பழமொழி விளக்கம் பகுதி 1

பழமொழி விளக்கம்
பழமொழி விளக்கம்
Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

1.) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

பொருள்:

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள்.

2.) வீட்டுக்கு வீடு வாசப்படி !!

பொருள்:

மேன்மையான வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மிகம் என்னும் வீடு தான் வாசற்படி என்பதே சரியான பொருள்.

3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

பொருள்:

ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.

நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

4.) வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம்.

பொருள்:

வர வர மாமியார், கயிதை போல ஆனாளாம்.

கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும்,நடப்பதும், நாளாக நாளாக கயிதை போல இருக்கும் என்று அர்த்தம்.

5.) சேலை கட்டிய பெண்ணை நம்பாதே!

பொருள்:

சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே!

சேல் என்பது கண்ணை குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்ப கூடாது.

6.) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல

பொருள்: அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல

அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.

7.) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

பொருள்:

மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.

8.) களவும் கற்று மற.

பொருள்:

களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

9.) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

பொருள்:

கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.

10.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

பொருள்:

‘கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை’.

கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.

 11.) ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே!

பொருள்:

நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

12.) பந்திக்கு முந்து ! படைக்கு பிந்து !!

பொருள்:

பந்திக்கு முந்து என்பது சாப்பிட போகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கி செல்கிறதோ, அது போல போரில், எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணலை பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய் பாயும். இது போருக்கு போகும் வில் வீரருக்காக சொல்லியது

13.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

பொருள்:

ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.

14.) கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!!

பொருள்:

நல்ல சிற்பியிநாள் உருவாக்கப்படும் சிலையை கலை கண்ணொடு பார்த்தால், நாய் போல தெரியும்; வெறும் கல் என நினைத்தால், நாய் தெரியாமல் கல் தான் தெரியும். எந்த ஒரு செயலும் தெரிவது, அவரவர் பார்வையில் தான் உள்ளது.

15.) புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.

பொருள்:

புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.

மனது புண்பட்டிருக்கும் போது, தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.

16.) விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

பொருள்:

ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய தினங்களில் உணவை குறைவாய் உட்கொண்டு மருந்து உண்ண வேண்டும்.

17.) போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.

பொருள்:

மற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை;
வாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியான பொருள்.

18.) சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

பொருள்:

சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

19.) மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.

பொருள்:

மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.

20.) ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.

பொருள்:

மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் (ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள் (நூறு பேர்) பக்கம் நின்றாலும், போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன் என்று சொன்னது.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்