Skip to content
Home » ஜோதிடம் » யோகினி அகஸ் என்றால் என்ன?

யோகினி அகஸ் என்றால் என்ன?

ஜோதிடத்தில் யோகினி மற்றும் அகஸ் என்றால் என்ன? – யோகினி என்றால் பிரயாணம் துவங்கும்போது யோகினி நிற்கும் திசைக்கு எதிர் திசையிலும் வலது திசையிலும் செல்வதை தவிர்க்க வேண்டும். அகஸ் என்பது ஒரு நாளின் பகல் பொழுது 30 நாழிகை ஆகும்.

யோகினி அகஸ் என்றால் என்ன
யோகினி அகஸ் என்றால் என்ன

யோகினி திசை அட்டவணை

வளர்பிறை பிரதமை, ஏகாதசி – கிழக்கு
வளர்பிறை துவிதியை, துவாதசி – வடக்கு
வளர்பிறை திருதியை, திரயோதசி – தென்கிழக்கு
வளர்பிறை சதுர்த்தி, சதுர்தசி – தென்மேற்கு
வளர்பிறை பஞ்சமி, பௌர்ணமி – தெற்கு
வளர்பிறை சஷ்டி – மேற்கு
வளர்பிறை சப்தமி – வடமேற்கு
வளர்பிறை அஷ்டமி – வடகிழக்கு
வளர்பிறை நவமி – ஆகாயம்
வளர்பிறை தசமி – பூமி

தேய்பிறை – சஷ்டி – கிழக்கு
தேய்பிறை – சப்தமி – வடக்கு
தேய்பிறை – அஷ்டமி – தென்கிழக்கு
தேய்பிறை – நவமி – தென்மேற்கு
தேய்பிறை – தசமி – தெற்கு
தேய்பிறை – பிரதமை, ஏகாதசி – மேற்கு
தேய்பிறை – துவிதியை, துவாதசி – வடமேற்கு
தேய்பிறை – திருதியை, திரயோதசி – வடகிழக்கு
தேய்பிறை – சதுர்த்தி, சதுர்தசி – ஆகாயம்
தேய்பிறை பஞ்சமி, அமாவாசை – பூமி

அகஸ் என்றால் என்ன?

அகஸ் என்பது பகல்பொழுதின் அளவை குறிக்கும் ஒரு நாளுக்கு 60 நாழிகை எனில் பகல் பொழுதும் 30 நாழிகை அகஸ் என அழைப்பர். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உள்ள கால அளவே அகஸ் ஆகும்.

தெரிந்துகொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்