வசியப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
வசியப் பொருத்தம்(Vasya Porutham) – இந்த பதிவில் வசிய பொருத்தம் என்றால் என்ன? அதனை பார்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம். 10 திருமண பொருத்தங்களில் முக்கியமான ஒன்றாகும். ஆனால் பெரும்பாலும் வசிய பொருத்தம் எளிதாக அமைந்து விடாது. 100 ஜாதகங்களுக்கு ஏதாவது ஒன்று தான் அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இணைந்து இருப்பதற்கு இந்த வசிய பொருத்தம் சிறப்பாக இருப்பது நல்லது..

வசியப் பொருத்தம்
வசியப் பொருத்தம் அமையாதவர்கள் என்ன செய்யலாம்?
ஏற்கெனவே கூறியதுபோல் வசிய பொருத்தம் பெருபாலோருக்கு அமைவது இயலாது. அவ்வாறு வசியபொருத்தம் அமையாதவர்கள் ராசி பொருத்தம் அல்லது ராசி அதிபதி பொருத்தம் பார்த்து அது பொருந்தினால் போதுமானது.
Read More – ராசி பொருத்தம் – ராசி பொருத்தம் விளக்கம் – திருமண பொருத்தம்
கீழே பெண் ராசிக்கு பொருந்தும் ஆண் ராசிகள் வசிய பொருத்தம் கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன்பெறவும்.
பெண் ராசி ஆண் ராசி
மேஷம் சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் கடகம், துலாம்
மிதுனம் கன்னி
கடகம் விருச்சிகம், தனுசு
சிம்மம் மகரம்
கன்னி ரிஷபம், மீனம்
துலாம் மகரம்
விருச்சிகம் கடகம், கன்னி
தனுசு மீனம்
மகரம் கும்பம்
கும்பம் மீனம்
மீனம் மகரம்
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வசியபொருத்தம் உள்ளவை மற்றவை பொருத்தம் இல்லை என்று பொருள்.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Read More:-
- நட்சத்திர பொருத்தம்
- ராசி பொருத்தம்
- ராசி அதிபதி பொருத்தம்
- திருமண பொருத்தம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
- ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Read All Astrology Articles in English