Skip to content
Home » ஜோதிடம் » திருமண பொருத்தம் விளக்கம்

திருமண பொருத்தம் விளக்கம்

திருமண பொருத்தம் விளக்கம் (Thirumana Porutham in Tamil);  ஜோதிட முறையில் திருமணம் பொருத்தம் /கல்யாண பொருத்தம் பார்ப்பது எப்படி? ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திர பொருத்தம்(Natchathira Porutham), ராசி பொருத்தம், லக்கின பொருத்தம், இருவரின் ஜாதக கட்டம்(லக்கின அமைப்பு) போன்றவைகளைக் கொண்டு திருமணம் பொருத்தம்/கல்யாண பொருத்தம் பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த பதிவில் தசவித பொருத்தங்கள் பார்க்கும் முறையை அறிந்து கொள்வோம்.

திருமண பொருத்தம் விளக்கம்
திருமண பொருத்தம் விளக்கம்

பொதுவாக திருமண பொருத்தம் (Thirumana Porutham in Tamil) பார்க்கும்பொழுது பெண் ஜாதகத்தை முதன்மையாக வைத்து ஆண் ஜாதகங்களை பொருத்தி பார்க்க வேண்டும். இந்த பதிவில் கல்யாண பொருத்தம்(Kalyana Porutham) பார்ப்பது எப்படி? என்று பார்ப்போம்.

Thirumana Porutham | Marriage Porutham

திருமணம் பொருத்தம்(Thirumana Porutham) என்று பார்க்கும்பொழுது முக்கியமாக 10 திருமண பொருத்தங்கள் பார்க்கப்படும் அவை.

1) தின பொருத்தம் – Dina Porutham,
2) கண பொருத்தம் – Gana Porutham,
3) மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham,
4) ஸ்த்ரீ தீர்க்கம் – Sthree Deergam,
5) யோனி பொருத்தம் – Yoni Porutham,
6) ராசி பொருத்தம் – Rasi Porutham,
7) ராசி அதிபதி பொருத்தம் – Rasi Athipathi Porutham,
8) வசிய பொருத்தம் – Vasya Porutham,
9) ரஜ்ஜு பொருத்தம் – Rajju Porutham,
10) வேதை பொருத்தம் – Vedai Porutham ஆகும்.

ஆனால் இந்த பதிவில் மேலும் 2 பொருத்தங்களும் Nadi Porutham, Virutcha Porutham இரண்டும் கூறப்பட்டுள்ளன. இன்றும் காவேரி டெல்டா பகுதிகளில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் நாடி பொருத்தம் சேர்த்து 11 திருமண பொருத்தங்கள் பார்க்கின்றனர். இதில் 12ஆவது பொருத்தமாக விருட்ச பொருத்தம் பார்க்கப்படுகிறது. இதற்கு அதிக முக்கியத்துவம் இல்லை இருப்பினும் தெரிந்து கொள்வதற்காக குறிப்பிடப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுக.

Thirumana Porutham (Marriage Matching in Tamil)

திருமண பொருத்தம் - Dina Porutham
திருமண பொருத்தம் – Dina Porutham

தினப் பொருத்தம் – Dina Porutham

பெண் நட்சத்திரத்தை முதலாக கொண்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ண 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 22, 24, 26, 27 வந்தால் தினபொருத்தம் உண்டு. வேறு எண் வந்தால் தினபொருத்தம் இல்லை.

மற்றோரு வகையில் பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கூட்ட தொகையை 9 ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை தினப் பொருத்தம் உண்டு.

உதாரணம்: பெண் நட்சத்திரம் அஸ்வினி, ஆண் நட்சத்திரம் அனுஷம் என்றால் பெண் நட்சத்திரம் முதல் அஸ்வினி 1, பரணி 2, கிருத்திகை3 என்று எண்ண வேண்டும். ஆண் நட்சத்திரம் சதயம் 17 வது நட்சத்திரமாக வரும். எனவே தினப் பொருத்தம் உண்டு.

