ஷட்பலம் 6 வகை பலன்களை ஒருங்கே இணைத்து பார்த்து பலன் சொல்ல வேண்டும். அவை ஸ்தான பலம், திருஷ்டி பலம், திக் பலம், ஜேஷ்டா பலம், கால பலம், நைசர்க்ய பலம் என்று ஜோதிட சாஸ்திரம் வகுத்துள்ளது. அதனை நாம் விரிவாக பார்ப்போம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

ஸ்தான பலம்
ஸ்தானம் பலம் என்பது கிரகங்கள் ஆட்சி-உச்ச-நட்பு மற்றும் மூலத்திரிகோண ராசிகளிலோ, வர்கோத்தமம் பெற்றாலோ, நீச வீடு, உச்ச வீடு, கேந்திரம், திரிகோணம் என எவ்வகையில் பலமுடன் இருக்கிறது என்று ஆராய்ந்து பலன் கூற வேண்டும்.
திருஷ்டி பலம்
திருஷ்டி என்றால் பார்வை என்று பொருள். கிரகங்கள், சுபக்கிரகங்கள் மற்றும் அசுப கிரகங்களின் பார்வை பெற்றுள்ளதா என்று பார்ப்பது திருஷ்டி பலம். இங்கு சுபம் அசுபம் என்பது லக்கின ரீதியாக கணக்கிட வேண்டும்.
திக் பலம்
திக் என்றால் திசை என்று பொருள். லக்கினத்தை பொறுத்த கிரகங்கள் எங்கு அமைந்திருக்கிறது அதனை பொறுத்த திக் பலம் கணக்கிடப்படுகிறது. அவற்றை பார்ப்போம்.
புதன், குரு லக்கினத்தில் அமரும்போது திக் பலம் அடைகின்றது.
சந்திரன், சுக்கிரன் லக்கினத்திற்கு 4ஆவது வீட்டில் அமரும்போது திக் பலம் அடைகின்றன.
சனி 7வது வீட்டில் அமர்ந்து திக் பலம் அடைகின்றது.
சூரியன், செவ்வாய் 10ஆம் வீட்டில் அமரும்போது திக் பலம் அடைகின்றன.
ஜேஷ்டா பலம்
ஜேஷ்டா பலத்தை கிரகங்களின் பயண அடிப்படையில் கணக்கிடுவதாகும். அவற்றை பார்ப்போம்
சூரியன், சந்திரன் உத்தராயண காலத்திலும், ஏனைய கிரகங்கள் வக்கிரம் பெரும் காலங்களில் ஜேஷ்டா பலம் அடைகின்றது.
இதனை பொறுத்து பலன் கூற வேண்டும்.
கால பலம்
பகல்-இரவு என இரு காலங்களில் கிரகங்கள் வலிமையை ஆய்வு செய்ய வேண்டும்.
சூரியன், குரு, சுக்கிரன் பகலில் கால பலம் பெறுகிறார்கள்.
சந்திரன், செவ்வ்வாய், சனி இரவில் கால பலம் பெறுகிறார்கள்.
புதன் பகல், இரவு என இரண்டு காலங்களிலும் கால பலம் பெறுகிறார்கள்.
நைசர்க்ய பலம்
ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் அமரும்போது எந்த கிரகம் வலிமையுடன் இருக்கிறது என்பதை நைசர்க்ய பலம் கொண்டு ஆராய வேண்டும். அவற்றை பார்ப்போம்
சனியை விட செவ்வாய் பலம் அதிகம்
செவ்வாயை விட புதன் பலம் அதிகம்
புதனை விட குரு பலம்
குருவை விட சுக்கிரன் பலம்
சுக்கிரனை விட சந்திரன் பலம்
சந்திரனை விட சூரியன் பலம்
சூரியனை விட ராகு பலம்
ராகுவை விட கேது பலம் அதிகம்
இந்த அடிப்படையில் பலத்தை கண்டறிந்து பலன் கூற வேண்டும்.
தெரிந்துகொள்க
- ஆத்மகாரகன் என்றால் என்ன?
- அஸ்தமனம் என்றால் என்ன?
- வக்கிரம் என்றால் என்ன?
- பரிவர்த்தனை யோகம்
- கிரகயுத்தம் என்றால் என்ன?
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்