்றும் கேது திசா நடக்கிறது எனில் பொருத்தம் செய்யக்கூடாது. மேலும் ஒருவருக்கு சனி திசா மற்றவருக்கு சூரிய திசா நடக்கிறது என்றாலும் பொருத்தம் செய்ய கூடாது.
நட்சத்திர திருமண பொருத்தம்
இது தசவித பொருத்தங்களை உள்ளடக்கியது. 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் உள்ளது என்று பார்க்க வேண்டும். மேலும் இதில் ரஜ்ஜு பொருத்தம் மற்றும் யோனி பொருத்தம் மிக முக்கிய பொருத்தமாக கணக்கிடப்படுகிறது.
1) தின பொருத்தம் – Dina Porutham,
2) கண பொருத்தம் – Gana Porutham,
3) மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham,
4) ஸ்த்ரீ தீர்க்கம் – Sthree Deergam,
5) யோனி பொருத்தம் – Yoni Porutham,
6) ராசி பொருத்தம் – Rasi Porutham,
7) ராசி அதிபதி பொருத்தம் – Rasi Athipathi Porutham,
8) வசிய பொருத்தம் – Vasya Porutham,
9) ரஜ்ஜு பொருத்தம் – Rajju Porutham,
10) வேதை பொருத்தம் – Vedai Porutham ஆகும்.
தசவித திருமண பொருத்தம் பற்றி நாமே எப்படி தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என்று திருமண பொருத்தம் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளோம் அதனை காண்க.
Read More:- Thirumana Porutham in Tamil
மேலும் பெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திர பொருத்தம் அட்டவணை காண்க.
இவ்வாறு ஆண் பெண் இருவரும் சேரும் மணவாழ்க்கையை பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளுக்கு பின்னரே பொருத்தம் செய்ய வேண்டும்.
நன்றி! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
கேள்வி பதில்கள்
திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும்?
சிறந்த திருமண பொருத்தம்(Accurate Thirumana Porutham in Tamil) என்பது லக்கின பொருத்தம், பாவக ஆய்வு, தோஷங்கள் ஆய்வு, மற்றும் நட்சத்திர பொருத்தம் ஆகியவற்றை கொண்டே பொருத்தம் செய்ய வேண்டும். எத்தனை பொருத்தம் என்பது, நட்சத்திர பொருத்தத்தை மட்டுமே குறிக்கும். 5-6 பொருத்தம் இருந்தால் போதுமானது அதிலும் ரஜ்ஜு மற்றும் யோனி மிக முக்கியமாக இருக்க வேண்டும். மற்றபடி இவருடைய ஜாதக ஆய்வு செய்த பின்னரே பொருத்தம் செய்ய முடிவுக்கு வர வேண்டும்.
திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?
திருமண நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி என்று ஏற்கெனவே திருமண பொருத்தம் என்ற தலைப்பில் 10 விதமான பொருத்தம் பார்ப்பது பற்றி பதிவிட்டுள்ளோம்.
திருமண பொருத்தம் அட்டவணை
நட்சத்திரங்களிற்கான திருமண பொருத்தம் அட்டவணை ஏற்கெனவே பதிவிட்டுள்ளோம்.
திருமண பொருத்தம் நட்சத்திரம் பற்றி கூறுக?
திருமண பொருத்தம் மட்டும் பார்க்க என்பது நட்சத்திர பொருத்தம் பற்றி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன் கீழுள்ள பதிவுகளை பார்க்கவும்.
சிறந்த திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?
சிறந்த திருமண பொருத்தம் என்பது லக்கின பொருத்தம், பாவக ஆய்வு, தோஷங்கள் ஆய்வு, மற்றும் நட்சத்திர பொருத்தம்
Read More:-
- திருமண பொருத்தம்
- நட்சத்திர பொருத்தம்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- ஏக நட்சத்திர திருமண பொருத்தம்
- ராசி பொருத்தம்
- ராசி அதிபதி பொருத்தம்
- மகேந்திர பொருத்தம்
- ரஜ்ஜு பொருத்தம்
- யோனி பொருத்தம்
- Read All Astrology Articles in English
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்