Skip to content
Home » ஜோதிடம் » கால சர்ப்ப தோஷம்

கால சர்ப்ப தோஷம்

கால சர்ப்ப தோஷம் (Kala Sarpa Dosha in Tamil) – ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு கேது கிரகங்களுக்கிடையே மற்ற 7 கிரகங்கள் அமைந்திருக்குமாயின் கால சர்ப்ப தோஷம் உண்டாகிறது. லக்கினத்திற்கு ராகு கேது எந்த இடத்தில் அமைகிறது என்பதைப் பொறுத்து அதன் வகைகள் அறியப்படுகிறது. மொத்தம் 12 வகை கால சர்ப்ப தோஷங்கள் உள்ளன அவைகளை பார்ப்போம்.

கால சர்ப்ப தோஷம்
கால சர்ப்ப தோஷம்

அனந்த கால சர்ப்ப தோஷம்

லக்கினத்திலிருந்து ராகு முதல் வீட்டிலும் கேது 7ம் இடத்திலும் இருந்து அதற்குள் மற்ற கிரகங்கள் இருப்பின் அனந்த கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.

இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு வாழ்வில் பல இடையூறுகள், துன்பங்கள் ஏற்படும். இவர்கள் பல பிரச்னைகளுக்கு மத்தியில் தன் சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னுக்கு வருவார்கள். இவர்களுக்கு திருமண தாமதம் ஏற்படும்.

குளிகை சர்ப்ப தோஷம்

ராகு 2ம் இடத்திலும் கேது 8லும் இருந்து மற்ற கிரகங்கள் அதற்குள் அமையப்பெற்றால் குளிகை சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. உடல் நல பிரச்சினைகளால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படுவார்கள். அதோடு விபத்து, இழப்புகள் ஏற்படும் அமைப்பும், மன அமைதி அற்ற நிலை இருக்கும்.

பொருளாதார பாதுகாப்பற்ற நிலை ஏற்படும், திடீர் பொருள் இழப்பு ஏற்படும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசி இறைவன் பலம் பெற்றிருந்தால் வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும்.

கார் கோடக சர்ப்ப தோஷம்

8ல் ராகுவும் 2ல் கேதுவும் இருக்க மற்ற கிரகங்கள் அதற்குள் அமையப்பெற்றால் கார் கோடாக சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு தந்தை வழி சொத்துக்கள் இருந்தாலும் கிடைக்க பல பிரச்சனைகளும் இடையூறுகளும் ஏற்படும். உறவினர்கள். நண்பர்கள் பகையாக மாற வாய்ப்புள்ளது.

சங்க சூட கால சர்ப்ப தோஷம்

லக்கினத்திற்கு 9ல் ராகுவும், 3ல் கேதுவும் இருந்து அதற்கும் மற்ற 7 கிரகங்களும் இருப்பின் சங்க சூட கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த ஜாதகத்தினர் பொய்களை அதிகம் பேசுவார்கள். முன்கோபம் அதிகம் கொண்டவராகவும், அதிக துன்பங்களை அனுபவிக்கக் கூடிய சூழலும், ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க வேண்டி வரும்.

கடக சர்ப்ப தோஷம்

லக்கினத்திற்கு 10ல் ராகுவும் 4ல் கேதுவும் இருந்து மற்ற கிரகங்கள் அதற்குள் அமையப்பெற்றால் கடக்க சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இவர்களுக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படும். அதோடு அரசால் தண்டனைப் பெறுவார்கள்.

பொதுவாக இந்த தோஷம் இருக்கப்பெற்றவர்கள் புகைப்படம், எக்ஸ்ரே போன்ற வேலையை செய்வார்கள். சட்டத்திற்கு எதிரான வேலையை செய்வார்கள். இவர்கள் அரசுக்கு எதிராகவும், வாழ்வில் மன அமைதி இன்று வாழநேரிடும்.

வாசுகி சர்ப்ப தோஷம்

ராகு 3லும், கேது 9ம் இடத்திலும் இருந்து மற்ற கிரகங்கள் அதற்குள் அமையப்பெற்றால் வாசுகி சர்ப்ப தோஷம் ஏற்படும். இதனால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் பிரச்னைகள் ஏற்படும். இளம் வயதில் துன்பங்களும், தொல்லைகளும் சந்திக்க வேண்டி இருக்கும்.

