யோனிப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

யோனி பொருத்தம் என்றால் என்ன? – திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது 10 முக்கிய பொருத்தங்களில் ஒன்றாக யோனிப் பொருத்தம்(Yoni Porutham in Tamil) பார்க்கப் படுகிறது. தம்பதிகளின் தாம்பத்திய சுகம் (ஒற்றுமைக்காக) பார்க்கப்படுகிறது.

Yoni porutham
யோனி பொருத்தம்

யோனிப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமல் இருந்தால் உத்தமம் ஆகும். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் பொருந்தாது.

இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக்கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாக அமைவதற்கு ஆதாரமாகும். அவை பின் வருமாறு.

அசுவினி – ஆண் குதிரை
பரணி – ஆண் யானை
கார்த்திகை – பெண் ஆடு
ரோகிணி – ஆண் நாகம்
மிருகசீரிஷம் – பெண் சாரை
திருவாதிரை – ஆண் நாய்
புனர்பூசம் – பெண் பூனை
பூசம் – ஆண் ஆடு
ஆயில்யம் – ஆண் பூனை

மகம் – ஆண் எலி
பூரம் – பெண் எலி
உத்தரம் – எருது
அஸ்தம் – பெண் எருமை
சித்திரை – ஆண் புலி
சுவாதி – ஆண் எருமை
விசாகம் – பெண் புலி
அனுஷம் – பெண் மான்
கேட்டை – கலைமான்

மூலம் – பெண் நாய்
பூராடம் – ஆண் குரங்கு
உத்திராடம் – மலட்டு பசு
திருவோணம் – பெண் குரங்கு
அவிட்டம் – பெண் சிங்கம்
சதயம் – பெண் குதிரை
பூரட்டாதி – ஆண் சிங்கம்
உத்திரட்டாதி – பாற்பசு
ரேவதி – பெண் யானை

குறிப்பு:- இவற்றில்

பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி

ஆகியவை ஜென்ம பகை என்பதால் சேராது.

Read More:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்