Skip to content
Home » ஜோதிடம் » கோச்சாரம் என்றால் என்ன?

கோச்சாரம் என்றால் என்ன?

கோச்சாரம்
கோச்சாரம்

இந்த பதிவில் கோச்சாரம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது என்று பார்ப்போம். கிரகங்களின் அன்றாட இயக்கமே கோச்சாரம் ஆகும். லக்கினம் என்பது உயிர், சந்திரன் என்பது உடல், மனம் என்று பொருள். இந்த உலகில் ஏற்படும் நன்மை தீமைகளால் அதிகம் அனுபவிப்பது உடலும் மனமும் தான், அதனால் சந்திரனை வைத்தே கோச்சார பலன்களை பார்க்க வேண்டும்.

நம் வாழ்வில் சுய ஜாதகம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு கிரக கோச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி அன்றாடம் கிரகங்கள் இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. அதற்கு கிரக பெயர்ச்சி என்று பெயர். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி. நாம் ஜாதகம் பார்க்கும் போது, நடப்பில் உள்ள கிரக அமைப்பு பொறுத்து சொல்லும் பலனே கோச்சார பலன் ஆகும்.

தின பலன், வார ராசி பலன், மாத ராசிபலன், ஆண்டு ராசி பலன்கள் அனைத்தும் கிரக கோசாரத்தை பொறுத்து தான் சொல்லப்படுகிறது.

தினம் நகரக் கூடிய கிரகங்களை அடிப்படையாக வைத்து தின பலன்கள் சொல்லப்படுகின்றன. உதாரணமாக சந்திரனின் இயக்கத்தை வைத்து தின பலன் கூறப்படுகிறது. சூரியன் சுக்கிரன் புதன் வைத்து மாத ராசிபலன்கள் கூறப்படுகிறது. குரு, சனி பெயர்ச்சி வைத்து வருட பலன்கள் கூறப்படுகிறது.

ஒரு ஜாதகத்தைப் பொறுத்தளவில் கோசாரம் பலன்கள் வேறு மாதிரியாக இருக்கும், தசாபுத்தி வேறுமாதிரியாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் தெளிவாக ஆராய்ந்து பார்த்தால் தசா புத்தி பலனும் கோச்சார பலனும் ஒரே மாதிரியாகவே தான் இருக்கும். ஏனெனில் விதி என்பது எப்போதும் மாறாது. ஜோதிடத்தில் பல முறைகள் இருந்தாலும் ஒரே பலனைத் தான் தரும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்