வேறு வழியில் 17ஐ 9ஆல் வகுக்கக் மீதி 8 வரும் அதனால் பொருத்தம் உண்டு.

திருமண பொருத்தம் - Gana porutham
திருமண பொருத்தம் – Gana porutham

Buy Book Rs64.00

கணப் பொருத்தம் – Gana Porutham

கண பொருத்தம் பார்க்கும்பொழுது 3 வகையான அமைப்புகள் உள்ளன. அதன் பொருத்தம் விவரத்தினை பார்ப்போம்.

பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக இருந்தால் நலம்.
பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்
பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம்
பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது
பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

தேவ கணம்
அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

மனித கணம்
பரணி, ரோகிணி, திருவாதிரை பூரம், பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி

ராட்சஷ கணம்
கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

திருமண பொருத்தம் - Mahendra Porutham
திருமண பொருத்தம் – Mahendra Porutham

மகேந்திரப் பொருத்தம் – Mahendra Porutham

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை வரிசையாக எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 எண்கள் வருமாயின் உத்தமம். மகேந்திர பொருத்தம் இல்லையெனில் விருக்ஷ பொருத்தம் பார்த்து பொருந்தினால் போதும்.

shtree Deergam
shtree Deergam

ஸ்திரி தீர்க்கம் – Sthree Deergam

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.

Read More:- ராகு கேது தோஷ திருமண பொருத்தம் | ராசி பொருத்தம் | ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்

திருமண பொருத்தம் - Yoni porutham
திருமண பொருத்தம் – Yoni porutham

யோனிப் பொருத்தம் – Yoni Porutham

யோனி பொருத்தம் பார்க்கும்பொழுது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம் ஆகும். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் பொருந்தாது. இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும். அவை பின் வருமாறு

அசுவினி – ஆண் குதிரை
பரணி – ஆண் யானை
கார்த்திகை – பெண் ஆடு
ரோகிணி – ஆண் நாகம்
மிருகசீரிஷம் – பெண் சாரை
திருவாதிரை – ஆண் நாய்
புனர்பூசம் – பெண் பூனை
பூசம் – ஆண் ஆடு
ஆயில்யம் – ஆண் பூனை
மகம் – ஆண் எலி
பூரம் – பெண் எலி
உத்தரம் – எருது
அஸ்தம் – பெண் எருமை
சித்திரை – ஆண் புலி
சுவாதி – ஆண் எருமை
விசாகம் – பெண் புலி
அனுஷம் – பெண் மான்
கேட்டை – கலைமான்
மூலம் – பெண் நாய்
பூராடம் – ஆண் குரங்கு
உத்திராடம் – மலட்டு பசு
திருவோணம் – பெண் குரங்கு
அவிட்டம் – பெண் சிங்கம்
சதயம் – பெண் குதிரை
பூரட்டாதி – ஆண் சிங்கம்
உத்திரட்டாதி – பாற்பசு
ரேவதி – பெண் யானை

குறிப்பு இவற்றில்

பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
ஆகியவை ஜென்ம பகை என்பதால் சேராது.

rasi porutham
Rasi Porutham

ராசிப் பொருத்தம் – Rasi Porutham

ராசி பொருத்தம் பார்க்கையில் பெண் ராசியிலிருந்து ஆணின் ராசி வரை எண்ணினால்

6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
8-வது ராசி ஆகாது.
7-வது ராசியானால் சுபம்.
அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது.
2, 6, 8, ஆம் ராசிகள் ஆகாது.
1, 3, 5, 12 வது ராசிகள் வந்தால் மத்திமம் .
7, 9, 10, 11 வது ராசியாக வந்தால் உத்தமம்.

பெண் ராசிக்கு ஆண் ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். சஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகங்களை பொருத்தம் செய்யாமல் இருப்பது நல்லது.

rasi athipati porutham

ராசி அதிபதி பொருத்தம் – Rasi Athipathi Porutham

ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.

ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்
ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை
இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.

