Skip to content
Home » ஜோதிடம் » வேதை பொருத்தம்

வேதை பொருத்தம்

இந்த பதிவில் வேதைப் பொருத்தம் என்றால் என்ன? அதனை பார்ப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்..திருமண பொருத்தம் பார்ப்பதில் வேதை பொருத்தம் என்பது ஆண் பெண் இருவரின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை அறிந்து அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப்பொருத்தமாகும்.

வேதை பொருத்தம்
வேதை பொருத்தம்

வேதை என்றால் தடை அல்லது இடைஞ்சல் என்று பொருள். 27 நட்சத்திரங்களுக்கும் அதற்கான வேதை நட்சத்திரங்கள் உள்ளன. கீழ் கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் மற்றும் வேதையை ஏற்படுத்தும் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக அஸ்வினிக்கு கேட்டை வேதையை ஏற்படுத்தும் அதனால் பொருத்தம் செய்ய கூடாது. அதேபோல மற்ற நட்சத்திரங்களையும் கணக்கிட வேண்டும்.

குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திரங்களுக்கு வேதை இருந்தால் வேதைப்பொருத்தம் இல்ல என்று பொருள் வேதை இல்லாத நட்சத்திரங்கள் பொருத்தம் உண்டு என்று பொருள்.

நட்சத்திரம் – வேதை நட்சத்திரம்

அசுவினி – கேட்டை
பரணி – அனுஷம்
கார்த்திகை – விசாகம்
ரோகிணி – சுவாதி
மிருகசீரிஷம் – சித்திரை, அவிட்டம்
திருவாதிரை – திருவோணம்
புனர் பூசம் – உத்ராடம்
பூசம் – பூராடம்
ஆயில்யம் – மூலம்

மகம் – ரேவதி
பூரம் – உத்ரட்டாதி
உத்திரம் – உத்ரட்டாதி
அஸ்தம் – சதயம்
சித்திரை – மிருகசீரிஷம், அவிட்டம்
சுவாதி – ரோகினி
விசாகம் – கார்த்திகை
அனுஷம் – பரணி
கேட்டை – அஸ்வினி

மூலம் – ஆயில்யம்
பூராடம் – பூசம்
உத்திராடம் – புனர்பூசம்
திருவோணம் – திருவாதிரை
அவிட்டம் – மிருகசீரிஷம், சித்திரை
சதயம் – அஸ்தம்
பூரட்டாதி – உத்திரம்
உத்திரட்டாதி – பூரம்
ரேவதி – மகம்

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்