Palli Vilum Palan in Tamil
பல்லி விழும் பலன்(Palli Vilum Palan in Tamil): நம் உடலின் எந்த பாகத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன் மற்றும் அதைப்பிறகு நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை பார்ப்போம்…
நம் நாட்டில் விலங்குகளை கொண்டு பல சாஸ்திரம் சம்பிரதாயங்கள் கடை பிடிக்கப்படுகின்றன அதிலும் பசு மாடு, காகம், நாய், பல்லி, கழுதை முக்கியத்துவம் வாய்ந்தவை.
அதிலும் நாம் வீட்டை விட்டு செல்லும்போதும் ஒரு சுபகாரியத்துக்கான வேலை தொடங்க செல்லும்போதும் பசுமாடு எதிரில் வந்தால் நல்லது, அதுபோல காக்கை நம் வீட்டின் மேல் அமர்ந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள் என்று கூறுவர். காக்கைக்கு உணவு வைப்பது நம் முன்னோருக்கு உணவு அளிப்பது போல எண்ணி முக்கிய திதி நாட்களிலும் சனி கிழமைகளிலும் உணவு வைப்பது பிரதானம். இந்த பதிவில் பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுந்தால் என்ன பலன் என்று சாஸ்திர விதிகள் கூறியுள்ளதை பார்ப்போம்.

Palli Vilum Palan in Tamil
அந்த வகையில் பல்லி நம் உடம்பின் மீது விழுவதை வைத்தும் பலன்கள் சொல்லப்படுகின்றன. உடலில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
பல்லி விழும் பலன் – Palli Vilum Palan in Tamil
தலையில் பல்லி விழுந்தால்
பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சகுணத்தை குறிக்கின்றது. தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களிடம் இருந்து அதிகமான எதிர்ப்பு உண்டாகும். மன நிம்மதியை இழக்க நேரிடும். அவர்களின் உறவினருக்கோ அல்லது பழகியவருக்கோ மரணம் ஏற்படலாம்.
நெற்றியில் பல்லி விழுந்தால்
நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் நல்ல பெயர், புகழ், கீர்த்தி கிட்டும். வலது நெற்றியில் விழுந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும்.
தலை முடியில் பல்லி விழுந்தால்
பல்லி தலையில் நேரடியாக விழாமல், தலை முடியில் மட்டும் லேசாக உரசி கீழே விழுந்தால் நல்ல செய்திகள் வந்து சேரும்.
முகத்தில் பல்லி விழுந்தால்
முகத்தில் பல்லி விழுந்தால், அவர்கள் வீட்டிற்கு உறவினர்களின் வரவிருப்பதை குறிக்கும்.
Palli Vilum Palan – புருவம்
புருவத்தில் பல்லி விழுந்தால், ராஜயோக பதவி என்னும் உதவி கிடைக்கும் வாய்ப்புகள் அமையும்.
கண்களில் பல்லி விழுந்தால்
கண்கள் அல்லது கண்ணங்களின் பல்லி விழுந்தால், ஏதேனும் ஒரு குற்றத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படக் கூடும் என்பது பொருள்.
இடது கை மற்றும் இடது கால்களில் பல்லி விழுந்தால்
இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
வலது கை மற்றும் கால்களில் பல்லி விழுந்தால்
வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுதும் அசௌகரியம் ஏற்படும். உடல் மற்றும் மனசோர்வுடன் காணப்படுவீர்கள்.
Palli Vilum Palan பாதத்தில் பல்லி விழுந்தால்
பாதத்தில் பல்லி விழுந்தால், வரும் காலத்தில், நீங்கள் வெளிநாடு பயணம் செய்யும் காலம் அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும்.
தொப்புள் பல்லி விழுந்தால்
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், போன்ற இரத்தினங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
தொடையில் பல்லி விழுந்தால்
தொடையில் பல்லி விழுந்தால், அவர்களுடைய பெற்றோருக்கு வருத்தம் ஏற்படும்.
Palli Vilum Palan மார்பில் பல்லி விழுந்தால்
வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் உண்டு. இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு இருக்கும் நோய் குணமாகி சுகம் கிடைக்கப் பெறும்.
கழுத்தில் பல்லி விழுந்தால்
இடது கழுத்தில் பல்லி விழுந்தால் காரிய சித்தி உண்டாகும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் பகை உண்டாகும்.
நம் உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் முதலில் உடனே சென்று குளித்து விடுங்கள். குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள். கோயில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி இறைவனை வழிபடுங்கள். தலையில் விந்தவர்கள் மட்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் ஒரு நாள் முழுதும் வீட்டிலோ அல்லது கோயிலிலோ இருக்க வேண்டும். யாரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
நன்றி! வணக்கம்! வாழ்க வளமுடன்!.
Read More:- Thirumana Porutham in Tamil
Video: Learn Basic Astrology in Tamil