ராசி அதிபதி பொருத்தம்
ராசி அதிபதி பொருத்தம் விளக்கம்(Rasi Athipathi in Tamil) – திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது ராசி அதிபதி பொருத்தம் 10 முக்கிய பொருத்தங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது அதனை எவ்வாறு பார்ப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்..

ராசி அதிபதி பொருத்தம்
இந்த பொருத்தம் இருந்தால் குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும் மற்றும் நல்ல புத்திரர்கள் அமைவார்கள்.
ராசி அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.
ராசி அதிபதிகள் ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்
ராசி அதிபதிகள் ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்
ராசி அதிபதிகள் ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை
ராசி அதிபதிகள் இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.
இந்த பதிவு புரியவில்லை என்றால் கீழே உள்ள ராசி அதிபதி அட்டவணையை பார்க்கவும். அதில் பெண்ணின் ராசி அதிபதி ஆணின் ராசி அதிபதிக்கு நட்பு ஆனால் உத்தமம் சமம் அனால் மத்திமம் பகை என்றால் பொருந்தாது.
உதாரணமாக, பெண்ணின் ராசி மேஷம் என வைத்துக்கொள்வோம் மேஷத்தின் ராசி அதிபதி செவ்வாய் ஆவார். கீழ் உள்ள அட்டவணைப்படி செவ்வாய்க்கு சந்திரன், சூரியன், குரு நட்பு ஆகும் அதனால் உத்தம பொருத்தம் உண்டு. சுக்கிரன் மற்றும் சனி சமம் கிரகம் ஆதலால் மத்திமம் பொருத்தம் உண்டு. புதன் கிரகம் பகை ஆதலால் புதனின் ராசிகளான மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு ராசி அதிபதி பொருத்தம் இல்லை.
ராசி அதிபதிகள் | நட்பு | சமம் | பகை |
சூரியன் | சந்திரன், செவ்வாய், குரு | புதன் | சுக்கிரன், சனி |
சந்திரன் | சூரியன், புதன் | செவ்வாய், குரு சுக்கிரன் சனி |
இல்லை |
செவ்வாய் | சந்திரன், சூரியன், குரு | சுக்கிரன் சனி |
புதன் |
புதன் | சூரியன், சுக்கிரன் | செவ்வாய் குரு |
சந்திரன் |
குரு | சூரியன், சந்திரன், செவ்வாய் | சனி | சுக்கிரன்,புதன் |
சுக்கிரன் | புதன், சனி | செவ்வாய் குரு |
சூரியன், சந்திரன் |
சனி | புதன், சுக்கிரன் | குரு | சூரியன், சந்திரன், செவ்வாய் |
ராகு கேது எந்த ராசிக்கும் அதிபதி இல்லை என்பதால் அவை இந்த பொருத்தத்தில் இடம் பெறாது.
ராசி அதிபதி என்றால் என்ன?
ஜோதிடத்தில் மொத்தம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் அதனை இயக்கம் கிரகங்கள் உள்ளன, அவர்களே ராசி அதிபதி ஆவார்கள்(ராகு கேது தவிர)
செவ்வாய் – மேஷம், விருச்சிகம் ராசிக்கு அதிபதி ஆவார்
புதன் – மிதுனம், கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்
குரு – தனுசு, மீனம் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்
சுக்கிரன் – ரிஷபம், துலாம் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்
சனி – மகரம், கும்பம் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்
சூரியன் – சிம்மம் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்
சந்திரன் – கடகம் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார்
Read More:-
- திருமண பொருத்தம்
- நட்சத்திர பொருத்தம்
- ராசி பொருத்தம் விளக்கம்
- மகேந்திர பொருத்தம்
- யோனி பொருத்தம்
- ஏக நட்சத்திரம் திருமண பொருத்தம்
- ராகு கேது தோஷ திருமண பொருத்தம்
- Read All Astrology Articles in English
- வாஸ்து சாஸ்திரம் | மனையடி சாஸ்திரம்