இந்த பதிவு புரியவில்லை என்றால் கீழே உள்ள ராசி அதிபதி அட்டவணையை பார்க்கவும். அதில் பெண்ணின் ராசி அதிபதி ஆணின் ராசி அதிபதிக்கு நட்பு ஆனால் உத்தமம் சமம் அனால் மத்திமம் பகை என்றால் பொருந்தாது.

உதாரணமாக, பெண்ணின் ராசி மேஷம் என வைத்துக்கொள்வோம் மேஷத்தின் ராசி அதிபதி செவ்வாய் ஆவார். கீழ் உள்ள அட்டவணைப்படி செவ்வாய்க்கு சந்திரன், சூரியன், குரு நட்பு ஆகும் அதனால் உத்தம பொருத்தம் உண்டு. சுக்கிரன் மற்றும் சனி சமம் கிரகம் ஆதலால் மத்திமம் பொருத்தம் உண்டு. புதன் கிரகம் பகை ஆதலால் புதனின் ராசிகளான மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு ராசி அதிபதி பொருத்தம் இல்லை.

ராசி அதிபதிகள் நட்பு சமம் பகை
சூரியன் சந்திரன், செவ்வாய், குரு  புதன் சுக்கிரன், சனி
சந்திரன் சூரியன், புதன் செவ்வாய், குரு
சுக்கிரன்
சனி
இல்லை
செவ்வாய் சந்திரன், சூரியன், குரு சுக்கிரன்
சனி
புதன்
புதன் சூரியன், சுக்கிரன் செவ்வாய்
குரு
சந்திரன்
குரு சூரியன், சந்திரன், செவ்வாய் சனி சுக்கிரன் புதன்
சுக்கிரன் புதன், சனி செவ்வாய்
குரு
சூரியன், சந்திரன்
சனி புதன், சுக்ரன் குரு சூரியன், சந்திரன், செவ்வாய்

வசியப் பொருத்தம் – Vasya Porutham

திருமண பொருத்தம் - vasya porutham
திருமண பொருத்தம் – vasya porutham

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இருப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைத்தல் நல்லது. பெரும்பாலும் வசியபொருத்தம் அமைவது இயலாது. வசியபொருத்தம் அமையாதவர்கள் ராசி பொருத்தம் ராசி அதிபதி பொருத்தம் பார்த்து அது பொருந்தினால் போதுமானது.

பெண் ராசி          ஆண் ராசி

மேஷம்               சிம்மம், விருச்சிகம்
ரிஷபம்               கடகம், துலாம்
மிதுனம்             கன்னி
கடகம்                விருச்சிகம், தனுசு
சிம்மம்               மகரம்
கன்னி               ரிஷபம், மீனம்
துலாம்              மகரம்
விருச்சிகம்      கடகம், கன்னி
தனுசு                மீனம்
மகரம்              கும்பம்
கும்பம்             மீனம்
மீனம்               மகரம்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வசியபொருத்தம் உள்ளவை மற்றவை பொருத்தம் இல்லை என அர்த்தம்.

திருமண பொருத்தம் - Rajju Porutham
திருமண பொருத்தம் – Rajju Porutham

ரஜ்ஜு பொருத்தம் – Rajju Porutham

ரஜ்ஜு பொருத்தம் ஆணின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது. இரச்சு ஐந்து வகைப்படும்.

சிரோரஜ்ஜு

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்

கண்டரஜ்ஜு

ரோகிணி, அஸ்தம், திருவோணம் – ஆரோஹனம்
திருவாதிரை, சுவாதி, சதயம் – அவரோஹனம்

உதாரரஜ்ஜு

கார்த்திகை, உத்தரம், உத்ராடம் – ஆரோஹனம்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – அவரோஹனம்

ஊருரஜ்ஜு

பரணி, பூரம், பூராடம் – ஆரோஹனம்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி – அவரோஹனம்

பாதரஜ்ஜு

அசுவினி, மகம், மூலம் – ஆரோஹனம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி – அவரோஹனம்

பொருத்த விபரம்

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜு இருந்தால் பொருந்தாது.

