வாஸ்து சாஸ்திரம்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் (Vastu for House in Tamil) – Vastu Sasthiram – Vastu feet for House in Tamil – பொதுவாக நம்மில் அனைவருக்கும் வாழ்நாளில் எப்படியாவது சொந்த வீடு கட்டி வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக வாழ்க்கையில் சிறுக சிறுக பொருள் சேர்த்து வீடு கட்டுவது நிம்மதியாக வாழ்வதற்கு மட்டுமே. அவ்வாறு சிரமப்பட்டு கட்டிய வீட்டில் பிரச்சினைகள் இல்லாமற் இருக்க வாஸ்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனை இந்த பதிவில் பார்ப்போம்.

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் – Vastu Sastram in Tamil

ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் 4ஆம் பாவத்தின் அடிப்படையிலே வீடு அமையும். 4ஆம் பாவத்தில் உள்ள கிரகங்கள், 4ஆம் பாவதிபதி, 4ஆம் பாவதிபதி உள்ள இடம் என அதற்கு தகுந்தது போலவே ஒருவருக்கு வீடு அமையும். வீடு வாங்கும்முன் நல்ல ஜோதிடரிடம் சென்று ஆலோசிக்கவும். வாஸ்துவை பற்றி பார்ப்போம்.

இயற்கையின் ஐந்து கூறுகளான நெருப்பு, நிலம், காற்று, நீர் மற்றும் ஆகாயம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் கூடி வரும். இந்த இயற்கையின் சமநிலையே வாழ்க்கைக்கு வளத்தை கொண்டுவருகிறது.

வீடு கட்டுவதற்கு வாஸ்து மூலம் வீட்டில் வசிப்பவர்களுக்கு பிரபஞ்சத்திலிருந்து நேர்மறையான ஆற்றல் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. தற்போது கட்டப்படும் பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பஞ்சபூதங்களை கருத்தில் கொண்டு கட்டப்படுகின்றன. பஞ்சபூதங்களின் சமநிலை தவறும் போது நம் வீட்டில் பிரச்னைகளும் சிக்கல்களும் ஏற்படும்.

வாஸ்து சாஸ்திரப்படி எந்த அறைகள் எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.

Vastu for House in Tamil – Vastu Sasthiram in Tamil

வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு வீடு கட்டும்பொழுது வடக்கு திசையில் தெற்கு திசையை விட அதிக காலி இடம்(freespace) விட்டு வீடு கட்ட வேண்டும்.

  • வீட்டின் சுற்று சுவர் அல்லது வீட்டின் மாடி சுவர்
    தென்மேற்கு > தென் கிழக்கு > வட மேற்கு > வட கிழக்கு
  • ​பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்
  • ​துளசி மாடம் வாஸ்து சாஸ்திரம்
  • ​விளக்கு ஏற்றும் திசை
  • ​படுக்கையறை வாஸ்து சாஸ்திரம்
  • குளியலறை வாஸ்து சாஸ்திரம்
  • ​தூங்கும் திசை
  • ​சமையலறை வாஸ்து சாஸ்திரம்
  • ​போர் அல்லது கிணறு
  • ​குளியல் அறை வாஸ்து சாஸ்திரம்
  • ​படிக்கட்டுகள்
  • ​மரங்கள்

50 அடி வரை பொதுபலன் – Vastu feet for House in Tamil

6 அடி – நன்மை உண்டாகும்
7 அடி – தரித்திரம் பிடிக்கும்
8 அடி – மிகுந்த பாக்கியம் உண்டாகும்
9 அடி – மிகுந்த பீடை ஏற்படும்.
10 அடி – பிணியில்லாத குறைவில்லா வாழ்வு
11 அடி – பாக்கியம் சேரும்
12 அடி – செல்வம் குலைந்து போகும்
13 அடி – எல்லோரும் பகைவராவர்
14 அடி – பெருநஷ்டம், சஞ்சலங்கள் ஏற்படும்
15 அடி – காரியம் தடை
16 அடி – மிகுந்த செல்வமுண்டு
17 அடி – அரசனைப்போல் பாக்கியஞ்சேரும்