சங்கல்ப சர்ப்ப தோஷம்

ராகு 4ம் இடத்திலும், கேது 10ம் இடத்தில் அமையப்பெற்று மற்ற கிரகங்கள் அதற்குள் இருந்தால் சங்கல்ப சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. அவர்களுக்கு நல்ல வேலை அமைவதில் சிக்கல் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அதில் நிலை தன்மை இல்லாமல் இருக்கும். தொழில் தொடங்கினாலும் அதில் பெரிய லாபமோ, முன்னேற்றமோ இருக்காது.

பத்ம சர்ப்ப தோஷம்

5ல் ராகுவும் 11ல் கேதுவும் இருந்து மற்ற கிரகங்கள் அதற்குள் இருந்தால் பத்ம சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. அவர்களுக்கு குழந்தை செல்வம் ஏற்படுவதில் தாமதம் அல்லது சிக்கல் உண்டாகும்

பில்லி சூனியம் மற்றும் பேய், பிசாசுகளின் மனநிலை பாதிப்பு ஏற்படும். நண்பர்களால் ஏமாற்றமும், அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படக் கூடும்.

மகா பத்ம சர்ப்ப தோஷம்

6ல் ராகுவும் 12ல் கேதுவும் இருந்து மற்ற கிரகங்கள் அதற்குள் இருந்தால் மகா பத்ம சர்ப்ப தோஷம் ஏற்படும். இதனால் வாழ்வில் அமைதியற்ற நிலை இருக்கும். பல இடையூறுகள் ஏற்படக் கூடிய சூழல் இருக்கும். 6ஆம் இடத்தில் ஏதேனும் ஒரு கிரகம் இருப்பின் அதைப் பொறுத்து அவருக்கு உடல் நலம் மேம்படுவதும், எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடும் அமைப்பு இருக்கும்.

தக்ஷக சர்ப்ப தோஷம்

கேது லக்கினத்திலும், 7ல் ராகுவும் இருந்து மற்ற கிரகங்கள் இவர்களுக்குள் அமையப்பெற்றால் தக்ஷக சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த அமைப்பு உள்ளவர்கள் அவசர கதியில் செயல்களை செய்வார்கள். முன் யோசனை செய்யமாட்டார்கள். முடிவு எடுத்த பின்பு அந்த முடிவுக்காக வருத்தப்படுவார்கள். இவருடைய முயற்சிகள் அனைத்து வீணாகும்.

இவர்களுக்கு திருமணமானாலும் பல பிரச்னைகள் இருக்கும் அதனால் மன அமைதியில்லாமல் தவிப்பார்கள்.

விஷ் தார சர்ப்ப தோஷம்

ராகு 11ம் இடத்தில் இருந்து கேது 5ல் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் இவர்களுக்குள் இருந்தால் விஷ் தார சர்ப்ப தோஷம் ஏற்படும். இதனால் திருமணம் நடந்தாலும் அவர்கள் குடும்பத்துடன் அதிக காலம் செலவிட முடியாது. அடிக்கடி வெளியூர், வெளிநாடு பயணம் செய்வார்கள். குழந்தைகள் பிறந்தாலும் அவர்களால் பிரச்சனைகளும் அவப்பெயரும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சேஷ நாக சர்ப்ப தோஷம்

ராகு 12ல் அமர்ந்து, கேது 6ம் இடத்தில் இருந்து மற்ற கிரகங்கள் அதற்குள் இருந்தால் சேஷ நாக சர்ப்ப தோஷம் உண்டாகும். இவர்கள் கொடிய நோய்க்கு ஆளாவார்கள். எதிரிகளால் குறைவு அனால் கடன் தொல்லைக்கு ஆளாவார்கள். வம்பு வழக்கை சந்திக்க வேண்டி வரும்.

மேற்கூறிய அனைத்து பொது பலனே. ஒவ்வொரு ஜாதகத்திலும் உள்ள கிரக அமைப்பை பொறுத்து பலன்கள் அனைத்தும் மாறுபடும்.

கால சர்ப்ப தோஷம் பரிகாரம்

அடிக்கடி அருகில் உள்ள அம்மன் கோயில் அல்லது சர்ப்ப வழிபாடு உள்ள கோயிலுக்கு சென்று சர்ப்ப சாந்தி வழிபாடு செய்வது தடைகள் நீங்கி நல்ல பலன்களை தரும்.

Read More:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்