Skip to content
Home » ஜோதிடம் » 27 நட்சத்திர காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்

27 நட்சத்திர காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்

27 நட்சத்திர காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் – ஒவ்வொருவர் ஜாதக கட்டத்திலும் சந்திரன் எந்த ராசியில் உள்ளது அதனையே பிறப்பு ராசியாக எடுத்துக்கொள்கிறோம். அதேபோல சந்திரன் நிற்கும் நட்சத்திரமே பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற வழிபட வேண்டிய தெய்வங்கள் இருப்பதுபோல நட்சத்திரத்திற்கும் அதற்கேற்ற தெய்வங்களை வழிபட்டால் தீமைகள் விலகி நன்மைகள் தேடி வரும். அவ்வாறு இருக்கும் தெய்வத்தை தன்னுடைய ஜென்ம நட்சத்திர நாளில் வழி பட அவருக்கு வாழ்வில் ஏற்றங்கள் பிறக்கும். அவற்றை காண்போம்.

27 நட்சத்திர காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்
27 நட்சத்திர காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்

27 நட்சத்திர காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்

1. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி

2. பரணி – துர்க்கை அம்மனை ராகு கால நேரத்தில் வழிபடுவதும் மேன்மையை தரும்.

3. கிருத்திகை – மாதந்தோறும் கிருத்திகை அன்று விரதமிருந்து முருக பெருமானை வணங்குவது நன்மையை தரும்.

4. ரோகினி – ஸ்ரீ விஷ்ணு பகவான் .

5. மிருகசீரிடம் – சிவபெருமான்

6. திருவாதிரை – சிதம்பரம் நடராஜரை (சிவபெருமான்) மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் தரிசனம் செய்ய வாழ்க்கை ஏற்றம் பெறும்.

7. புனர்பூசம் – ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம்

8. பூசம் – குரு தக்ஷிணாமூர்த்தி

9. ஆயில்யம் – ஆதிசேஷன் , நாகம்மனையும் வணங்கலாம்

10. மகம் – ஸ்ரீ சூரிய பகவானை வணங்கலாம் , மேலும் ஆதித்ய ஹிருதயம் சொல்லலாம்.

11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தாயார். இவர் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். ஆடி பூரம் அன்று ஆண்டாள் தாயாரை வணங்குவதால் வளங்கள் பெறலாம். மேலும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவை சொன்னாலும் வாழ்க்கை வளமாகும்.

12. உத்திரம் – ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார்

13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி – காயத்திரி மந்திரம் ஜபம் செய்ய மனம் குழப்பங்கள் தெளியும்.

14. சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார் – புதன் கிழமை தோறும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை 11 முறை வளம் வந்து வணங்க வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

15. ஸ்வாதி – ஸ்வாதி நட்சத்திர நாளில் ஸ்ரீ நரசிம்மரை தரிசனம் செய்ய எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் .

16. விசாகம் – வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளில் முருகனுக்கு அபிஷேக ஆராதனை செயது வழிபட அனைத்து வளமும் பெறலாம்.

17. அனுஷம் – ஸ்ரீ லட்சுமி நாராயணர், மஹாபெரியவரை மாதந்தோறும் வரும் அனுஷ நட்சத்திர நாளில் பூஜை செய்து வணங்கலாம்.

18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாளை புதன் கிழமை வணங்கி வருவதால் சிறப்புகளை பெற முடியும்.

19. மூலம் – மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரை வணங்கி வருவதால் பயம் அகலும்.

20. பூராடம் – வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் மற்றும் சிவாலய வழிபாடு மேன்மையை தரும்.

21. உத்திராடம் – முழு முதற் கடவுள் விநாயகரை வழிபடலாம்.

22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்ரீவர். இவருடைய மூலமந்திரத்தை சொல்லி வணங்குவதால் வளங்கள் பல பெறலாம். மேலும் திருப்பதி பெருமாளை வணங்குவது அதீத சிறப்பினை தரும்.

23. அவிட்டம் – முருகப்பெருமானை செவ்வாய் அன்றும் ஸ்ரீ அனந்த சயன பெருமாளை சனிக்கிழமை மற்றும் புதன் கிழமை தோரும் வணங்கி வரவும்.

24. சதயம் – மகா மிருதியஞ்சேஸ்வரர் மந்திரம் ஜபம் செய்ய நன்மை உண்டாகும்.

25. பூரட்டாதி – ஏகபாதர் – குரு வழிபாடு வணங்க அனைத்து வளமும் பெற முடியும்.

26. உத்திரட்டாதி – மகா ஈஸ்வரனை வணங்குவதால் மேன்மை பெறலாம்.

27 – ரேவதி – ஸ்ரீ அரங்கநாதனை வணங்கி வர வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்