சர்ப்ப தோஷம் திருமணம் பொருத்தம்

சர்ப்ப தோஷம் திருமணம் பொருத்தம் (Sarpa Dosha Marriage Prediction) – ஒருவருடைய ஜாதகத்தில் முழு பாவகத்தையும் ஆளக்கூடிய சக்திகள் படைத்தவர்கள் ராகு-கேது பகவான்கள். அவர்கள் எந்த இடத்தில இருந்தால் என்ன மாதிரியான தோஷம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

சர்ப்ப தோஷம் திருமணம் பொருத்தம்
சர்ப்ப தோஷம் திருமணம் பொருத்தம்

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது மன நிம்மதியை தரக்கூடிய பாவகங்களான 1,2,7,8 ஆம் இடத்தில் அமர்ந்தால் அது சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது.

தெரிந்து கொள்க – சர்ப்ப தோஷம் என்றால் என்ன? | ராசி பொருத்தம் விளக்கம் | ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்

இதனால் ஜாதகருக்கு நிலையில்லாத குணம், மணவாழ்வில் மகிழ்ச்சியின்மை, நிம்மதியற்ற வாழ்க்கை, அமைதியற்ற சூழல், கடுமையான பேச்சு, பழிவாங்கும் எண்ணம் இருக்க செய்தல் போன்றவற்றை உருவாக்கும்.

மேலும் எதிர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும், எண்ணங்களுக்கு மாறாகவே வாழ்க்கை அமையும். 8ல் ராகு அமைய பிரச்சினைக்குரிய மணவாழ்க்கை, ஜாதகர் அவமானப்படுத்தல் நடக்கும்.

12ல் ராகு இருக்க குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வது, திருப்தியற்ற தாம்பத்தியம் ஆகியவற்றை கொடுக்கும்.

மேலும் புத்திரத்தடை, எதிர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும், எண்ணங்களுக்கு மாறாகவே வாழ்க்கை அமையும். 8ல் ராகு அமைய பிரச்சினைக்குரிய மணவாழ்க்கை, வீதிக்கு வந்து ஜாதகர் அவமானப்படுத்தல் நடக்கும்.

சர்ப்ப தோஷம் பொருத்தம் செய்ய – இது போன்ற அமைப்பு தோஷம் உள்ள ஜாதகங்களை அதே போல 1,2,7,8 இல் ராகு கேது உள்ள ஜாதகங்களை இணைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் புரிதல் இருக்கும், விட்டுக்கொடுத்து வாழும் தன்மையும் இருக்கும்.

சர்ப்ப தோஷம் திருமணம் பொருத்தம் கேள்வி பதில்கள்

ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா?

ராகு கேது தோஷம் உள்ள ஜாதகத்தை சுத்த ஜாதகத்துடன் இணைப்பது நல்லதல்ல, இருப்பினும் காதல் செய்தவர்கள், சொந்தத்தில் பெண் எடுப்பது என்கிற பொழுதில் ஜாதக கட்டம் அதாவது லக்கின பொருத்தம் மிக சிறப்பாக இருந்தால் திருமணம் செய்யலாம்.

ராகு கேது தோஷம் விதிவிலக்கு

ராகு கேது தோஷம் பரிகாரம் மற்றும் நிவர்த்தி பற்றி இந்த பதிவிலியே கூறியுள்ளோம் படித்து கொள்ளவும்.

ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?

ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை ராகு கேது தோஷம் உள்ள பையனுடன் பொருத்தலாம். சந்தேகம் இருந்தால் ராகு கேது தோஷம் திருமண பொருத்தம் பற்றி பதிவிட்டுள்ளோம் அந்த தலைப்பை பார்க்கவும்.

ராகு கேது தோஷம் ஜாதகம்

1,2,5,7,8,12 ஆம் வீடுகளில் ராகு கேது இருக்க ராகு கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷ ஜாதகம் எனலாம்.

ராகு கேது என்றால் என்ன?

அறிவியல் பூர்வமாக கூற வேண்டுமென்றால் ராகு கேது என்பவை பூமி சூரியனை சுற்றி வரும் வட்ட பாதையும் சந்திரன் பூமியை சுற்றி வரும் வட்ட பாதையும் வெட்டிக் கொள்ளும் இடமே ஆகும்.

ராகு கேது தோஷம் திருமணம்

ஏற்கெனவே ராகு கேது தோஷம் திருமண பொருத்தம் பற்றி பதிவிட்டுள்ளோம் அந்த தலைப்பை பார்க்கவும்.

Read More:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்