ஒரே ரச்சுவில் ஆரோகணம், அவரோகணம் என்று இரு பிரிவுகள் உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே இரச்சுவில் இருந்தாலும், ஆரோகணம், அவரோகணம் வேறாக இருந்தால் செய்யலாம் பொருத்தம் உண்டு.

vedai porutham
Vedai Porutham

வேதைப் பொருத்தம் – Vedai Porutham

வேதை பொருத்தம் தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் அறிந்து அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.

வேதை என்றால் தடை அல்லது இடைஞ்சல் என்று பொருள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் இடையே வேதையை ஏற்படுத்தும் உதாரணமாக அஸ்வினிக்கு கேட்டை வேதையை ஏற்படுத்தும் அதனால் பொருத்தம் செய்ய கூடாது. குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திரங்களுக்கு வேதை இருந்தால் வேதை பொருத்தம் இல்ல என்று பொருள் வேதை இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் உண்டு என்று பொருள்.

அசுவினி – கேட்டை
பரணி – அனுஷம்
கார்த்திகை – விசாகம்
ரோகிணி – சுவாதி
மிருகசீரிஷம் – சித்திரை, அவிட்டம்
திருவாதிரை – திருவோணம்
புனர் பூசம் – உத்ராடம்
பூசம் – பூராடம்
ஆயில்யம் – மூலம்
மகம் – ரேவதி
பூரம் – உத்ரட்டாதி
உத்திரம் – உத்ரட்டாதி
அஸ்தம் – சதயம்
சித்திரை – மிருகசீரிஷம், அவிட்டம்
சுவாதி – ரோகினி
விசாகம் – கார்த்திகை
அனுஷம் – பரணி
கேட்டை – அஸ்வினி
மூலம் – ஆயில்யம்
பூராடம் – பூசம்
உத்திராடம் – புனர்பூசம்
திருவோணம் – திருவாதிரை
அவிட்டம் – மிருகசீரிஷம், சித்திரை
சதயம் – அஸ்தம்
பூரட்டாதி – உத்திரம்
உத்திரட்டாதி – பூரம்
ரேவதி – மகம்

nadi porutham
Nadi Porutham

Buy Book Rs64.00

நாடிப் பொருத்தம் – Nadi Porutham

நாடி பொருத்தம் பார்க்கும் பொழுது பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.

பார்சுவநாடி (அ) வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி

மத்தியா நாடி (அ) பித்த நாடி

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி

சமான நாடி (அ) சிலேத்தும நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி

குறிப்பு – Thirumana Porutham in Tamil

ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.

Virutcha Porutham
Virutcha Porutham

விருட்ச பொருத்தம் – Virutcha Porutham

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.

பால் இருப்பது

கார்த்திகை – அத்தி
ரோகிணி – நாவல்
பூசம் – அரசு
ஆயில்யம் – புன்னை
மகம் – ஆல்
பூரம் – பலா
உத்தரம் – அலரி
அஸ்தம் – வேலம்
கேட்டை – பிராய்
மூலம் – மா
பூராடம் – வஞ்சி
உத்ராடம் – பலா
திருவோணம் – எருக்கு
பூரட்டாதி – தேமா
ரேவதி -இலுப்பை

பால் இல்லாதது

அசுவினி – எட்டி
பரணி – நெல்லி
மிருகசீரிஷம் – கருங்காலி
திருவாதிரை – செங்கருங்காலி
புனர்பூசம் – மூங்கில்
சித்திரை – வில்வம்
சுவாதி – மருதம்
விசாகம் – விளா
அனுஷம் – மகிழ்
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
உத்ரட்டாதி – வேம்பு

குறிப்பு

பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால், மகேந்திரம் பார்க்கப்படும். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு அமைந்துள்ள இடம் இவைகள் ஆராயப்படும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More:- Thirumana Porutham in Tamil | Natchathira Porutham 

Video: அடிப்படை ஜோதிடம் கற்க

கேள்வி பதில்கள்

முக்கிய திருமண பொருத்தமாக பார்க்க வேண்டியவை எவை?

