Skip to content
Home » ஜோதிடம் » ராசி பொருத்தம்

ராசி பொருத்தம்

திருமண ராசி பொருத்தம் (Rasi Porutham in Tamil) – ஜோதிட முறையில் திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திர பொருத்தம், ராசி, லக்ன பொருத்தம் என இருவரின் ஜாதக கட்டம் மற்றும் பாவக ஆய்வு போன்றவைகளைக் ஆய்வு செய்து திருமண பொருத்தங்கள் செய்ய வேண்டும்.

பொதுவாக பெண் ஜாதகத்தை முதன்மையாக வைத்து ஆண் ஜாதகங்களை பொருத்தி பார்க்க வேண்டும். நட்சத்திர பொருத்தம் அடிப்படையில் 10 பொருத்தங்கள் முக்கியமானவை அதில் ராசிப் பொருத்தம் என்றால் என்ன? அதை எப்படி பார்ப்பது? என்று இந்த பதிவில் விளக்கமாக பார்ப்போம்.

திருமண ராசி பொருத்தம்
திருமண ராசி பொருத்தம்

Read More:- ராகு கேது தோஷ திருமண பொருத்தம் | திருமண பொருத்தம் | ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்

ராசி பொருத்தம் விளக்கம் – Rasi Porutham for Marriage Tamil

ராசிப் பொருத்தம் எப்படி பார்ப்பது என்று பார்ப்போம். பெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணும்பொழுது

6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
8-வது ராசி ஆகாது.
7-வது ராசியானால் சுபம்.
அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது.
2, 6, 8, ஆம் ராசிகள் ஆகாது.
1, 3, 5, 12 வது ராசிகள் வந்தால் மத்திமம் .
7, 9, 10, 11 வது ராசியாக வந்தால் உத்தமம்.

என்னுடைய அனுபவத்தில் பெண் ராசியில் இருந்து எண்ணும்பொழுது ஆண் ராசியானது 3, 11 ஆக வந்தால் மிகவும் நல்லது.

சஷ்டாஷ்டக தோஷம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். சஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகங்களை பொருத்துவது சிறப்பை தராது.

Read More:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்