கேது பகவான் வரலாறு

இந்த பதிவில் கேது பகவான் வரலாறு, கேது தரும் நன்மைகள் மற்றும் கேது பகவான் தொழில்கள் ஆகியவற்றை காண்போம். உபஜெய ஸ்தானத்தில் கேது இருந்தால் என்ன பலன் என்றும் தெரிந்துகொள்வோம்.

கேது கிரக காரகத்துவம்

கேது பகவான் வரலாறு

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது, அமுதத்தை உண்ண தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. போட்டியைத் தீர்த்துவைக்க ஸ்ரீ மகாவிஷ்ணு மோகினி(பெண்) அவதாரம் எடுத்து அமுதத்தை தேவர்களுக்கு பெரும்பகுதியை வழங்கிக் கொண்டிருந்தார்.

அவ்வாறு வழங்குவதை கண்டா ஸ்வர்பானு என்கிற அசுரன் தனக்கு அமுதம் கிடைக்காது என்று எண்ணி சூரியன் மற்றும் சந்திரன் இருவருக்குமிடையே தேவர் ரூபமெடுத்து அமுதத்தை வாங்கி உண்டார்.

இதை சூரியன் மற்றும் சந்திரன் கண்டுபிடித்து ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் எடுத்துச் சொன்னார்கள். ஸ்ரீ மகா விஷ்ணு தன் கையிலிருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதனால் தலை முதல் மார்புவரை உள்ள பகுதி தனியாகவும், உடல் தனியாக வேறு இடத்தில் விழுந்தது.

தனியாக விழுந்து கிடந்த உடல் பாகத்தை மினி என்ற என்கிற அந்தணர் வளர்த்து வந்தார், கேது ஞான மார்க்கங்களை அவரிடம் கற்று, ஸ்ரீ விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் செய்து பாம்பு தலையைப் பெற்று கிரக பதவியை அடைந்தார்.

சர்ப்ப தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் வகைகள் பற்றி தெரிந்து கொள்க.

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? | கால சர்ப்ப தோஷம் | சர்ப்ப தோஷம் திருமணம் பொருத்தம்

கேது பகவான் தொழில்கள்

ஜோதிடம், ஓதுவார், மருத்துவம், சித்த மருத்துவம், புலனாய்வுத்துறை, தையல்கடை, மத போதகர், சாமி சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை, ஆன்லைன் சம்பந்தப்பட்ட தொழில், சாப்ட்வேர், கடிகாரம் மெக்கானிக் மற்றும் உற்பத்தி. மிக நுண்ணிய பொருட்கள் உற்பத்தி, துருக்கள் மண் சார்ந்த விற்பனை, கயிறு, நூல், சணல், wire , கம்பி வியாபாரம், தீர்த்த யாத்திரை பயணம், மந்திரம் ஓதுவது, ஞான உபதேசம் போன்றவை கேது பகவான் தொழில்கள் ஆகும்.

இவைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேறலாம்.

கேது தரும் நன்மைகள்

ராகு கேது என்றாலே எல்லோருக்கும் பயம்தான். ஜாதகத்தில் எவ்விடத்தில் இருந்தாலும் பாதிப்பு (தோஷம்) உண்டு என்று எடுத்துக்கொள்வார். ஆனால் அவ்வாறு இல்லை, ஒரு ஜாதகத்தில் 3,6,10,11ஆம் இடம் என்னும் உபஜெய ஸ்தானத்தில் கேது இருந்தால் நற்பலனையே தருவார். அவர்கள் சாப்ட்வேர் தொழில்நுட்பம் மற்றும் உலகிற்கு யாரும் அறிந்திராத புதிய தொழில்நுட்பத்தினை கண்டு பிடிப்பது.

மேலும் உலகம் அறிந்திராத மேலான ஞான அறிவையும் பெறுவார்கள். மேலும் ஆன்மிகம் சிந்தனை மேலோங்கும். மேலே குறிப்பிட்டுள்ள கேது சம்பந்தமான தொழில் செய்பவர்கள் மென்மேலும் வளர்ச்சி அடைந்து நிலையான செல்வதை நேர்மையான முறையில் சம்பாதிப்பார்கள்.

தெரிந்துகொள்க

You may also like...