முக்கிய திருமண பொருத்தமாக நட்சத்திர பொருத்தம், ராசி பொருத்தம் மற்றும் லக்கின பொருத்தம் ஆகியவை பார்க்க வேண்டும். லக்கின பொருத்தம் என்பது பாவக ஆய்வு ஆகும். இருவர் ஜாதகத்திலும் 12 பாவகத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.

அது மட்டுமில்லாமல் ஒவ்வொருவருக்கும் தோஷம் உள்ளதா அல்லது இல்லையா என்று ஆய்வு செய்து பொறுத்த வேண்டும்.

Read More: முக்கிய திருமண பொருத்தம் | காதல் திருமண பொருத்தம்

திருமணம் செய்ய கூடாத நட்சத்திரம் எவை?

ஏற்கெனவே வேறு பதிவில் சேரக்கூடாது நட்சத்திரங்கள் பற்றி தெளிவாக கூறியுள்ளோம் லிங்க் ஐ கிளிக் செய்யவும். Star Matching Table for Marriage in Tamil

திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எவை?

ஏக நட்சத்திரமாக இருந்து பொருந்தும் நட்சத்திரங்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், திருவோணம். மற்றபடி பொதுவாக என்றால் இந்த லிங்க் ஐ கிளிக் செய்யயவும். நட்சத்திரம் பொருத்தம் அட்டவணை

எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?

அனுபவத்தில் 5க்கு மேல் இருந்தால் நல்லது. அதுமட்டும் போதாது இருவருடைய ஜாதக பாவக ஆய்வும் மேற்கொண்டு திருமணம் முடித்தல் நல்லது. நட்சத்திரம் பொருத்தம் அட்டவணை

திருமண நட்சத்திர பொருத்தம்  பார்ப்பது எப்படி?

திருமண நட்சத்திர பொருத்தம் தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும். 10 பொருத்தம்

நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?

திருமண பொருத்தத்தில் தசவித பொருத்தங்கள் உள்ளன. அவை

1) Dina Porutham,
2) Gana Porutham,
3) Mahendra Porutham,
4) Sthree Deergam,
5) Yoni Porutham,
6) Rasi Porutham,
7) Rasi Athipathi Porutham,
8) Vasya Porutham,
9) Rajju Porutham,
10) Vedai Porutham ஆகும்.

பொருந்தாத நட்சத்திரங்கள் எவ்வாறு பார்ப்பது ?

ஏற்கெனவே வேறு பதிவில் சேரக்கூடாது நட்சத்திரங்கள் பற்றி தெளிவாக கூறியுள்ளோம் லிங்க் ஐ கிளிக் செய்யவும். சேரக்கூடாத நட்சத்திரங்கள்

ஒரே ராசி ஒரே லக்னம் திருமணம் செய்யலாமா?

ஒரே ராசி ஒரே லக்கினம் திருமணம் செய்யலாம் இருப்பினும் திசா சந்தி இல்லாமலும் ரஜ்ஜு பொருத்தம்யோனி பொருத்தம் இருக்க வேண்டும். மேலும் இவருடைய கட்ட பொருத்தம் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.

ஏகராசி ஏக நட்சத்திரம் பொருத்தம் செய்யலாமா?

இந்த பதிவில் மேலே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம் ஏக நட்சத்திரம் உத்தம பொருத்தம் உள்ளவை மற்றும் மத்திம பொருத்தம் உள்ளவை அதனை ஏற்படும் பிரச்சனைகள் என்று அதனை தெளிவாக படித்து பயன் பெறவும். நன்றி

Thirumana Porutham | Thirumana Porutham in Tamil | Kalyana Porutham | Marriage Porutham in Tamil | Marriage Matching in Tamil | Jathaga Porutham in Tamil | 10 Porutham in Tamil | 12 porutham in Tamil | 11 Porutham in Tamil | திருமண பொருத்தம் | திருமண பொருத்தம் விளக்கம் | ஜாதக பொருத்தம் | கல்யாண பொருத்தம் | தசவித பொருத்தம்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்