18 அடி – அமைந்த மனை பாழாகும்
19 அடி – மனைவி மக்கள் மரணம்
20 அடி – இன்பம் தரும் இராஜயோகம் கிட்டும்
21 அடி – கல்வி சிறக்கும் பசுவிருத்தி உண்டாகும்
22 அடி – மகிழ்ச்சி பொங்கும், எதிரி அஞ்சுவான்
23 அடி – நோயுடன் வாழ்வான்
24 அடி – வயது குன்றும் மத்திம பலன்
25 அடி – தெய்வ பலன் கிட்டாது
26 அடி – இந்திரனை போல் வாழ்வார்
27 அடி – மிக்க செல்வத்துடன் வாழ்வார்
28 அடி – செல்வமும், தெய்வ அருளும் கிட்டும்.

29 அடி – பால் பாக்கியம், செல்வம் சேரும்
30 அடி – லட்சுமி கடாச்சம் கிடைக்கும்
31 அடி – இறைவன் அருள் கிடைக்கும்
32 அடி – திருமால் (முகுந்தன்) அருள் பெற்று வாழ்வார்.
33 அடி – நன்மை உண்டு
34 அடி – குடிகள் விட்டொழியும் (தீமை பயக்கும்)
35 அடி – லட்சுமி கடாச்சம் உண்டு
36 அடி – அரசரோடு அரசாள்வார்
37 அடி – இன்பமும் இலாபமும் உண்டு
38 அடி – பிசாசுகள் குடியிருக்கும்
39 அடி – இன்பமும் சுகமும் உண்டாகும்
40 அடி – சலிப்புண்டாகும் (எப்போதும் சலிப்புடன் இருப்பார்)
41 அடி – இன்பமும் செல்வமும் உண்டாகும்
42 அடி – லட்சுமி குடியிருப்பால்
43 அடி – தீங்குண்டாகும்

44 அடி – கண் போகும்
45 அடி – சற்புத்திரர் உண்டு, சகல பாக்கியமும் உண்டாகும்
46 அடி – வீடு விட்டொழியும் தீமை உண்டாகும்
47 அடி – எந்த நலம் வறுமையாகவே இருக்கும்
48 அடி – வீட்டில் பிரச்சனை ஏற்படும்
49 அடி – மூதேவி வாசம் செய்வாள்
50 அடி – பால் பாக்கியம்

50 அடிக்கு மேல்

52 அடி – தான்யம் பெருகும்
56 அடி – வம்சம் பெருகும்
60 அடி – செல்வம் பெருகும்
64 அடி – சகல செல்வங்களும் சேரும்
66 அடி – சற்புத்திரர் பலன் கிடைக்கும்
68 அடி – இலாபம் உண்டாகும்
71 அடி – பெரும்புகழ் யோகம் சித்திக்கும்
72 அடி – செல்வம் சேரும்
73 அடி – குதிரைகள் கட்டி ஆட்சி செய்வர்
74 அடி – மிகுந்த செல்வம் உண்டாகும்
77 அடி – யானைகள் கட்டி வாழ்வான்
79 அடி – காளை விருத்தி
80 அடி – மகாலட்சுமி வாசம் செய்வாள்

84 அடி – சகல சௌபாக்கியமும் கிடைக்கும்
85 அடி – செல்வங்கள் பெருகி செல்வந்தராக வாழ்வார்
88 அடி – சௌபாக்கியத்துடன் வாழ்வார்
89 அடி – பல வீடுகள் கட்டி வாழ்வர்
90 அடி – யோகம் கிட்டும்
91 அடி – சகல சம்பத்தும் கிடைக்கும்
92 அடி – சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்
93 அடி – கடல் கடந்து பொருள் ஈட்டுவர்
95 அடி – வெளியூரிலிருந்து பணம் சேர்ப்பர்
96 அடி – அயலதேசம் செல்வார்
97 அடி – செல்வந்தராக வாழ்வார்
98 அடி – பல தேசங்கள் செல்வர்
99 அடி – ராஜ்ஜியம் ஆழ்வார்
100 அடி – இறைவன் அருள்பெற்று சமுதாயத்தில் சிறந்த மனிதனாக போற்றப்படுவர்.

நன்றி! வாழ்க வளமுடன்!

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்