செவ்வாய் தோஷ விதிவிலக்கு நிவர்த்தி பரிகாரம்

செவ்வாய் தோஷ விதிவிலக்கு நிவர்த்தி பரிகாரம் – மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீனம் லக்கினம் மற்றும் ராசி காரர்களுக்கு செவ்வாய் பெரிய அளவில் தோஷங்களை ஏற்படுத்துவதில்லை ஏனெனில், இவர்களுக்கு செவ்வாய் பரிபூரண சுபகிரகம் ஆகும்.

செவ்வாய் தோஷ விதிவிலக்கு

செவ்வாய் தோஷ விதிவிலக்கு

செவ்வாய் தோஷ விதிவிலக்கு

ஜாதகத்தில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற செவ்வாய் பாதிப்பினை ஏற்படுத்துவதில்லை.

இருப்பினும் மிதுனம், கும்பம், ராசி லக்கின ஜாதகர்களுக்கு உச்சம் பெரும் செவ்வாய் 8ஆம் இடம் மற்றும் 12ஆம் இடமாக வரும்பொழுது இவர்களுக்கு தோஷத்தை ஏற்படுத்தும்.

அதேபோல கடக லக்கினத்திற்கு 7ல் உச்சம் பெரும்பொழுதும், துலாம் லக்கினத்திற்கு 4ல் உச்சம் பெரும்பொழுதுதும், தனுசு லக்கினத்திற்கு 2ல் உச்சம் பெரும்பொழுதும் பெரிய அளவில் தோஷத்தை ஏற்படுத்துவதில்லை.

Read More செவ்வாய் தோஷம் திருமண பொருத்தம்

ஒரு ஜாதகத்தில் நீசம் அடைந்த செவ்வாயும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதில்லை.

நீசம் பெற்ற செவ்வாய் பலம் இல்லாமல் இருப்பதால் தோஷத்தை ஏற்படுத்துவதில்லை.

கடக, சிம்ம லக்னம், ராசி காரர்களுக்கு செவ்வாய் ஏக யோகாதிபதி என்பதால் தோஷத்தை ஏற்படுத்துவதில்லை.

ராகு, கேது மற்றும் சனி இந்த கிரகங்களுடன் செவ்வாய் இணைந்திருக்குபொழுது செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும்.

அதேபோல சுப கிரகங்களுடன் இணைந்திருக்கும் செவ்வாய் அல்லது குரு, சுக்கிரன் பார்வை பெற்ற செவ்வாய் பெரிய அளவில் தோஷத்தை ஏற்படுத்துவதில்லை.

செவ்வாய் நின்ற நட்சத்திர சாரம் லக்கின சுபரின் சாரமாக இருக்கும்பட்சத்தில் செவ்வாயின் தோஷம் வீரியம் குறையும்.

குறிப்பு: மேற்கூறிய விதிகள் அடிப்படையில் செவ்வாய் இருப்பின் செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையுமே தவிர செவ்வாய் தோஷம் இல்லை என்று பொருள் இல்லை.

Read More செவ்வாய் தோஷம் திருமண பொருத்தம்

செவ்வாய் தோஷ பரிகாரம் (அ) நிவர்த்தி

செவ்வாய், சூரியன்-சந்திரன் பார்வை பெற்றால் தோஷ நிவர்த்தி ஆகும்.

குரு, சுக்கிரன் உடன் இணைந்திருப்பது அல்லது பார்வை பெற்றாலும் செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகிறது.

தோஷம் இருப்பவர்கள் செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது துவரை தானம் ஏழைகளுக்கு அல்லது அன்னதானத்திற்கு கொடுப்பது நல்லது.

செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நல்ல பலனை தரும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது வைத்தீஸ்வரன் கோயில், பழனி, திருச்செந்தூர் என ஏதாவது ஒரு கோயில் சென்று இறைவனை வழிபடுவது நல்லது.

அவ்வாறு செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள முருகர் கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபடு செய்வது நற்பலனை தரும்.

Read More:-

Video: அடிப்படை ஜோதிடம் கற்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

You may also like...