ஸ்திர ராசிகள் மற்றும் ஸ்திர லக்னம்

இந்த பதிவில் ஸ்திர ராசிகள் மற்றும் ஸ்திர லக்னம் எவை? ஸ்திர ராசி பாதகாதிபதி யார்? என்று தெளிவாக பார்ப்போம்.

ஸ்திர ராசிகள் மற்றும் ஸ்திர லக்னம்
ஸ்திர ராசிகள் மற்றும் ஸ்திர லக்னம்

கால புருஷ தத்துவத்தின் படி மேஷம் ஒன்றாம் வீடு ஆகும். 2,5,8,11ஆம் வீட்டு ராசிகள் ஸ்திர ராசி மற்றும் ஸ்திர லக்னம் ஆகும். அதன்படி, ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்.

ஸ்திர ராசிகளின் தன்மைகள்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். ‘ஸ்திரம்’ என்றால் ‘ஒரே நிலையில் நிலையாக இருப்பது’ என்று பொருள். சரியோ! தவறோ! தன்னுடைய கொள்கையில் விடாப்பிடியாக நிலைத்து நிற்பார்கள். நிதானமாக முடிவு எடுத்தாலும் இவர்களுடைய முடிவை மாற்றிக்கொள்வது அரிதான விஷயம் ஆகும்.

ஸ்திர ராசி அல்லது ஸ்திர லக்கின காரர்கள் பெரும்பாலோருக்கு அசையா சொத்துக்கு உரிமையாளராக இருப்பார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சொந்த வீட்டிலேயே வாழும் யோகம் உண்டு. அசையா சொத்துக்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

அசையா சொத்துக்கள் மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கும். பல அடுக்குமாடி வீடு கட்டுபவர்கள், ரியல் எஸ்டேட் துறையில் பெரும் புகழ் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் செயல்பாடுகள் மிகுந்த நிதானத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கும்.

தெரிந்து கொள்க:- 27 நட்சத்திர பொது பலன்கள்27 நட்சத்திரங்கள் அதிபதி

ஸ்திர ராசி ஸ்திர லக்னம் பாதகாதிபதி

ஸ்திர ராசி மற்றும் ஸ்திர லக்னம் பாதகாதிபதி அவர்களுடைய ராசி அல்லது லக்கினத்தின் 9ஆம் வீடு அதிபதி ஆவார்கள். உதாரணமாக ரிஷப ராசி என வைத்துக்கொள்வோம். ரிஷபத்தின் 9ஆம் வீடு மகரம் ஆகும். மகர ராசியின் அதிபதி சனி ஆவார். எனவே ரிஷபத்தின் பாதகாதிபதி சனி ஆவார்.

ரிஷப ராசியின் பாதகாதிபதி சனி ஆவார்.
சிம்மம் ராசியின் பாதகாதிபதி செவ்வாய் ஆவார்.
விருச்சிகம் ராசியின் பாதகாதிபதி சந்திரன் ஆவார்.
கும்பம் ராசியின் பாதகாதிபதி சுக்கிரன் ஆவார்.

அனைத்து ராசிகளுக்கும் 2,7ஆம் வீட்டின் அதிபதிகள் மாரகாதிபதி ஆவார்கள்.

Read More

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்